பேரின்பம் உன்னுள்ளே.
நீயே தெய்வம் என்றுணர். உன்னையே நீ ஒளியாக தரிசனம் செய்.

539 - 1007 திருமந்திர விளக்கம்.

 

24. பொறையுடைமை :    (உடலில் உள்ள அமுதம் வற்றிடாமல் பொறுத்தல்.)

 
0539: பொறுமையுடன் இருந்தால் அமுதம் சுரக்கும் :
தான் பற்றியதை விடாமல் கிடக்கும் பல்லியைப் போல், மெய்யான நெறியைப் பற்றிவழுவாமல் நிற்கும் யோகியர் நெஞ்சில், மெய்ப்பொருளுடன் கூட வேண்டும் என்ற எண்ணமும் எண்ணியதை விடாது இருக்கும்.  அது மெய்ப் பொருளை எண்ணி நாக்கினை அண்ணாக்குப் பகுதியில் செலுத்தி  மூக்கையும் நாக்கையும் செயல் நீங்கும்படி செய்யும். அங்ஙனம் இருந்தால் உயிர்வளியான பிராணவாயு கீழ் நோக்கிச் செல்வது தடைப்படும்.  மனமும் ஒடுங்கி இருக்கும்.  அப்போது அமுதம் சுரக்கும். 
அதுவே பொறுமையாகும்.     
 
0540: பொறுமையுடைய ஞானியின் மேன்மை :
பாலைப் போன்ற வெண்மையான ஒளியில் விளங்கும் சிவனது திருவடியை வணங்கி உய்வதற்காக,  அவனது கொலுமண்டபத்தைச் சூழ்ந்த அழிவற்ற தேவரிடம், "பொறுமையுடைய இந்த ஞானி திருமாலுக்கும் ஆதிப்பிரமனுக்கும் தலைவன்.  உலகத்துக்கும் மிகவும் சிறப்புடையவன் என்று இவ்வாறு
சிவபெருமான்கூறியருளினான்.
 
0541: பொறுமையுடையவர் தேவ தேவனை அடையலாம் :
மெய்ஞ்ஞானம் கை கூடப் பெற்றவர்க்கு மன்னர் ஆவோர் அத்தகைய ஞானியைக் கருவி கரணங்களான படை சூழ்ந்து அவர் ஏவல் வழிசெய்ய, அவரது உடலை மாற்றிப் படைக்கும் தேவ தேவனை, அவர் மற்ற
வழியை நீத்து ஞானத்தால் அணுகி அருள் கூட முடியும்.   
 
0542: சிவன் ஆன்மாக்களை அருள் கொள்ளும் விதம் :
உயிர்களின் பக்குவத்துக்கு ஏற்றபடி அவரது உடலிலும் உள்ளத்திலும் பலவகையான இன்ப துன்பங்களை அனுபவிக்கச் செய்து சிவன் பக்குவம் செய்வான்.  மூலாதாரத்தில் இருந்து ஆதார-நிராதாரக் கலைகளில் ஆடும் கூத்தப் பெருமானுக்கு அந்தக் கூத்தின் பயனாக அளவில்லாத ஒருமைப்பாடு
உண்டாகும்.
 
25. பெரியாரைத் துணைக் கோடல். 
(ஞானம் மிக்கவரைத் துணையாகக் கொள்ளுதல்.)
 
0543: பெரியாரைத் துணைக் கொண்டு இறைவனை அடைவேன் :
தலப் பயணம் செய்பவருடன் சேர்ந்து யானும் தலப் பயணம் செய்வேன்.  பாடுபவரின் ஒலியைச் செவி வழியே கேட்டு இன்பம் அடைந்து வாழ்வேன்.  உள்ளத்தில் தேடி அடைய வல்லார்க்கு அருளும் மகாதேவனோடு பொருந்தும் வல்லமை உடையார் திருவடியை நானும் பொருந்தியிருப்பேன்.
 
0544: நெஞ்சே என்னுடன் வா !
படரக் கொம்பு இல்லாமல் துவண்டு தீயில் இடப்பட்ட தளிரைப் போல் வாட்டம் அடையினும் மன உறுதி உடையவர் உள்ளத்தில் அன்பு வைத்து அதன் வழிச்செல்வதில்லை.   நெஞ்சமே! நீ தனியே துன்பப்பட்டிருந்து என்ன செய்யப் போகின்றாய்?   பெரியாரை நாடி  நான் போகும் போது என்னோடு வருவாய்!
 
0545: சான்றோர் கூட்டுறவு பேரின்பத்தை நல்கும் :
உண்மையை அறியும் சான்றோர் தேவ தேவனை விரும்பி அவனுடன் பொருந்தி இருப்பர்.  அன்னார் ஆன்ம தத்துவம் வித்தியாதத்துவம் என்பனவற்றைக் கடந்து சிவதத்துவத்தில் விளங்குவர்.  நல்ல நெறியில் ஒழுகி அடைந்தவர்க்கும் உபதேசம் செய்கின்ற பெரியோருடன் கூடியிருப்பது பேரின்பமாகும்.
 
0546: சிவநெறியை அளிக்கும் :
பெரியோருடன் கூடியவர் சிவபெருமானுக்கு உறவினராய் உலகநடையில் ஒழுகுபவர்களால் புகழப்படாதவனான என் ஐயனின் திருவடியை அடைவர். பெரியார் கூட்டத்தால் - மௌனமாய் ஆன்மாவில் சிவனைத் துதிப்பவர்-அருள் செய்கின்ற  சிவனை அடைந்து அச்சிவநெறியில் இரண்டறக் கலத்தலும்  நிகழும்.
 
0547: சிவபுரம் சேர்க்கும் :
எல்லாம் உடையவனான சிவபெருமானின் அடியார்க்கு அடியவராய் உள்ளவருடன் கூடிச் சிவச் சோதியில் பொருந்திச் சிவபுரத்தில் பொருந்தி நின்றவர், என்னைக் கண்டதும் சிவபெருமானிடம் விண்ணப்பம் செய்ய, சிவபெருமான் என்னை அழைத்து வரும்படி பணிக்கக், கடைவாயிலில் உள்ளவர் அடைக்கல முத்திரை காட்டி அழைத்தனர்.
 
0548: பெரியார் துணையைப் பெற்றேன் !
சான்றோரைக் கூடவல்ல அருமையானவன் அகரம் முதலிய பதினாறு கலை  ஞானத்துள் விளங்குபவன் ஆவான்.   பெருமையுடைய ஞானம் வாய்க்கப்  பெற்றவனோ பிறவிச் சுழலிலிருந்து நீங்கப் பெறுவான்.  உரிமையுடன் பழகும் தன்மையில் வல்லான் சிவனை உள்ளத்தில் உணர்ந்து அழிவில்லாமல் வாழ்வான்
நான் அருமை பெருமையுடைய பெரியோரின் துணையைப் பெறும் பேறு பெற்றேன். 
 
==============   இரண்டாம் தந்திரம் முற்றுப் பெற்றது  =====================
 
மூன்றாம் தந்திரம்
 
1.அட்டாங்க யோகம்.                                                                                                                       இறைவனை அடைவதற்குரிய நெறிகளான இயமம், நியமம், ஆதனம்,பிராணாயாமம், பிரத்தியாகாரம்,
தாரணை, தியானம், சமாதி ஆகிய எட்டு உறுப்புகளை உடையது அட்டாங்கயோகம்.
 
0549: பிராணாயாம முறைப்படி யோகம் செய்தல் :
பல வகையாய்ப் பேசப்பட்டு வந்த பிராணன் ஒன்று இழுக்கப் பெற்றும், அது பன்னிரண்டு விரற்கடை கழுத்துக்குக் கீழும் மேலும் இயங்குமாறும் எண்ணி அட்டாங்க யோகத்தை எடுத்துக் கூறிக் குருநாதன் முறையாகத் தீமையைப் போக்குவதற்கும் நன்மையைப் பற்றுவதற்கும் வழிவகை செய்தனன்.
 
0550: அட்டாங்க யோகத்துக்கு இன்றியமையாதவை :                                                                       இயம, நியம ஒழுக்கங்களில் நின்று சமாதி பொருந்தி, உய்தி பெறவும், முன்னால் நின்று வழிகாட்டிப் பின்
நின்று தாங்கிக் கொண்டிருக்கும் பராசக்தியின் துணையை அடையவும் கவச நியாசங்கள் முத்திரைகளை
அறிந்து ஒழுகவுமான இம்முறையிலே இந்த யோகத்தை நான் கூறிச் செல்வேன்.
 
இயமம் = தீத்கற்றல்   = புலனடக்கம்
நியமம் = நன்றாற்றல்  =ஒழுக்க நெறியில் நிற்றல்
சமாதி  = தன்னை மறந்திருத்தல்
 
0551: சமாதி கூடியவர்க்குப் பிறப்பு இல்லை :
இறைவனை அடைவதற்கு அது வழி இது வழி என்று தடுமாறாது  அட்டாங்க யோக நெறியில் நின்று சமாதியை அடையுங்கள்.  அங்ஙனம் அந்த நெறியில் போய்ப்  பொருந்தியவர்க்கு ஞான யோகம் வாய்த்துச் சிவப்பேறு பெறலாம்.     அங்ஙனம் ஞானம் கைகூடாது போயினும் பிறவிக்கு வரும் நெறியில் வந்து ஓர் உடலில் பொருந்துவது இல்லையாகும்.
 
0552: யோகத்துக்கு உரிய எட்டு நெறிகள்:
இயமம், நியமம், பலவகைப்பட்ட ஆசனம், நன்மையுடைய பிராணாயாமம், பிரத்தியாகாரம், வெற்றி மிக்க தாரணை, தியானம், சமாதி ஆகியவை நல்வினையார்க்குக் கிட்டும்  எட்டு வகை உறுப்புகளை உடைய அட்டாங்க யோக நெறியாம்.
 
2. இயமம்.  தீயவற்றைச் செய்யாது ஒழுகுதல்.
 
0553: இயமத்தை இடைவிடாது செய்ய வேண்டும் :
எட்டுத் திக்குகளிலும் சூழ்ந்து மழை பெய்தாலும் குளிர்ச்சி அளிக்கும் இயமங்களைத் தவறாமல் செய்யுங்கள் எனச் சிவபெருமான் கொழுவிய பவளம் போன்ற குளிர்ந்த சடையுடனே பொருந்திய சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் முதலிய முனிவர்களுக்கு உரைத்தருளினான்.
 
0554: இமயத்தில் நிற்பவர் நீக்க வேண்டியவை :
ஓர் உயிரையும் கொல்லாதவன்; பொய் சொல்லாதவன்; திருடாதவன்; ஆராய்ச்சியுடையவன்; நல்லவன்; பணிவு உடையவன்; நீதியினின்று வழுவாதவன், பிறர்க்குத் தன் பொருளைப் பகுத்து தருபவன்; குற்றம் இல்லாதவன்; கள், காமம் இல்லாதவன் என்னும் இவ்வியல்புடையவனே இமயத்தை மேற்கொள்ளத் தக்கவன்.
 
3. நியமம்.  (நல்லவற்றைச் செய்தல்)
 
0555: நியமத்தன் உணர வேண்டியது.
நியமத்தை மேற்கொள்பவன் பழமையானவனை, நாதவடிவானவனை, பேரொளி வடிவானவனை, மூலாதாரத்தில் அக்கினி மயமாய் உள்ளவனை, சிவத்திடம் பிரிவில்லாமல் இருக்கும் சத்தியுடன் உயிருடன் உடனாய் நிற்கும் இயல்பை உணர்ந்து ஒழுகுதல் வேண்டும்.
 
0556: நியமத்தில் நிற்பவனுக்குரிய பத்துக் குணங்கள் :
நியமத்தில் நிற்பவன் தூயதன்மை, அருள், சுருங்கியஉணவு, பொறுமை, நேர்மை,உண்மை, உறுதியுடைமை ஆகியவற்றை வளர்த்தலும், மற்றக் காமம், களவு, கொலை என்னும் இவற்றைத் தீயவை என ஒதுக்கலும் என்ற இவை பத்தையும் மேற்கொண்டு நிற்றல் வேண்டும்.
 
0557: நியமத்தான் செய்ய வேண்டிய பத்து செயல்கள் :
நியமத்தினை மேற்கொள்பவன், தவம், செபம், மகிழ்ச்சி, தெய்வநம்பிக்கை, கொடை, நோன்பு, பதி பசு பாசமாகிய முப்பொருள்உண்மை கேட்டல், வேள்வி, சிவபூசை, பேரொளிதரிசனம் எனக் கூறப்பட்ட பத்தினையும் உயர்வாய்க் கடைப்பிடிக்க வேண்டும்.
 
4.  ஆதனம்.  ஆசனம்.  இருக்கை.
யோகத்தை மேற்கொள்வதற்கு முன் இருக்க வேண்டிய இருக்கை நிலையும் அதனால் உண்டாகும் பயன்கள் பற்றிக் கூறப்படும்.
 
0558: சுவத்திகாசனம் :
'பத்மாசனம்' முதலிய பல ஆசனங்கள் உள்ளன.  அத்தகைய ஆசனங்களில் எட்டு முக்கியமானவை ஆகும்.  சோர்வு இல்லாமல் 'சுவத்திகம்' என்ற சுகாசனத்தில் பொருதி இருக்கத் தக்கவன் தலைவன்.
 
0559: பத்மாசனம் :
ஒரு பக்கம் அணைந்த காலைத் தொடையின் மேல் ஏறும்படி செய்து மிகவும் இழுத்து வலப்பக்கத் தொடையின் மீது இடக்காலையும், இடப்பக்கத் தொடையின் மீது வலக்காலையும் வைக்க வேண்டும். இர்ண்டு தொடைகளின் நடுவில் இரண்டு கைகளையும் அழகாக மலர்ந்த நிலையில் வைக்க வேண்டும்.  மூக்கு முனையில் கண் பார்வை அசைவு இல்லாமல் வைத்து, மார்பில் மோவாய்க்கட்டையை வைத்துக் காற்றை எழுப்பி இருத்தல் வேண்டும்.  இது உலகம் புகழும் பத்மாசனம் இடும் முறை.
 
0560: பத்திராசனம் :
குற்றம் அற்ற வலக்காலை இடப்பக்கம் தொடையின் மீது விளங்குமாறு வைக்க வேண்டும்.   முழந்தாள்களில் இரண்டு கைகளையும் நீட்ட வேண்டும்.  உடலை நேராக நிமிர்த்த வேண்டும். 
இது பத்திராசனம்.
 
0561: குக்குட ஆசனம் :
குக்கிடம் என்றால் கோழி.  இந்த ஆசனம் கோழி போன்றது.  பத்மாசனத்தில் சொல்லப்பட்டது போல் பாதங்கள் இரண்டையும் தொடையின் மேல் மாறி ஏற்றிக் கணுக்காலுக்கும்  தொடைக்கும்  இடையே  இரு  கைகளையும்  நுழைத்துத் தரையில் ஊன்றி, உடலை முழங்கை வரை தூக்கி நிறுத்தி, உடலின் சுமை
கைகளில் தங்குவதற்கான சமநிலை தெரிந்து அசையாதபடி இருப்பது குக்குட ஆசனம்.
 
0562: சிம்மாசனம் :
பாத நுனிகளைப் பூமியில் ஊன்ற வேண்டும்.   முழங்கால்களில் கைகளை நீட்ட வேண்டும்.   வாயைத் திறந்த வண்ணம் புருவ நடுவைப் பார்த்தபடி இருக்க வேண்டும். கேசரி (சிங்க) முத்திரையில் நாக்கை மடித்து உண்ணாக்குப் பகுதியில் செலுத்தியிருப்பதால் வாய் மூடாமல் இருக்க ஏதுவாகும்.
 
0563: ஆசனங்கள் பல :
பத்திரம், கோமுகம், பங்கயம், கேசரி, சொத்திரம், வீரம், சுகாசனம் என்ற ஏழும் மேலானவை.  பழமையாய் உள்ள ஆசனங்கள் இவற்றையும் சேர்த்து நூற்று இருபத்தாறாம்.  இவற்றின் மேலும் ஆசனங்கள் பல உண்டு.
 
கோமுகாசனம் :
வலப்பக்கம் பின் பாகத்தில் இடக்கால் பரட்டினையும் இடப்பக்கம் பின் பாகத்தில் வலக்கால் பரட்டினையும் சேர்ப்பது.  இப்படிச் செய்யின் பசுவின் முகம் போல் விளங்கும்.  அதலால் இது கோமுகாசனம் எனப்படுகிறது.
 
வீராசனம் :
வலப்பக்கத் தொடையின் மீது இடக்கால் பரட்டைச் சேர்த்து இறுமாந்திருத்தல்.
 
சுகாசனம் :
ஒருவன் தனக்குச் சுகமான நிலையில் அமர்ந்திருத்தல்.
 
5. பிராணாயாமம்.  (பிராணன் = காற்று, மூச்சு, வளி ) :
பிராணனைக் கட்டுப்படுத்துவது பிராணாயாமம்.  இது பலவகையுடையது.  மேல்சொல்லப்பட்ட ஆசனங்களுள் ஏதேனும் ஒன்றில் இருந்து பிராணாயாமம் செய்தல் வேண்டும்.
 
0564: பிராண செயம் உண்டாகும் :
ஐம்பொறிகளுக்குத் தலைவனும் உடலுக்குத் தலைவனும் ஆகிய ஆன்மா உய்வு பெற்று மேலே சென்றடைய மனத்துடன் பிராணன் என்ற குதிரை ஒன்றுள்ளது.அந்த  மனம்என்ற குதிரை பிராணாயாமப் பயிற்சியுடையவர்க்கு, உடலை விட்டுஅகண்டத்தைப் பற்றி நின்றவர்க்கு வயப்பட்டு அடங்கி நிற்கும். முறையான பிராணாயாமப் பயிற்சி இல்லாதவர்க்குப் பிராணன் வயப்பட்டாது கீழே போய் விடும்.
 
0565: குருவருள் தேவை :
மனம் என்னும் ஆரியன் மிகவும் நல்லவன். ஒடுகின்ற பிராணன்,அபானன் என்ற இரண்டு குதிரைகள் உள்ளன.அவற்றை வெளியில் விட்டு உள்ளே நிறுத்துகின்ற திறமையை உடையவர் இல்லை.  பிராண செயம் பெற்ற குருநாதனின் அருள் கிட்டினால் பிராணன் அபானன் ஆகிய குதிரையைச் சேர்த்துப் பிடிக்கப் பிராண செயம் அமைந்திடும்.
 
0566: சோம்பல் நீங்கிச் சுறுசுறுப்பு உண்டாகும் :
பறவையை விட வேகம் கொண்டது பிராணன்.  அதன் வழி சிரசை நோக்கிச் செல்லுவதாயின் கள் உண்ணாமலேயே சாதகனுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.  உடலில் சோம்பல் தன்மை நீங்கும்.  சுறுசுறுப்பு ஏற்படும்.  பிராணனும் மனமும் சிரசில் பாயும்.  மனம் உடையவர்க்கு இந்த உண்மையைக் கூறினோம்.
 
0567: பிறவி நீங்கும் :
உலகை எண்ணாதவனுக்குப் பிராணனும் மனமும் அடங்கி ஒடுங்கின் பிறப்பு இறப்பு இல்லை.  சீவன் தனி வியக்தியில் வைகரி தோன்றிப் பிராணனும் நிலை தடுமாறிப் பிராணன் ஒடுங்காத போது பிறப்பு இறப்பில் உழல்வர்.
 
0568: பிராணாயாமம் செய்யும் முறை :
பதினாறு மாத்திரை அளவு இடப்பக்கத்தில் உள்ள நாசித் துளையில் காற்றை உள்ளுக்கு இழுத்தல் "பூரகம்" எனப்படும்.  அறுபத்து நான்கு மாத்திரை அளவு இழுத்த காற்றை உள்ளே நிறுத்துதல் "கும்பகம்" எனப்படும்.  முப்பத்திரண்டு மாத்திரை காலஅளவு வலப்பக்கம் துளையில் காற்றை மெல்ல விடுவது "ரேசகம்" எனப்படும்.  முன்னே சொல்லிய முறைக்கு மாறாக வலப்பக்கம் நாசித் துளையில்காற்றை இழுத்து நிறுத்தி இடப்பக்க நாசித் துளையில் விடுவது "வஞ்சனை"யாகும்.(மாத்திரை எனபது கண் இமைக்கும் நேரம் அல்லது கைந்நொடிப் பொழுது.)
 
0569: இளமையுடன் இருக்கலாம் :
பிராணாயாமப் பயிற்சி செய்பவன் காற்றை இழுத்துத் தன் வசப்படுத்தி அடக்கியிருந்தால் உடல் பளிங்கைப் போல் மாசு இல்லாது தூய்மையுடையதாய், முதுமை அடைந்தாலும் இளமைத் தோற்றம் உண்டாகும்.  இதனைத் தெளியக் குருவின் அருளையும் பெற்று விட்டால், அவன் உடம்பானது காற்றையும் விட மென்மை உடையதாகும்.  அவன் எங்கும் செல்லும் ஆற்றலைப் பெற்று மென்மை அடைவான்.
 
0570: இடைகலை வழியகப் பூசிக்கச் சிறப்பு உண்டாதல் :
நீ எவ்விடத்தில் இருந்தாலும் இடப்பக்க நாசியாகிய இடைகலை வழியாகவே பூரகம் செய்வாய்.  அங்ஙனம் பூரிக்க உடலுக்கு அழிவு என்பது உண்டாகாது. அங்குக் கும்பகம் செய்து அந்தப் பிராணன் செல்லும் அளவு மேற்செல்லச் சங்க நாதம் ஏற்பட்டு மேன்மை ஏற்படும்.
 
0571: கும்பகம் செய்வதால் ஏற்படும் பயன் :
இடைகலை பிங்கலை வழியாகக் காற்றை இழுத்துப் பூரித்து உள்ளே கும்பகம் செய்யும் முறையை அறிந்தவர் இல்லை.  அங்ஙனம் காற்றைக் கும்பகம் செய்யும் முறையை அறிந்தவர் இயமனைக் கடக்கும் குறிக்கோள் பெற்றவர் ஆவார்.
 
0572: கும்பகத்தால் அருள் உண்டாகும் :
முறையான காற்று தொண்டை, மூலாதாரம், விலா ஆகியவற்றில் நிரம்பும் வண்ணம் செய்து, மறு பகுதி யான இரேசகத்தினால் உறுப்புகளை ஒன்றுடன் ஒன்று  பதியும்படி செய்து, விருப்புடனே வயிற்றில் கும்பகம் செய்து இருப்பின், திருநீலகண்டப் பெருமானின் திருவருளைப் பெற முடியும்.
 
0573: கும்பத்துக்குரிய அளவு ;
இடைகலை வழியாய்ப் பதினாறு மாத்திரை கால அளவு பூரகம் செய்து விரும்பத்தக்க பிங்கலையில், முப்பத்திரண்டு மாத்திரை கால அளவு இரேசகம் செய்து, பூரித்தலும் இரேசித்தலும் ஆன வேள்வியால்,  அறுபத்து மாத்திரை கால அளவு கும்பகம் செய்ய உண்மையானது விளங்கும்.
 
0574: காலனைக் கடக்கலாம் :
செய்யப்பட்டதான இவ்வுடல் தளர்ச்சி அடையாமல் இரேசகம் செய்து பத்து நாடிகளும் விம்மும்படி காற்றை உள்ளே இழுத்து நிரப்பிப் பிராணன் அபானன் என்பவை சேரப் பெற்று நேராய் நிமிர்ந்திருக்க, இயமனால் உண்டாகும் பயன் உண்டாகாது.(பத்து நாடிகள்: சுத்தி, அலம்புடை, இடை, காந்தாரி, குரு, சங்கினி, சிங்குவை, சுழுமுனை, பிங்கலை, புருடன்)
 
0575: உடம்பில் மாற்றம் உண்டாகும் :
உயிர்ப்பாய் வெளியில் வந்து திரியும் காற்றை முறையான கும்பகத்தால் உள்ளே தூய்மை செய்வதால் உடல் உறுப்புகளில் குருதி ஓட்டம் நன்கு பாய்ந்து சிவந்துநிற்கும்.  தலைமுடி மயிர் கறுத்துத் தோன்றும்.  ஒளிக் கதிர்களால் சூழப் பெற்ற ஆத்மன் உடலில் நிலையாய் நிற்பான்.
 
0576: திருவைந்தெழுத்து வடிவம் பெறுதல் :
குழந்தையாக இருந்த போது உடலை இடமாகக் கொண்ட பிராண சத்தி, பன்னிரண்டு விரல் அளவு நீளம் சென்றும் புகுந்தும் வருமாறு இருந்தனர்.  வயதுமுதிர்ந்தபோது தொண்டைக்குமேலே தலையில் செல்லும் நான்கு விரல் அளவைத் துண்டித்துவிட்டு பிராணன் எட்டு விரல் அளவே செயல்படுமாறு இருக்கின்றனர்.
மேலே தடை செய்யப்பட்ட நான்கு விரல் அளவும் செயல்படுமாறு, பிராணன் தொண்டைக்கு மேலே  தலைக்கும் பாயுமாறு பயிற்சியாளர் செய்வாராயின்  திருவைந்தெழுத்து வடிவத்தைப் பெறுவர்.
 
0577: துரிய புவியில் இருக்கலாம் :
பிராணன் மூக்கிலிருந்து தொண்டை வழியாய் கீழ் நோக்கிப் பாய்வதால் பிராணனைத் தலையில் உள்ள ஆன்மா அறியவில்லை.  ஆதலால் பன்னிரண்டு விரல்அளவு செயற்படும் பிராணனான கதிரவனுக்குப் பகல் என்றும் காலங்கள் உண்டு.  கீழ்முகம் போகாமல் மேல் முகம் கொண்ட பிராணனை ஆன்மா அறிந்தால் பிராணன் என்ற கதிரவன் இரவு பகல் அல்லாமல் எப்போதும் ஒளி வீசும்.  காற்று சுவாசப்பையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் வரை சீவர்களுக்கு இரவும் பகலும் உலகமும் இருந்து கொண்டே இருக்கும். காற்று சிரசை நோக்கிச் சென்ற போது ஆன்மா அதை அறிவதால் சகஸ்ரதளத்தில் இரவு பகலற்ற துரிய உலகில் இருப்பர்.
 
6. பிரத்தியாகாரம்.
(வெளியே செல்லும் உள்ளத்தைஉள்ளே நிறுத்திப் பழகுதலே பிரத்தியாகாரம் ஆகும்.  இ•து அடயோகம், இலயயோகம், நியமம், ஆசனம், இலம்பிகாயோகம், மந்திரயோகம், ராஜயோகம், சிவயோகம் எனப்பல.)
 
0578: பழம் பொருளான சிவனை உணரலாம் :
வெளியே செல்லும் இயல்புடைய மனத்தை உள்ளே பொருந்தும்படி செய்து விட்டால், அக்காட்சியால் சிறிது சிறிதாய் இருள் நீங்கி ஒளி பெறலாம்.  முன்பு விரும்பி எங்கும் பழைய மறைகளால் தேடப் பெற்ற பரம் பொருளை எடுத்த உடலில் உள்ளே கண்டு மகிழ்ந்து இருக்க முடியும்.  உள்ளத்தை உள்முகமாகத்
திருப்பியிருந்தால் இறைவனை உணரலாம்.
 
0579: மனத்தை மந்திரத்தால் உள்ளிழுத்துப் பழக வேண்டும் :
கொப்பூழுக்குக் கீழே பன்னிரண்டு அங்குலத்தில் (வெளிப்பக்க அளவு) மூலாதாரத்தில் உள்ளது குண்டலினி.     அதை மேல் எழுப்பும் மந்திரமான 'சோகம்.... சோகம்.." என்ற பிரசாத மந்திரத்தை யாரும் அறியவில்லை.  அந்த மந்திரத்தை அறிந்த பின்பு சிவன் நாதமயமாய்த் தலையில் விளங்குவான்.
 
0580: மூலாதாரத்துக்கு இரண்டு விரல் அளவு (இது உட்புற அளவு) மேலே
இருப்பதும், முன்பக்கம் பார்வைஉடையதும் வெளிப்படுத்துகின்ற தன்மையுடையகுறிக்கு இரண்டு விரல் அளவு கீழே உள்ளதுமான இடத்தில், வட்டமிட்டுக் கொண்டிருக்கும்  குண்டலினியுள் எழும் சுடர் உடலில் கொப்பூழ்த் தாமரைக்குக் கீழ் நான்கு விரல் அளவில் உள்ளது.   மூலாதாரத்துக்கு இரண்டு விரல் மேலும், குறிக்கு இரண்டு விரல் கீழும் உள்ள இடத்தில் உள்ளது வட்டக் குண்டலினி.  இது உச்சித் துளை வழிப் போகும்.  அது கொப்பூழுக்குக் கீழ் நான்கு விரல் எல்லையிலும் பரந்து நிற்கும்.
 
0581: உடல் அழியாதிருக்க வழி :
நாசிக்குக்கீழ் பன்னிரண்டு அங்குல அளவில் இதயம் உள்ளது. அந்த இதயத்தில் மனத்தை இழுத்து வைத்துச் செழுஞ்சுடரை நினைப்பாயானால், எண் பெருஞ்சித்திகளும் அரச யோகமும் வந்து சேரும்.  இதயத்தில் மனத்தை இருத்தி செய்யும் அக வழிபாட்டுத் தியானம் உடலுக்கு எப்போதும் தீமை செய்யாது.
 
0582: ஆனந்த பரவசம் உண்டாகும் :
இரண்டு மின்னல் கொடி பின்னி ஓடுவது போல் ஒளி தோன்றினால் குற்றம் இல்லாத மேலான ஆனந்தம் உண்டாகும் என்று நினையுங்கள்.  நேர்மை விளங்குகின்ற  கழுத்துப் பகுதியில் நிலவொளி தோன்றினால் பிரத்தியாகரப் பயிற்சி செய்த பயிற்சியாளன் உடலில் ஆனந்தப் பரவசம் உண்டாகும்.
 
0583: நெடிது வாழ வழி :
 மூலாதாரத்தை ஆகுஞ்சனம் என்ற முத்திரையால் அடைத்துக் கொண்டிருக்கும் உச்சித்துளையின் மேல் (பிரமரந்திரத்தின் மேல்) மனத்தை பதித்துவை.  வேலைப் போல் கூர்மையான கண்ணை வெளிப்பக்கம் விழித்த வண்ணமாக இரு.  இதுவே காலத்தை வெல்கின்ற வழியாகும்.
(குதத்தை மேல் எழும்படி அடைத்திருத்தலே ஆகுஞ்சனம் ஆகும்.)
 
0584: மனத்தை மூலாதாரத்தில் உள்ள சோதியில் நிறுத்தல் வேண்டும் :
மலம் கழிக்கும் வாயிலான குதத்துக்கு மேலே இரண்டு விரலும், கருவுண்டாகும் வாயிலான கோசத்துக்குக் கீழே இரண்டு விரலும் உள்ள இடத்தில் உருப்பெறும் குண்டலியை நினைப்பவர்க்கு மகேசுவரன் பேரொளி வடிவமாய்க் கலந்து விளங்குவான்.
 
0585: பிரத்தியாகாரம் ஆதல் :
சுழுமுனையில் மாயையின் செயற்பாடான இருளால் சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்ற அவத்தைகள் ஏற்படும்.   இவை விந்துத்தானத்தினின்று தொடங்கிக் கொப்பூழின் கீழ் வரை குண்டலினியின் நடப்பினால் உள்ளன.   புருவத்தினது நடுவில் இருளினின்று நீங்கி ஒளியைக் கண்டு அதன் மேல் சாந்தி, சாந்தியாதீதக் கலைகளில் உள்ளவர்கள் இத்தகைய அவத்தைகளை விட்டுத் தூய நிலையில் இருப்பர்.  இந்த நிலையில் சீவபோதம் என்ற மனம், உடல், நினவு, அறிதல் ஆகிய தன்மைகள் எல்லாம் கெடும்.  கெட்டு , அந்த ஒளியே தாமாய் நின்று விடும். இதுவே பிரத்தியாகாரம் ஆகும்.
                                                                                                                                                                     0586: மனத்தை உள்ளொளியில் நிறுத்தினால் அடையும் பயன் :வெளியே போன வாயுவை மீளவும் புகமுடியாதபடி திறமையாக உள்ளொளியில் பொருந்தி நிற்பின், உள்ளம் வலிமையடையும்;  அப்போது பெருந்தகுதியுடைய  இறைவனும் அவ்வொளியிலே நிலை பெற்றுப் புறப்பட்டுப் போகாதவனாய்த்
திகழ்வான். மனம் அலைவதால் பிராணன் அசையும்; மனம் அடங்கினால் பிராணனும் அசையாது அடங்கும்.
 
0587: இறவாத் தன்மை அடையலாம் :
பிரத்தியாகாரத்தில் உலகம் முழுவதுமே இருந்த நிலையிலிருந்தே அறியப்படும்.    வெறுக்கத்தக்க அறியாமை ஆகிய இருளை நீங்கி வேறுபாட்டைச் செய்யும் இறைவனை நாடுங்கள்.  சிவனை விரும்பும் சிந்தையில் உறுதியாய் இருந்தால் சிவஞானம் பொருந்திய தேவராய், இறவாத் தன்மையைப் பெறுவார்.
 
7.  தாரணை: (இருக்கச் செய்தல்)      பிரத்தியாகாரப்பயிற்சியால் உள்ளுக்கு     இழுத்த மனத்தை நிலை பெறும்படி செய்தல் :
 
0588: வாழ்நாள் வளரும்:
வெளியில் செல்லாமல் தடுக்கப்பட்ட மனத்தை, " கழுத்தினை நெருக்கி மார்பில் வைக்கும்"  ஜாலாந்தர பந்தத்தால்  கீழ் நோக்காமல் தடுத்து, நடு நாடியான சுழுமுனையின் வழியே போகும் மூச்சுடன் உள்ளத்தையும் பொருத்தி வானத்தில் பார்வையைச் செலுத்திக் காணாத கண்ணும் கேளாத செவியுமாய் இருப்பார்க்கு வாழ்நாள் என்பது கெடாது இருக்கச் செய்யும் வழி அதுவேயாகும்.
 
0589: ஒலியுடன் கூடிய சோதியைத் தாரணையில் காணலாம் :
மலை போன்ற தலையில் வான கங்கை எப்போதும் பாய்ந்து கொண்டிருக்கும் சுழுமுனை நாடியின் வழியாகப் போய்ப், பரநாத ஒலியுடைய சிற்சபையில் கூத்தாடும் அகலாத ஆனந்தத்தை அளிக்கும் பேரொளியை நான் கண்டேன்.
 
0590: இளமைத் தன்மைஉண்டாகும் :
தலையின் மேல் எழுந்தருளியுள்ள சிற்சத்தி மாற்றத்தைச் செய்யும் தேவியாகும்.  மூலாதாரத்தில் உள்ள கிரியா சத்தியுடன் பொருந்தியிருக்கும் மூர்த்தியைத் தாரணைப் பயிற்சியால் சிரசின் மீது எழுந்தருளப் பண்ணிச் சிற்சத்தியுடன் சேருமாறு செய்தால், வயது முதிர்ந்தவனும் இளமையுடையவன் ஆவான் காண்க. 
இது நந்தியான சிவபெருமானின் ஆணையாகும்.
 
0591: ஒளி பெற்றுப் பல்லாண்டு வாழ வழி :
மூலாதாரத்தை அடைத்து, அங்கே உள்ள காமவாயுவை மேலே செல்லும்படி செய்து, நடு வழியான சுழுமுனையில் மேல் மனத்தை இருத்தி, நீர் ஓடும் கால் வாயில் மீனை எதிர்பார்த்திருக்கும் கொக்குவைப் போல் நாட்டத்தை விடாமல் இருப்பவர்க்கு, உடலானது ஊழி வரை  சிதையாமல் இருக்கும்.
 
0592: கால எல்லையைக் கடக்கலாம் :
உடம்பில் உயிர் பொருந்தியிருக்கும் காலஎல்லையானது பிராணன் இயக்கத்தால் அமைந்திருக்கின்றது.  ஆதலால் அத்தகைய உயிரில் பிராணனது இயக்கத்தைக் கட்டி நிறுத்திவிட்டால், உயிருடன் கூடிய காலமும் அழிவில்லாது நிற்கும்.
 
0593: மௌனத்தின் பயன் :
வாய் திறவாமல் மௌனமாய் இருப்பவரின் மன மண்டலத்தில் பிராணன் எனப்படும் செல்வம் ஒன்று இருக்கின்றது. வாய்பேசாத மௌனத்தை மேற்கொண்டவர் பிராணனச் செலுத்திச் சோதியை அறிவர்.   அங்ஙனம் இல்லாமல் வாய் திறந்து பேசிக்கொண்டிருப்பவர் பிராணனை வெளியே விட்டு வீணாக்குவர்.  பிராணனைவெளியே விட்டு சகஸ்ரதளமான செப்பைத் திறந்து பார்க்க ஆற்றல் அற்றவர்கள்  கோழைத்தனம் கொண்டவர்கள் ஆவார்கள்.
 
0594: எல்லாத் தத்துவங்களும் ஒடுங்கியிருக்கும் இடம் :
மனத்தினின்றும் இறங்கிப் பிளந்து செல்கின்ற வாயுவை வெளியே போகாதபடி நடுநாடியிலே செலுத்தினால், கண் இரண்டு, காது இரண்டு, நாசி இரண்டு, வாய் ஒன்று ஆகிய ஏழு சாளரங்களையும், கருவாய்,எருவாய் ஆகிய இரண்டு பெரிய வாயில்களையும் கொண்ட உடலாகிய தேவர் கோயிலில் சகஸ்ரதளம் என்ற பெரும்பள்ளி அறையிலே பல காலம் வாழலாம்.
 
0595: மனம் செயற்படாமல் நிற்கும் :
புலன்களைத் துய்த்து நிரம்பிய ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து ஆகிய இவை பத்தில் ஞானேந்திரியங்கள் நீங்கினால், அறிவற்றவனே, நீ வருந்தி என்ன பயன்?  பொறிகளின் எல்லையைத் தாண்டி நிற்பவர்க்கு மனம் என்ற குரங்கை உடலில் குறும்பு செய்யாமல் இருக்கச் செய்ய முடியும்.  பொறி
களின் எல்லையைத் தாண்டினால் மனம் தொழிற்படாமல் நிற்கும்.
 
0596: தாரணைப் பயிற்சியால்
நிலைத்திராத உடலை நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் :
முன்னமே வந்து பிறந்தவர்கள் எல்லாரும் இத்தாரணைப் பயிற்சி இல்லாததால் அழிந்தனர்.   பின்னால் தோன்றுபவர் அழிய மாட்டார் என்பதற்கு ஆதாரம் என்ன?  அங்ஙனம் அழிகின்றவர் அடையும் நிலைகளைப் பேசினால் அவையெல்லாம் அளவில்லாதவையாகும்.  இது என்ன மாயம்!  ஆற்றில் இடிந்து கரையும் கரை போன்று நாளும் அழிகின்ற உடம்பு அழியாமல் இருக்குமோ?
 
0597: சிவனொடு பொருந்தி நிற்பதே தாரணை :
ஐந்து பொறிகளால் அரிக்கப்பட்ட உடலை ஐம்பூதங்களில் வைத்து, அப்பூதங்கள் ஐந்தினைப் புலன்களில் ஒடுக்கி, புலன்களை நான்கு அந்தக்கரணங்களில் ஒடுக்கி, அந்த அந்தக்கரணங்களை மாயையில் ஒடுக்கி, மாயையை ஆன்மாவில் ஒடுக்கி ஆன்மாவைச் சிவத்துடன் பொருந்தியிருப்பதே தாரணையாகும்.
            வானத்தில் உண்டான நாதத்தில் அந்தக்கரணங்கள் பொருந்த மனமானது எண்ணுவதையும் புத்தி நிச்சயம் செய்வதையும் விடுத்து நிற்கும்.    தற்பரமான சிவத்துடன்  சென்ற போது சித்தமும் ஆணவமும் இல்லை.  மிஞ்சி நிற்பது "தத்" என்ற சிவமும் "பரம்" என்ற ஆன்மாவுமேயாகும். இந்த நிலையை அடைந்தவரே தாரணைஅடைந்தவர் ஆவர்.
 
8. தியானம். (இடைவிடாமல் நினைந்த வண்ணம் இருத்தல் தியானம்.)
 
0598: தியானத்தின் இருவகை :                                                                                                               முன்னர் தாரணையில் பத்தாம் மந்திரத்தில் கூறியபடி அமைந்த தியானம் புத்தியும் புலனும் நீங்கியிருத்தலாகும்.  அது வடிவோடு கூடிய சத்தியை மேலாக எண்ணுதலான பரத்தியானம்.  இதனைச் சகளத் தியானம் என்றும் கூறுவர்.    ஒளியுடைய சிவனை எண்ணுவது சிவத்தியானம்.  இதனை நிட்களத்தியானம் என்றும் கூறுவர்.  தியானம் பரத்தியானம்,சிவத்தியானம் என இருவகைப்படும்.
 
0599: பரம் பொருள் பேரொளி காட்டி மனத்தை மகிழ்விக்கும் :
மெய், கண், நாக்கு, மூக்கு, செவி என்னும் ஞானேந்திரியங்கள் கூடுமிடத்தில் நாதத்தை எழுப்பிடும் பழமையான பொருள் ஒன்று உண்டு. அது அண்ணாக்குப்பகுதியில் எல்லையில்லாத பேரொளியைக் காட்டி, மனத்தின் தன்மையை மாற்றி,மனம் வெளி வழி செல்லாது தடுத்து நம்மைப் பிழைக்கச் செய்வது அண்ணம் ஆகும். (வாயில் நாக்குக்கு மேலே ஒரு துளை இருக்கிறது.  அண்ணாக்குக்கும் பிரமரந்திரத்துக்கும் இடையே உள்ள அந்த துளை வழியே ஒளி பாயும்.)
 
0600 : பெருவெளியில் பேரொளியைக் காணலாம் :
ஞானக்கண்ணில் பொருந்திய சோதியை இரண்டு கண்களையும் பொருத்திப் பார்த்து அங்குச் சலனம் இல்லாமல் இருக்க வேண்டும்.  அவ்வாறிருந்தால், வான கங்கை நன்கு புலப்படும் முறையில் சிதாகாயப் பெரு வெளியில் பொருந்தி நிற்க, செய்யப்படாத சுயம்பு மூர்த்தியைப் பார்க்கலாம்.  (சுழுமுனைத் தியானத்தைச் செய்தால் கங்கை பாய்வதைப் போன்ற உணர்வு ஏற்படும் என்பதாம்.)
 
0601: சிவனைச் சிந்தைக்குள் வைத்துத் தியானம் செய்ய வேண்டும் :
அறியாமையுடையவர் உடலுடன் பொருந்தியுள்ள உயிரை ஒரு பொழுதும் நினைக்க மாட்டார்கள்;  உயிருக்கு உயிராக விளங்கும் சிவனை ஒரு பொழுதும் நினைக்க மாட்டார்கள்;  சிவன் வீற்றிருக்கின்ற சிந்தையையும் ஒரு பொழுதும் எண்ணமாட்டார்கள்;  சந்திர மண்டலத்தில் விளங்குகின்ற நாதமயமான சத்தியை யும் எண்ணமாட்டார்கள். 
 
0602: சிவமாகிய சோதி நீங்காது :
உள்ளத்தில் விளங்கும் சோதியை மாட்சிமை பொருந்த மேலே செலுத்திச், சினம் என்ற தீயை நீங்குமாறு செய்து, எல்லாவற்றையும் விளங்கி நிற்கும் சிவஒளியைச் சுழுமுனை என்ற திரியைத் தூண்டி நடந்த மனத்தில் - சிவம் மங்காத விளக்காக விளங்கும்.
 
0603: சிவத்தைக் காண்பதற்கு உள்ளத்துள் ஒளி பெற வேண்டும் :
எண்ணாயிரம் ஆண்டுகள் யோகத்தில் இருந்தாலும் கண்ணுள் மணியும் அம்மணியுணர் அமிழ்தும் போன்ற சிவனைக் கண்டறிய முடியாது.  மனத்தில் ஒளி பொருந்தும்படி காண்பவர்க்குக் கண்ணாடியில் வடிவத்தைக் காண்பதைப் போல் உள்ளத்தில் இருப்பதைக் காணலாம்.
யோகங்கள் அறியாதிருப்பினும் உள்ளத்துள் ஒளியிருப்பின் சிவனைக்காணலாம்.
 
0604: தியானத்தின் போது பார்வை இருக்க வேண்டிய முறை :
இரு கண்களின் பார்வையையும் நடு மூக்கில் பொருத்தி வைத்திடின் சோர்வு உண்டாகாது; உடலுக்கும் அழிவில்லை.  மனத்தின் ஓட்டமும் இராது.  அறியும் இயல்பும், தான் என்ற முனைப்பும் இருக்காது.   வெளியே செல்லும் அறிவுத் திறனும் இருக்காது.  அவனே சிவனாக ஆகலாம்!
 
0605: புருவ நடுவில் பார்வை இருக்க வேண்டும் :
இரு கண்களின் பார்வையையும் (கேசரி முத்திரை) புருவ நடுவில் வைத்து, உயர்வினின்று தாழாத பிராணனை உள்ளே அடக்கி துன்பம் தரும் மனம் முதலியவற்றை நீக்கி யோக நித்திரை செய்பவர்க்கு எடுத்த உடல் பயனைத் தருவதாக அமையும்.  கூற்றுவனால் உண்டாகும் அச்சமும் இல்லை.
 
0606: தியானிப்பவர்க்குக் கேட்கும் ஒலிகள் :
மணி, கடல், யானை, புல்லாங்குழல், மேகம், வண்டு, தும்பி, சங்கு, பேரிகை, யாழ் என்பனவற்றின் நுட்பமான ஒலிகள் பத்தும் தியானத்தை மேற்கொள்பவர்க் கன்றி மற்றவரால் அறிய முடியாது.
 
0607: மன உறுதியுடையவர் கேட்கும் ஒலிகள் :
கடல், மேகம், யானை என்பனவற்றின் வலிய ஓசையும் கம்பியின் இறுக்கத்தால் வீணையில் உண்டாகும் நாதம், வானத்தில் அமைந்துள்ள மறையொலி சுருங்கியவாயையுடைய சங்கு என்பதன் ஓசை போன்ற மென்மையான ஓசையும் ஆகியவற்றை யோகியரே அறியமுடியும். மற்றவரால் அறிய இயலாது.  தியானம் செய்பவர்க்குக் கேட்கும் ஒலிகள் வலிய ஓசையில் தொடங்கி மென்மையான ஓசையில்
முடியும்.
 
0608: சிவம் எல்லாவற்றிலும் நாதமாய் விளங்குவான் :
இறைவனின் இயல்பும், தேவர் கூட்டச் சேர்க்கையும், பாசத்தின் இயக்கமும், பாசத்தை விட்ட உயிராய் நிற்பதும் நாதமாகும்.    அதை உணரும் வல்லமை உடையவர்க்குப் பூவில் வெளிப்படும் நறுமணம் போல் நாதத்தில் இறைவன் விளங்குகிறான் என்பது விளங்கும்.
 
0609: நீலகண்டப் பெருமான் நாதமுடிவில் உள்ளமை :
நாத தத்துவம் முடிந்தவிடத்தில் பராசத்தி இருக்கிறாள். அங்கு யோகத்தின் முடிவு உள்ளது.  நாதம் முடியும் இடத்தில் நம் மனம் பதியும்.  அங்கு நீலகண்டப் பெருமான் விளங்குவான்.
 
0610: இறைவன் திருவடியை அடையுமாறு :
ஆறு ஆதாரங்களில் தோன்றும் ஐந்து வகைத் தீயும் துதிக்கின்ற ஒளியுடன் கூடியநீல ஒளியை அகன்று, இயக்குகின்ற ஐந்து தன்மாத்திரைகளில் ஒன்றான சத்தம் ஒடுங்க, பொன்னொளியில் விளங்கும் இறைவன் திருவடியைச் சேரலாம்.
 
0611:தியானத்தில் இருப்பவர்க்கு நீலவொளி வெண்மையானஒளியாய் இருக்கும்:ஐம்பொறிகள் ஓய்வு பெறும் சகஸ்ரதளமாகிய பள்ளிஅறை என்ற பராவத்தையில் ஒளி மட்டும் விளங்கும்.  இருள் இல்லை.  ஒளி மட்டுமே இருப்பதால்  வேறு அக்கினி கொளுத்தாமல் காக்கலாம்.  ஒளியுடைய இந்நிலையை அறியின் அது நான்கு காத தொலைவுடையது.  தியானத்தால் அடையப் பெறுவது.  இருளே அங்கு இல்லாத காரணத்தால் விடிவு இல்லை.
 
0612: உடல் அழியாதிருப்பர் :
சந்திர மண்டலம் அமைக்க வேண்டும் என்ற கொள்கைக்குக் குறைவு வாராமல் தான் ஒன்றுபட்டு முதுகுத் தண்டில் உள்ள சுழுமுனை நாடி வழியாய் மேல் நோக்கிச் சென்ற யோகிக்கு அக்கினிமண்டலம் சூரிய மண்டலம் சந்திர மண்டலம்என்னும் மூன்றும் ஒத்த வகையில் வளரும்.  வளர்ந்த பின் எடுத்த உடல் உலகம்இருக்கும் வரை சீவனாஇ விட்டு நீங்காது.
 
0613: சீவருக்கு உதவுபவர் :
அவ்வவர் மண்டலத்தால் ஆகின்ற தன்மை ஒன்று உண்டு.  அக்கினி, சூரியன், சந்திரன் மண்டலங்களுக்கு பிரமன், திருமால், உருத்திரர் என்பவர் தலைவராம்.   அவ்வவரது மண்டலம் மற்றவர்க்கு உதவி செய்யும் கூட்டமாகும்.
 
0614: மூன்று மண்டலங்களில் பொருந்திச் சென்றால் ஒளியுண்டாகும் :
உலக இயலில் மயங்கித் தவிக்கின்ற உள்ளம் என்ற இருட்டறையில், தோன்றும் மூன்று மண்டலங்களுள் பொருந்தி உச்சித்துளை வழியாகச் சிவத்திடம் மிக்க அன்பு கொண்டு ஆராய்ந்து மேலே சென்றால், துன்பம் நீங்கித் தலையில் விடியற்காலம் போல் வெளிச்சத்தைப் பார்க்க இயலும்.
 
0615: உடல் அழியாதிருக்க வழி :
மூன்று குணங்களாகிய தாமத, இராசத, சாத்துவிகம் என்ற இருள் நீங்க, மூலாதாரத்தில் உள்ள அபானன் என்ற வாயுவை மேல் எழுப்ப, வலப்புறமுள்ள  சூரியகலையை இடப்பக்கம் உள்ள சந்திர கலையுடன் பொருந்தும் வண்ணம் காலையில் ஒரு நாழிகை பயின்றால் சிவன் உடம்பில் உயிரை அழியாது இருக்க வைப்பான்.
 
0616: ஆன்ம தரிசனம் செய்தவர் :
அசைவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொப்பூழ்ச் சக்கரத்துக்கு நான்கு விரல் மேல் ஊர்த்துவ முகமாய் மேலே செல்லும் வாக்கு வெளிப்படும் தொண்டைச் சக்கரத்துக்கு இரண்டு விரல்அளவு கீழே இருக்கும் அநாகதச் சக்கரத்தில் கடலின் ஒலி போல் பொங்கி எழும் ஒலியைத் தியானம் செய்ய வல்லவர் உடலுக்குரிய ஆன்மாவை அறிந்தவர் ஆவார்.
 
0617: இருள் நீங்கி இன்பம் எய்துவர் :
அறிவு என்னும் ஆன்மா - அறிவற்ற முப்பத்தாறு தத்துவங்களும் நீங்கப் பெற்று, மாயையை அருளால் கெடுத்துச் - சிவனுடன் நீங்காமல் இருக்கும் அருள் சத்தியாகும் உண்மையைச் - சிவநெறியில் நின்று தியானிப்பவரே உணரமுடியும்.
 
 
9. சமாதி.  (உயிரும் இறைவனும் ஒன்றி நிற்றலே சமாதியாகும்.)
 
0618: சமாதி நிலை கிட்டப் பெறுபவர் :
இயமம் முதலியவற்றைக் கடைப் பிடித்துச் சமாதி வரை செல்லும் முறைமையைக் கூறக் கேட்டால், இயமம் முதல் சமாதிக்கு முன் உள்ள சங்கங்கள் கடைப்பிடிக் கப்படின், எட்டாவதான சமாதி கைகூடும்.  இந்த எட்டு உறுப்புகளையும் முறையாய்ச் செய்து வருபவர்க்கு அட்டாங்க யோகத்தின் கடைசி அங்கமான சமாதியும் கைகூடும்.
 
0619: சமாதி நிலையில் பேரொளியைக் காணலாம் :
விந்துவும் நாதமும் தலையில் ஊல்ல ஆயிர இதழ்த் தாமரையில் மிகுந்து விளங்கினால், யோகமான சமாதியில் சீவன் பொருந்தியிருக்கும்.  அப்போது இறுதியில் ஞான வடிவமான சிவம் அழகான பேரொளியாய்ப் புறப்படும்.
 
0620: மனமும் பிராணனும் அடங்கும் :
நினைக்கச் செய்யும் மனம் எங்கு உள்ளதோ அங்கு பிராணவாயுவும் உண்டு.   மனமானது எங்கு இல்லையோ, எதையும் நினைக்கவில்லயோ அங்கு பிராணவாயுவின் அசைவும் இருக்காது.   அப்படி மனத்தில் நினைப்பதை விட்டு மகிழ்ந்திருப்பார்க்கு எண்ணும் மனமே எண்ணாத மனமாகி விடும்.
 
0621: சிரசில் உணர்வைக் கருதியிருப்பவர்க்குப் பிராணன் அடங்குதல் :
பிளந்து வெளிப்படும் ஒளியாம் நீர் ஊற்றையும் சிவமாகிய அறிவுக் காட்டையும் கண்டு உணர்வுமயமாய் இருப்பவர்கள் - செழுமையான தலையான மலையில் பிராணன் என்ற குதிரையைச் செலுத்தி மனம்என்ற கயிற்றைக் கட்டுதல் செய்வர்.
 
0622: காலன் என்ற சொல் கனவிலும் இல்லை :
சிவனை நாடித் தலையின் உச்சியுள் உள்ள சகஸ்ரதளத்தில் கண்ணறிவு காதறிவு மூக்கறிவு நாக்கறிவு என்னும் நான்கு அறிவும் பொருந்தும்படி இருப்பவர்களே!   பரந்த சகஸ்ரதளத்தின் மேலே அகண்டத்தைக் கண்ட பின்பு உங்கட்கு இயமன் என்ற சொல்ல் கனவிலும் இல்லை.
 
0623: சிவமாய் விளங்குபவன் :
பிருதுவி முதலிய ஐந்து மண்டலங்களும் அகரம் முதல் உன்மனி வரை உள்ள கலைகள் பன்னிரண்டும் ஆதாரச் சக்கரங்களில் உள்ள அட்சரங்களை இடமாகக்கொண்ட தேவதைகள் நாற்பத்தெட்டும் ஆகியவற்றைக் கருத்து மாத்திரமாக நிராதாரத்தில் கண்டு எங்கும் பரந்துள்ள திருவடியைப் பொருந்திச் சிவயோகி அனுபவிப்பான்.
 
0624: சிவக்கனியுடன் இருக்கலாம்!
கிணற்றுச் சகடை உதவியால் கயிறு மேலும் கீழுமாகப் போவதைப் போல் எண்ணங்களுக்கு ஏற்ப உடலில் கீழும் மேலுமாகப் போகும் வாயுவைப் பிரமரந்திரத்தால் பொருந்தச் செய்து சேர்த்துத் - தேடி அலைதை விட்டு விழித்த வண்ணம் இருப்பவர் சிவக் கனியுடனே அசைவற்று இருக்கலாம்.
 
0625: மனம் அடங்கியவர் பெறுவது :
என் ஆன்ம வடிவத்தை அறிந்து கொள்ளும் சிறப்பான ஒரு முறை உண்டு.
அதன் பயன் சொல்வேன்.  கேட்பீர்.  தேவர்கள் (கடலைக் கடந்து அமிழ்தம் உண்டனர்) கரு உண்டாகும் இடத்தைப் பற்றி இன்பம் அடைந்தனர்.  அதனால் சிரசின் உச்சியிலே போய் அமுதபானம் செய்யாதவர் ஆயினர்.  எனவே மனம் அடங்கத் தலையின் மேலிடத்தில் பொருந்துவதே சொரூபத்தை அறிவதாகும்.
 
0626: சமாதி நிலையில் சிவனுடன் கூடியிருத்தல் :                                                                          நம்பிக்கைக்கு உரியவனும், முதற் பொருளாக விளங்குபவனும், நான்கு வேதங்களை ஓதியவனும், செம்பொன்னின் நிறத்தில் விளங்கும் சோதியைப் போன்றவனும் ஆன சிவபெருமானின் அன்பு
மிகக் கொண்டு ஆசையை அடக்கிப் போய்ச் சகஸ்ரதளத்தில் நின்று பயிற்சியாளர் நிட்டையில்
இருந்தார்.
 
0627: குண்டலினி சத்தியே வெவேறு கோலமுடன் விளங்கும் :
குண்டலினி நான்கு இதழ்களுடன் கூடிய மூலாதாரத்தில் உள்ள முக்கோண வடிவு கொண்டது.  அது அபானன் சத்தி கெட்டு மூச்சுடன் சேரும் இடத்தில் பெருமை மிக்க அர்த்த சந்திரனில் நெற்றியின் நடுவே உள்ள வடிவில், அர்த்தசந்திரன் முதல் உன்மனி ஈறாக உள்ள கலைகளாய் விளங்கும்.
 
0628: திங்கள் மண்டலத்தில் சிவமாய் இருக்கலாம் :
ஒருவர் கற்பனைகளை விட்டு மூலக்கனலுடன் மேலே போய்ச் சிற்பத்திறம் உடைய இப்புவனங்களை எல்லாம் படைத்துக் கொடுத்த பேரொளி அழகனான சிவத்தைத் தேடி மதி மண்டலத்துடன் பொருந்தித் தான் என்றும் சிவன் என்றும் பேதமாகாது சாந்தம் பொருந்திய சமாதி நிலை அடையலாம்.
 
0629: நடுவு நிலைமை தானே வந்து சேரும் :
வாழ்க்கையை மாற்றியவரிடம் ஆன்மா நன்கு விளங்கும்.  ஆன்மா சிவத்தைச் சார்ந்திருத்தலால் திருவருட்சத்தியால் அங்குக் கூடியிருக்கும் காமக்குரோதங்கள் முதலியவை அகன்று போய் விடும்.  சமாதியில் சேர்ந்தவர்க்கு நடுவு நிலைமையானது தானே வந்து சேரும்.
 
0630: சமாதியில் சீவனின் நிலைமை :
ஒளியுடனே ஒப்பில்லாத சுடராய் நின்ற சிவமும் சத்தியும்,  உள்ளே விளங்கும் மலமற்ற ஆன்மாவும் சமாதியில் ஒன்றே; படைப்புக்கு முதல்வனான பிரமனும் நீல மேனியுடைய திருமாலும், ஆதியான சிவத்திடம் அடிபணிந்து அவனிடம் என்றும் நீங்கா அன்பைக் காட்டுவர்.
 
0631: தான் எனவும் சிவம் எனவும் வேறுபாடாக எண்ணாதவர்க்குச் சமாதி தேவையற்றது :
சமாதியில் இருப்பவர்க்குப் பல யோகங்கள் கை கூடும்.  எப்போதும் இறைவனிடம் கூடியிருந்தால் சமாதி வேண்டியதில்லை.  ஆன்மாவாகிய தான் சிவமே என்பதை உணர்ந்தால் சமாதி வேண்டியதில்லை. சமாதியினால் அறுபத்து நான்கு கலை ஞானங்களும் வந்து சேரப் பெறுவர்.
 
10. அட்டாங்க யோகப் பேறு. (அட்டாங்க யோகத்தினால் வரும் நன்மைகள்.):
 
0632: வேண்டியவர்க்கு வேண்டியபடி அருள்வான் :
சகஸ்ரதளத்தில் விருப்புடன் வீற்றிருக்கும் சிவனது திருவடியை எவ்வாற்றானும் விரும்பியவர் விண்ணுலகை அடைவர். உமையம்மையார் மகிழ நடனம் செய்யும்காளையூர்தியான சிவம் இவன் எதனை விரும்பி வந்தான் என்று கருதி அவன் விரும்பியதை அருள் செய்வான்.
 
0633: சிவபதம் கிட்டும் :
திருவடியைப் பற்றி நின்று அன்பு கொண்டு, சிவத்தின் புகழையே கற்றுக் கேட்டிருந்து அங்கு அப்படியே சிந்தித்திருப்பவர்க்கு, முனிவர் எல்லாரும் எழுந்து எதிர் கொண்டு அழைக்கத் தெளிவான சிவபதம் சேரவும் கூடும்.
 
0634: சிவயோகம் மேற்கொண்டவர் இம்மையிலேயே இன்பம் அடைவர் :
சிவத்தை நோக்கி வருத்தப்பட்டுத் தவத்தை ஆற்றுபவர்,  " தேவர் உலகுக்குத் தலைவனாய், தேவர் உலகம் செல்லக் கூடிய தகுதியுடையவன் இவன் ஆவான்" என்று கூறும்படி,  இறைவனது அருளால் - குளிர்ந்த முரசும் வேய்ங்குழலும் ஒலிக்க - இந்த உலகத்திலேயே இருந்து இன்பம் அடைவர்.
 
0635: சிவகதியை அடையும்போது தேவர் எதிர்கொள்வர் :
செம்பொன் ஒளியுடைய சிவகதியை அடையும் காலத்தில் தேவர் கூட்டம் பூரண கும்பத்துடன் வந்து எதிர் கொண்டழைக்கும்;  எங்களுடைய பொன் மண்டலம் என்ற புத்தி மண்டலத் தலைவன் இவனே ஆவான் என்று யாவரும் பாராட்டுவர்.இன்பச் சேர்க்கையில் கூடியிருக்கலாம்.
 
0636: பக்குவம் வந்த போது சிவபதம் கிட்டும் :
சிவகதியை அடையும் போது திக்குப் பாலகர்கள் ஆகிய தேவர்கள் 'இவன் யார்? என்று வினவ, சிவபெருமான் 'நாமே இவன்' எனக் கூற, அழகு மிக்க தேவர்கள் அனைவரும் எதிர் வந்து அழைக்க,  கருநிறம் வாய்ந்த  கழுத்தை உடைய சிவபெருமானைப் பயிற்சியாளர் நேரில் கண்டவர் ஆவர்.
 
0637: எங்கும் வல்ல சித்தர் :
நல்வழியை நாடி எமனிடம் போகும் வழியை மாற்றும் பிரணவ உபாசகரும், குறையாத கொடையில் வழிவழி வந்தவருமாகிய இந்த யோகியர்க்குத் தேவர் உலகத்தில் உள்ள எட்டுத் திசையில் சென்றாலும், தேவலோகம் பூலோகம் போன்று தெரிந்த வழியாகவே இருக்கும்.
 
0638: சிவ யோகியரே திருமால் முதலியவர் வாழும் இடம் :
அறிதுயில் கொண்ட திருமாலுக்கும், ஏழ் உலகங்களைப் படைக்க வல்ல பிரமனுக்கும், வன்மையால் அழிந்து அடையாது இருக்கும் உருத்திரனுக்கும், அமுதம் உண்டு மகிழ்ந்திருக்கும் தேவர்களுக்கும் சிவகதியைப் பெற்றவரே இடம் ஆகும்.
 
0639: சிவபோதத்தில் அடங்கியிருப்பதே சமாதி :
ஆன்மாக்களுக்கு ஆணவ மல மறைப்பால் உண்டாகும் ' இறையின்மை, அற்ப அறிவுடைமை, அளவுபட்ட தன்மை, மாயையுடன் கூடிய தன்மை, சிறிதாற்றல்  உடைமை, சுதந்திரம் இன்மை, காணாமை' ஆகிய துன்பம் ஏழையும் கடந்து, ஆரியனான சிவத்தினது ஏழு உபாதிகளான 'இறைமை, முற்றறிவு உடைமை,
எங்கும் தானாதல், இயல்பாகவே மாயையின்மை, வரம்பில்லாத ஆற்றல், தன் வயத்தனாதல், ஒன்றி உணர்தல் ஆகியவற்றைப் பொருந்தி, பரம்பரையாக வரும் சுத்தமாயையானது கெட, தவத்தில் இயங்கும் தன்மை உடைய பொருளைச் சேர்வதே சமாதியினது பயனாகும்.
 
11. அட்டமாசித்தி.  (அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, பிராகாமியம்,     ஈசத்துவம், வசித்துவம்  ஆகிய எட்டு பெரிய சித்திகள்) :
                                                                                                                                                                          0640: இறைவனை வணங்க எட்டு சித்திகள் கிட்டும் : மன ஒருமைப் பாட்டை அடைந்து, எட்டுத் திசைகளிலும் மேலான பொருளாய் விளங்கும் சிவபெருமானை, "அவனே பரம்பொருள் ஆகும்" என்று ஆராய்ந்து துணிந்து அந்த எட்டுத் திக்குகளிலும் எம் சிவத்தை வணங்கும் சீவர்,  எட்டுப் பெருஞ்சித்தி களைத் தாமே அடையப் பெற்று, எங்கும் அட்டமாசித்திகளை நிலை பெறச் செய்பவராவார்.
 
0641: பிறவி நீங்கப் பெறலாம் :
தேவர்களின் பக்குவத்துக்கு ஏற்ப வழங்கும் பண்புடைய சிவனின் திருவடிகளே அடைக்கலம் எனக் குற்றம் அறத் தூய்மையான பரவெளியைக் கண்டேன்.  எனக்கு அரிய பொருள் எதுவும் இல்லை.  சிவன் எட்டுப் பெருஞ் சித்திகளையும் எனக்கு அருளிப் பிறவியை நீக்கியருள் செய்தான்.
 
0642: சிவப் பேறு கிட்டும் விதம் :
குருவின் அருளால் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சத்தி - சீவசக்தியுடன் பொருந்திக் சுவாதிட்டானம் வழியாகப் பாய்வதைத் தடுத்து -  நல்ல சமயத்தை உண்டாக்கி,  தியான முறையில்  சாம்பவி,  கேசரி  என்ற இரு முத்திரைகளுள் ஏதேனும் ஒன்று சேர - பெரிய சிவகதியைப் பெற்று - அதன் பேறான எட்டுப்
பெருஞ்சித்திகளையும் பெறலாம்.
 
சாம்பவி முத்திரை:  மூக்கு நுனியான நாசித் துவாரத்தில் கவனத்தை நிறுத்தி அநாகதச் சக்கரம் என்ற இதயத்தைப் பார்த்திருத்தல்.   கேசரி முத்திரை:    கண் பார்வையைப் புருவ நடுவில் நிறுத்தி அஞ்ஞா
சக்கரத்தைக் கவனித்திருத்தல்.
 
0643: பரகாயம் பெறலாம் :
சீவன் - வான் முதலிய பூதங்கள், கலை, காலம், மாயை ஆன தத்துவங்கள் இவற்றில் தோயாமல் அகன்று - ஆன்ம அறிவானது பொருந்தி – நீங்காத சத்தியைக் கூடினால் அழியாது மேன்மையான உடலைப் பெறலாம். 
 
0644: கன்ம யோகம் எட்டுப் பெருஞ் சித்திகளைத் தரும் :
கன்ம யோகம் இருபதினாயிரத்து எண்ணூறு வேறுபாடுகளைக் கொண்டது.  இவ்வாறு வந்தவை உடல் உழைப்பாகும்.  அரிய இவை அட்டாங்க யோகத்துள்அடங்கி எட்டுப் பெரும் சித்திகளை அளிக்க வல்லவையாகும். 
 
0645: கேவல கும்பகம் சித்திக்கப் பெறுதல் :
சந்திர நாடியான இடைகலையில் பன்னிரண்டு அங்குலம் அளவாய் இழுக்கப் பெறும் மூச்சில், பிங்கலை வழியாக வெளிப்படுதல் நான்குஅங்குல அளவு போக எட்டு அங்குல அளவு உள்ளே தங்கும்.  இதைப் பன்னிரண்டு ஆண்டுகள் உலகப் பற்றை விட்டுக் கவனித்து வரின் உறுதியான எட்டுப் பெரும் சித்திகளை
அடையலாம்.   
 
0646: உறவினர் சூழலாளும் அறிவாலும் சித்திகளை அடைய முடியாது. :
நமது உறவினர் நம்மைச் சூழ்ந்து இருந்தால் நம்மை அடைவது பந்தமாகும்.  சூழ்ந்துள்ள உறவினர், மிகுந்த கலையறிவு,  நுட்பமான அறிவு,  நிறையறிவு  என்ற இவற்றால் எண் பெரும் சித்திகளை  அடையமுடியாது. .  பேதமாய்ப் பெருகிய ஒலியைப் பன்னிரண்டு ஆண்டு கேட்பதே சித்தியை அளிக்கும்.
 
0647: ஏழு, எட்டு, ஒன்பது  ஆண்டுகளில் அமையும் பயன் :
நாத தரிசனம் கிட்டப் பெற்றவர் ஏழு ஆண்டுகளில் சண்டமாருதம் போல்
செல்லும் வேகத்தைப் பெற்று,  நடை தளராமல் பல யோசனை செல்லும் வலிமை வாய்க்கும்.  எட்டாம் ஆண்டில் நரை மூப்புத் தோன்றா.  ஒன்பதாம் ஆண்டில் அழியாத உடம்பான அயல் உடலில் புகுதல் ஆகும்.
 
0648: பத்து, பதினொன்று பன்னிரண்டு ஆண்டுகளில் பெரும் சித்திகள் :
பத்து ஆண்டு தியான சத்தியால் கீழே போகும் சத்திகளை மேலே நிரப்பிக் கொண்டு உருத்திரன் போல் பயிற்சியாளர் விளங்குவர். பதினோராண்டில் எட்டுச் சித்திகள் உண்டாகும்.  பன்னிரண்டு ஆண்டில் சிறப்புடைய மேல் ஏழு உலகங்களிலும் கீழ் ஏழ் உலகங்களிலும்  எங்கும் போய் அழகுடன் நிறைந்து நிற்கும் தகுதி  தியானிப்பவர்க்கு ஏற்படும்.
 
0649: யோகியர் பெறும் எட்டுச் சித்திகள் :
யோகியர் பெறும் எட்டுச் சித்திகளாவன:
1. அணிமா        -           - மிக நுட்பமான உடல் ஆதல்.
2. மகிமா           -           - மிகவும் பருத்தல்.
3. கரிமா            -           - மிகவும் கனமாதல்.
4. இலகிமா        -           - மிகவும் இலேசாதல்.
5. பிராத்தி         -           - அழியாத உடலை அடைதல்.
6. பிராகாமியம்   - பிற உடலில் புகுதல்.
7. ஈசத்துவம்      -           - யாவருக்கும் மேம்பட்டிருத்தல்.
8. வசித்துவம்     -           - எல்லாவற்றையும் தன் வயம் ஆக்குதல்.
அணிமா, மகிமா, கரிமா என்பவை உடலால் அடைவன.
மற்றவை மனத்தால் அடைவன.  
 
0650: முத்தி சித்திக்கும் :
சிவயோகியான தான் - அணுவின் தன்மையை அடைந்து - பல உயிர்களைத் தாங்கிய காலத்திலும் - அவற்றை வாங்கி ஒடுக்கிய காலத்திலும் - ஒரு மாற்றமும் இல்லை.  சித்திகளை உடைய யோகியருள் எழுந்த "ஓம்" என்ற பிரணவ நாதம் சகஸ்ரதளத்தை அடைந்து  மேலே எழுந்து சென்ற போதே முத்தி முற்பட்டு வந்து சேர்ந்ததாம். 
 
0651: பிரணவ யோகத்துக்கு உரிய காலம் :
காலம் என்பது விநடியைக் குறிக்கும். அறுபது விநாடி ஒரு நாழிகை. சூரியன் உதயம் முதல் முந்நூற்றறுபது விநாடியான முப்பது நாழிகை பகல் பொழுதாகும்.  பகல்காலத்தில் படைப்புக் கிரமமான வான், காற்று, தீ, நீர், பூமி என்ற முறையில் ஒவ்வொரு பூத காலமும் ஆறு ஆறு நாழிகையாகக் கொள்ள வேண்டும்.  இரவு முப்பது நாழிகையில் நிலம், நீர், தீ காற்று, வான் என்று ஆறுஆறு  நாழிகையாய்
இலயக் கிரமம் பொருந்தும்.  விடியலில் சூரிய உதயத்துக்கு முன்பு உள்ள ஆறு நாழிகையும் விடிந்த பின்
உள்ள ஆறு நாழிகையும்  பிரணவ யோகத்துக்கு உரிய காலம். அந்த காலத்தில்கொப்பூழில் நிற்கும் சூரியனைத் தலைக்கு கொண்டு போக விந்துவும் நாதமும் அமையும்.
 
0652: உடலைக் கடந்து மேல் நிலையில் இன்பம் அடைவர் யோகியர் :
மனம் வெளியே செல்லாமல் மாறுபட்டுச்சிவமாகி முத்தியை ஆராய்ந்து அடைந்த பிரணவ வழிபாட்டாளர் சிவனுடன் கூடிய முத்தர் ஆவார்.  அவர்கள் ஐம்பொறி களுடன் தொடர்பில்லாதவர்களாதலால் மனத்தூய்மையைப் பெறலாம்.  அன்னார் அறிவு என்ற வானத்தில் தத்துவம் யாவற்றையும் விட்டுச் சிவத்துடன் பொருந்தி இருப்பர்.
 
0653: வாயுக்கள் ஒத்துச் சமமாய் இருக்க வேண்டும் :
உடலில் பிராணன், அபானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், உதானன் என்ற ஒன்பது வாயுக்களும் மிகுதிப்படாமலும், குறையாமலும் ஒத்து இயங்க வேண்டும்.  இவற்றோடு பத்தாவதான தனஞ்செயன் என்ற காற்று இந்த ஒன்பது வயுக்களிலும் ஒத்து கூடியிருக்கும் வரை உடலும் உயிரும் நீங்காது.
 
0654: தனஞ்சயன் நீங்கின் உயிர் நீங்கும் :
தனஞ்சயன் என்னும் வாயு மற்ற வாயுக்கள் உள்ள நாடிகளிலும் பொருந்தி இருக்கும்.  அ•து இருநூற்று இருபத்து மூன்றாவது புவனமான அகந்தை என்ற மண்டலத்தில் பொருந்தியிருக்கும். எல்லா வாயுக்களும் உடலை விட்டு நீங்கியபின்னரே தனஞ்சயன் நீங்கும்.  சீவர் இந்த தனஞ்சயன் உடலை விட்டு நீங்காது போற்றிக் காப்பர். இந்த வாயு இல்லாது போனால் உடல் வீங்கி வெடித்து விடும்.
 
0655: தனஞ்சயன் திரிபால் உண்டாகும் நோய்கள் :
தனஞ்சயன் என்ற வாயு திரியின் நோய்கள் உண்டாகும். உடலில் வீங்கும் கட்டி, புண், குட்டம், வீக்க நோய்கள் ஆன சோகை, காலில் வாதம், கூன், முடம், கண்ணில் பொருந்தி வீங்கும் நோய்கள் என்னும் இவை தனஞ்சயன் மாற்றத்தால்ஏற்படுவன.
 
0656: கூர்மன் வாயு திரிபால் உண்டாகும் நோய்கள் :
கண்களில் உண்டாகும் ஆணிகள் என்ற பூக்கள், நாசம் என்ற நோய் தனஞ்சயன் திரிபால் ஏற்படுவன அல்ல.  கண்ணில் கூர்மன் என்ற வாயு பொருந்தாவிட்டால் இந்த கண் நோய் உண்டாகும்; ஒளியும் இருக்காது.
 
0657: உருத்திரன், திருமால், பிரமன் உணர்ந்திருந்தனர் :
கண்கள், இதயம் என்பனவற்றில் நாடியின் ஓசை விளங்குகின்றது. சிறு உடுக்கை போன்ற துடியால் அமையும் ஒலியை உண்டாக்குகின்ற சுடரையுடைய பேரொளியைத் தேவர்கள் தலைவர்களாகிய உருத்திரன், திருமால், பிரமன் ஆகியோரும் இடைவிடாமல் அங்குப் பொருந்தி உணர்ந்திருந்தனர்.
 
0658: ஒன்பது வாயில்களையும் அடைத்திருந்தால் உடல் அழியாது :
இரு கண்கள், இரு காதுகள், இரு நாசித் துளைகள், ஒரு வாய், ஒரு குதம், ஒரு குய்யம் (கருவாய்) முதலிய ஒன்பது வாயில்களையும் உடைய உடலில் இடைகலை முதலான ஒன்பது நாடிகள் ஒடுங்குவதற்கான ஓர் இடம் சுழுமுனையாகும்.  அங்கு அவை தங்கியிருக்கத் தவம் செய்ய வல்லவர்க்கு உடல் நன்மையை
அடையும்.
 
0659: குருவினால் உபதேசம் பெற்றவர்க்கு ஏற்படும் பயன் :
கீழே உள்ள சிறந்த குண்டலினியான தீயைச் சுழுமுனை நாடியை நோக்கிச் செல்லும்படி செய்து, சூரிய கலையில் இயங்கும் பிராணனைச் சந்திர கலையில் செல்லும்படி செய்து ஏழு உலகங்களையும் தாங்க யோக நெறியில் நிற்பார்க்கு உரைத்தோம்.  இம்மந்திரம் "திரிபுக்கரணி"யைக் கூறுகின்றது.
 
0660: சுழுமுனைத் தியானம் செய்பவர் பிறர்க்கும் பயன்படுவர் :
பிரமரந்திரத்தால் விளங்கும் சிவசத்தியை நாடி, வலையில் அகப்பட்டு எங்கும் போகாமல் நிற்கும் மானைப் போன்று, மூச்சுக் காற்றைச் சந்திர கலை சூரியகலையில் செலுத்தாது சுழுமுனையில் செலுத்தினால், தமக்கு உண்பதற்கும், பிறர்க்குப் பயன்பட விலைக்கு விற்பதற்கும் சேர்த்து வைத்த
விதை போல் பயன்படும்.
 
0661: பிரணவ உபாசத்தால் உண்டாகும் பயன் :
மூலாதாரத்தினின்று சகஸ்ரதளத்தை எய்திச் சிவமான ஒரு பொருளைக் கண்டு வணங்கியவர் - அங்குள்ள நாடியின் உள்ளே நாதத்தை வெளிப்படுத்துவர். மேலும் அங்கே உண்டாகும் அமுதத்தையும் உண்டு உடல் என்னும் பாசறையில் உள்ள காமம், குரோதம் முதலிய ஆறு பகைவர்களைச் சிறைப்படுத்துவர்.
 
0662: பரை ஒளி விளங்குவதை அறிபவர் :
சகஸ்ரதளத்துடன் கட்டப்பட்டு  சுழுமுனை நாடியில் சீவர்களை உலகமுகப்படுத்திக் கொண்டிருந்த வாமை, சேட்டை, ரௌத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரமதனி, சர்பூததமனி, மனோன்மணி ஆகிய ஒன்பது சத்திகள் - சீவர்கள் பக்குவப்பட்ட பின்பு தம் செயல் அற்றுச் சத்தியுடன் பொருந்தி நின்றனர்.  அச் சமயத்தில் மூலாதாரத்தில் செயற்படுத்திக் கொண்டிருந்த குண்டலினி தொண்டைச் சக்கரத்தின் வழியாய்ப் போய் ஆஞ்ஞா சக்கரத்தை அடைந்து முழு சக்தியாய் விளங்கியது.
 
0663: பராசத்தியே தொழிற்படுத்துபவள் :
பராசத்தியே ஏழு கன்னியராய் இச்சை ஞானம் கிரியை ஆகிய வேறுபாட்டினால் இருபத்தொரு அழகு மிக்க கன்னயரானாள்.  அந்த இருபத்தொரு கன்னியரே ஐந்து தொழிலுக்குமாக எழுந்து நூற்றைந்து கன்னியராகி  திருமால், பிரமன், உருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்னும் ஐவருக்கும் காரணமாகி அவர்களுடன் விரிந்து நிற்பர்.
 
0664: பராசக்தியின் சயலினின்றும் நீங்கி விளங்குவர் :
விரிந்து நின்ற பராசக்தி பின்பு ஒடுங்கிப் பலவகையான போகங்களையும் விளையும்படி செய்தாள்.  மறைந்து நின்று பின் சிவத்துடன் ஒடுங்கியிருப்பின் பூமி முதலிய பூதங்களும் பரவிப் பின் ஒடுங்கி விடும்.  எனவே,  நீ மேல் எழுகின்ற நாதத்தில் ஓங்கி விளங்குவாயாக.
 
0665: விந்துத் தானத்தில் விளங்குக :
நாதத்தில் ஒடுங்கியவர்க்கு இடை பிங்கலை அடைபட்டுச் சுழுமுனை திறக்கும்.  மூச்சு அவர்க்கு மெல்ல இயங்கும். ஆறு ஆதாரங்களும் ஏழு சத்திகளும் நீங்கிச்சந்திர மண்டலத்தில் புருவத்தின் நடுவில்
விந்துத் தானத்தில் அடங்கும்.
 
0666: சிவன் தன்னை அறியச் செய்தல் :
உள்ளம் ஒருமை அடைந்து புருவத்தினது நடுவில் இருப்பின் - மூச்சுக்காற்றுஅப்போது கட்டுப்பட்டு நின்று விடும்.  வெளி நோக்கம் இல்லாது அகநோக்கம் கொண்ட உயிருள் கடமை இயற்றும் பெருமானும் தன்னை அறியச் செய்வான்.
 
0667: சுழுமுனை தூண்டா விளக்காகும் :
சுழுமுனை பாயும் இடத்தில் நாத ஒலியுடனே போய் அங்கு நிலை பெற்றுள்ள சிவசத்தியைப் பொருந்திப் பாசறையில் உள்ள இருள்என்ற பகைவரைக் காட்டும் பெருமை வாய்ந்த சுழுமுனையே தூண்டா விளக்காகும்.
 
0668: அணிமா முதலிய எண் சத்திகள் :
யோகியர் பெறும் எட்டுச் சித்திகளாவன:
1. அணிமா        -           - மிக நுட்பமான உடல் ஆதல்.
2. மகிமா           -           - மிகவும் பருத்தல்.
3. கரிமா            -           - மிகவும் கனமாதல்.
4. இலகிமா        -           - மிகவும் இலேசாதல்.
5. பிராத்தி         -           - அழியாத உடலை அடைதல்.
6. பிராகாமியம்   - பிற உடலில் புகுதல்.
7. ஈசத்துவம்      -           - யாவருக்கும் மேம்பட்டிருத்தல்.
8. வசித்துவம்     -           - எல்லாவற்றையும் தன் வயம் ஆக்குதல்.
அணிமா, மகிமா, கரிமா என்பவை உடலால் அடைவன.  மற்றவை மனத்தால்
அடைவன.
 
0669: சந்திர மண்டலத்தில் அமுதம் உண்பர் :
அட்டாங்க யோகத்தால்  -  அடக்கியாள இயலாத மூச்சுக் காற்றை அடக்கி ஆண்டால்  எண் பெரும் சித்திகளையும் அடையலாம்.  மூலாதாரத்தில் உள்ள குண்டலினியானது சுழுமுனை நாடி வழியாகப் போய் அக்கினி மண்டலம் சூரிய மண்டலம் ஆகியவற்றைக் கடந்தால் மேல் உள்ள சந்திர மண்டலத்தில் உள்ள அமுதத்தை உண்ணக் கூடும்.   மூச்சை அடக்கினால் எட்டுப் பெரும் சித்திகளும் ஒருவர்க்குக் கிட்டும்.
 
0670: திரிபுரைச் சத்தி அட்டாங்க யோகப் பயனை அளிப்பாள் :
எண் வகையான சித்திகளும் தானேயான திரிபுரைச் சத்தி அருளின் இயல்பால், பழகும்படியான அட்டாங்க யோகத்தால்  எட்டுப் பெரும் சித்திகளன்றி, ஞானங்கள் எல்லாம் வெளிப்படும்.   சித்தியும் புத்தியும் உண்டாகப் பெறும்.
 
அணிமா (நுண்மை)
 
0671: ஞானம் கைகூடப் பெற்றால் அடையும் நன்மை :
எட்டுப்பெரும் சித்திகளுடன் எல்லாம் வல்ல பரஞானமும் கை வரப்பெற்றால் அவர் சித்தர் ஆவார்.  இவர்கள் சிவலோகத்தை அடைதலால் இவர்களின் விருப்புப் பொருளான சிவத்தை கண்டு அவரில் அழுந்தியிருப்பர்.ஞானம் உண்டானால் சித்தி கைவரப் பெறும்.
 
0672: விரும்பிய உலகத்தை அடைபவர் :
மலை என்ற தலையில் சந்திர சூரிய கலைகளை மாற்றி, அடித்த முளையைப் போன்று, சுழுமுனையை ஆக்கி, விந்துவின் நீக்கம் இல்லாது இருக்க வல்லவர் நரம்பில்லாத பிரணவ உடல் பெற்று விரும்பிய நல்ல உலகத்தை அடைவர்.  அந்த உலகம் அணிமா முதலான எட்டுப் பெருஞ்சித்திகளை அளிக்க வல்லதாகும்.
 
0673: அணிமா கைவரப்பெறுமாறு :
விந்து கழிவு இல்லாமல் சேமித்து வைத்து ஓராண்டு யோக முயற்சியில் ஈடுபடின் நூல்களினால் புகழ்ந்து பேசப்படுகின்ற அணிமா என்ற சித்தி கிட்டப் பெறும்.  அது கைவரப் பெற்ற சித்தனும் மெலிந்த நுட்பமான பஞ்சை விட நுட்பமாய் மெலிந்து இருப்பான்.  அத்தகையவனை வெல்ல முடியாது.
 
இலகிமா  (மென்மைத்தன்மை)
 
0674: ஐந்தாண்டில் இலகிமா கைகூடப் பெறும் :
ஆக்கத்தைத் தரும் இயல்புடைய பராசத்தியே - மூலாதாரத்தினின்று மேலே போகும் எல்லாத் தத்துவங்களிலும் ஆதாரமாய் இருக்க,  செல்ல வேண்டிய காலங்கள் தனது வயப்பட்டு நின்றால், செல்லும் ஐந்தாண்டுகளில் 'இலகிமா'கை வசப்படும்.
 
0675: சிவப் பரம் பொருளை ஆன்மா தரிசிக்கும் :
இலகிமா என்ற சித்தினைப் பெற்று இறைவனைக் கண்டபின்பு ஆன்மா தான் ஒளியாய் விளங்கி அந்தப் பேரொளியில் திளைத்திருப்பான்.  இவ்வாறு  பால் போன்ற ஒளிப் பொருளாக எங்கும் பரவி நின்ற ஆன்மா எல்லாவற்றுக்கும் மேலான சிவபரம்பொருளைத் தரிசிக்கும்.
 
மகிமா   (பருமை உடைமை)
 
0676: திருவருளால் மகிமா கைகூடும் :
மெய்யான ஞானத்தை உணர்த்திய விந்துவடிவான அருட்சத்தியோடு, 'தத்' எனக்குறிப்பிடும் நாதவடிவான சிவம்கூட மறைந்தபொருளாகிய மகிமா, ஓர் ஆண்டில் உள்ளங்கையிலே உள்ள பொருள் போலக் கிட்டி விடும்.
 
0677: கால தத்துவம் கட்டுப்படுத்தாது :
இடைகலை பிங்கலை என்ற இரண்டு நாடிகளைப் பெற்று அமையும் சுழுமுனை, தலையின் மேல் போய் அங்கு உள்ள ஒளியைக் கண்ட பின்பு ஆகின்ற ஆயுட்காலங்கள் அழியா.  இனி வரக் கூடிய ஆயுட்காலத்துக்கு வெளியே தான் நின்ற பின்னர், மற்றத் தத்துவம் அனைத்தும் தன் வழியாம்.
 
0678: மகிமா பெற்றவன் வழி உலகம் இயங்கும் :
மகிமா என்னும் சித்தி பெற்றவன் வாயிலாக ஞானம் தழைத்திடும்.  அவன் வாயிலாக உலகம் துயர் நீங்கிச் செழுமை அடையும்.  அவ்வாறு தன் வாயிலாகச் செழுமையுற்ற பொருள் எல்லாம் தன் வயப்பட்டு நிற்க அவன் சிவனருள் வசப்பட்டு நிற்பான்.
 
பிராத்தி  (விரும்பியவற்றை அடைதல்)
 
0679: வேண்டியதை அடையலாம் :
பராசத்தியுடன் தூலமாய்க் காணப்படும் பொருள்கள் யாவும் நுண்மையாய் ஒடுங்கி நின்றன.  அத்தகைய நுண்மையான ஒளிப் பொருள்களைக் கண்டு ஓர் ஆண்டு தாரணை செய்தால், அத்தாரணையில் வெளிப்பட்ட சித்தியே வேண்டியவற்றை அடையச் செய்யும்.   நுண்ணொளியைக் கண்டவர் உலகப் பொருள் எல்லாம் தம்மிடம் பொருந்தி இருப்பதை அறிவார்.
 
கரிமா: (விண்ணின் தன்மை)
 
0680: காலத்தை வென்றவர் :
அத்தகைய மின் ஒளியைக் கண்ட பின்பு, விரிந்த ஆயிரம் இதழ்த் தாமரையில் உலகப் பொருளின் விரிவை எல்லாம் காணலாம்.  அப்போது பொருந்துகின்ற கால தத்துவம் புறம்பாக நின்றது.  கழிகின்ற காலங்கள் அதனால் கழியா.
 
0681: மின்னொளி கண்டவர் இயல்பு :
மின்னொளியைக் கண்ட பின்பு பிற இடத்துக்குப் போக வேண்டியதில்லை.  செல்வது இல்லாததால் வருவதும் இல்லை.  இறப்பது ஒன்று இல்லை.  இறப்பு இல்லாததால் பிறப்பதும் இல்லை.  தாமதம் முதலிய மூன்று குணங்கள் இல்லை.   உண்மை உணர்வதற்கு பிரமரந்திரத்தின் உள் தொளையான சுழுமுனையில் விளங்கும் பலவகைப்பட்ட ஒளிகளும் இல்லாகும்.
 
0682: பராசத்தி உள்ளிருப்பதால் பயன் :
அத்தகைய பராசத்தியுடன் ஆன்மாவானது பொருந்தியிருந்தால் தத்துவக்கூட்டங்களை அமைக்கும் பூதக் கூட்டங்கள் எல்லாம் நீங்கும்.    உள்ளம் குவிந்து பராசத்தியுடன் ஓர் ஆண்டு இருந்தால் கூடு விட்டுக் கூடு பாய்தலான பரந்த அயல்  உடல் புகுதல் யோகியர்க்கு வாய்க்கும்.
 
பிராகாமியம்  (நிறைவு உண்மை)
 
0683: துவாதசாந்தத்தில் இருப்பவர் வியாபகம் பெறுவர் :
மூலாதாரத்தில் மூலக்கனலை உடையவர் ஆன்மாவிடம் தன்னை விளக்கிக் காட்டும் ஒளியிருப்பதை அறியமாட்டாதவர் ஆவார்.   அதனை எங்கும் ஒளியாகத் தரிசித்திருப்பவர்க்குத் தலைக்கு மேல் விளங்கும் சிவ ஒளியும் அதனால் வீடு பேறும் கிட்டுதல் எளிதாகும்.
 
ஈசத்துவம்  (ஆள்பவன் ஆதல்)
 
0684: சதாசிவத்தின் இயல்பைப் பெறுவர் :
சீவர்களிடம் என்றும் நிலைபெற்றிருக்கும் சிவசத்தியுடன் நுண்ணிய பார்வைக்குப்புலப்படும் ஒளி அணுக்கள் யாவற்றையும், தலைக்கு மேல் உள்ள விந்து மண்டலத்தில் வெவ்வேறு வகை ஒளி பாயவதை  ஓராண்டு செய்வாரா னால் பழைய உடலில் பொருந்திய சதாசிவ தத்துவம் வாய்க்கப் பெறும்.
 
0685: ஈசத்துவம் பெற்றவர் இயல்பு :
சந்திரகலை வளரப் பெற்றவன் ஒளியை நெற்றி நடுவில் அமையப் பெற்றவன்.  அவன் அந்த சந்திரனைப் போல் தண்ணொளியுடையவன் ஆவான்.  வளரும் சந்திரகலை முழுமை பெற்றிட்டால் சந்திரகலை விளங்கப்பெற்ற சீவன் சதாசிவ நிலையைப் பெற்றவன் ஆவான்.
 
0686: தம்மைத் தாம் ஒப்பர் :
ஈசத்துவம் பெற்றவர் படைப்புத் தொழிலைச் செய்ய வல்லவர் ஆவார்.   அவரே காத்தலைச் செய்பவர் ஆவார். அவரே அழித்தலையும் இயற்றவல்லவர் ஆவார்.  அவரே தமக்குத் தாமே நிகர்க்கும் தன்மை உடையவர் ஆவார்.
 
0687: சந்திர கலையின் ஒளியைக் கண்டால் மெய்ப் பொருளைக் காணலாம் :
குளிர்ச்சியான கதிர்களுடன் கூடிய சந்திர கலையில் விளங்கும் ஒளியில் – பலவகையாய்க் காணப்படும் பஞ்சபூத அணுக்களை - ஓராண்டுக் காலம் வேறு வேறாறக் காணாமல் - பால் வண்ணனின் நீல ஒளியைக் கண்டால் ஆன்மா சிரசின் மேல் ஒளியாய் விளங்கும்.
 
வசித்துவம்  (தன்வயம் ஆக்கும் தன்மை)
 
0688: சிவமாம் தன்மை உண்டாகும் :
உண்மைப் பொருளாகத் தாரணை முதலியவற்றால் உண்டாவது எது என்றால், நல்லது என்று பாராட்டப்படும் கவர்ந்திடும் தன்மையாகும்.  தன் விருப்பின்படி நடக்கச் செய்யும் உயிர் இனத்துக்கு எல்லாம் சிவமான தன்மையைப் பெறுவான்.
 
0689: வசித்துவம் பெற்றவன் இயல்பு :
சிவத்தன்மை பெற்றுச் சிறப்புற்ற சித்தன் மிகவும் நுண்மையதாகிய தனது ஆன்மாவை அறியின் -  பொன்னொளியுடன் கூடிய உடலைப் புலன்களின் குறும்புகளினின்றும் விடுபட -  உலகுக்கு நன்மையைச் செய்கின்ற சதாசிவநாயகியைக் காண்பான்.
 
0690: நல்ல கொடியைப் போன்ற நன்மையைச் செய்யும் சதாசிவ நாயகியுடன், அக்கொடி போன்ற சத்தியைத் தன்னிடம் நிலை பெறுவதாக ஓராண்டு தியானம் செய்பவன் பொன்னொளி என்ற உலகங்களில் நினைத்த அளவில் போய் வருகின்ற சிவந்த ஒளியைப் போன்ற காமேசுவரனின் தன்மையினை அடைவான்.
 
0691: புவனத்தைப் படைக்கும் ஆற்றலைப் பெறுவர் :                                                                      யாவற்றையும் தன்வயப்படுத்தும் தன்மை வந்தபின்பு ஆயிரம் இதழ்த்தாமரையில் தங்கியுள்ள
தன் மாத்திரை உருவான ஒளிகள் - அதனதன் தன்மைக்கு ஏற்றபடி உலகங்களாய் விரிந்து நிற்கும்.  பெருமையுடையாய்!  வசித்துவம் கைவரப் பெற்றவரிடம் விளங்கும் சத்தியுடன் - அருட்சத்தி - வேறுபாடின்றி வாக்கு ரூபமான ஒளித்தன்மை பெற்று நாயகனாய் ஆகும்.
 
0692: பேரொளியைக் கண்டவர் இயல்பு :
யாவற்றுக்கும் தலைமையான சிவப்பேரொளியைத் தரிசித்த பின் அந்த ஒளியையே தாய் வீடாய்க் கொண்டு மகிழ்ச்சியுடன் வீற்றிருப்பான்.   எல்லா உலகங்களிலும் போய்க் கண்ட பின்பு உடலுள் பேய்கள் போன்ற காமம், குரோதம் முதலியவை வாழும் மற்ற உலகங்களுக்கா சித்தி அடைந்தவன் செல்வான்?   செல்ல விரும்ப மாட்டான்.
 
0693: பேரொளியைக் கண்டவனின் இயல்பு :
பேரொளி வடிவமான இறைவனை உலகஒளியைக் காண்பதைப்போன்று நடுக்கம் இல்லாது கண்டவன் ஆன்ம ஒளியுடன் பூமண்டலம் முழுவதும் விசுவ வியாபியாக ஒரே ஒளியான பிராண ஒளியைக் காண்பான்.
 
0694: நாடிகளின் இயல்பு :
சுழுமுனை இடைகலை, பிங்கலை நாடிகளை அனுசரித்து உள்ளதாகும். 
இவற்றோடு தொடர்புடைய நாடிகள் பத்து. 
அவை 1.இடைகலை 2.பிங்கலை 3.காந்தாரி 4.அத்தி 5.புடை 6.சிங்குவை 7.சங்கினி 8.பூடா 9.குரு 10.சரசுவதி.  இந்தப் பத்து நாடிகளும் வேறு ஐந்நூறு நாடிகளை உடையனவாக இருக்கின்றன.
ஆக சுழுமுனையின் ஆளுமை ஐந்நூற்றுப்பதின் மூன்று நாடிகளிலும் உள்ளது.
 
0695: உயிரை வளர்ப்பது சிவசத்தி :
 அமுதத்தைப் பெருக்கும் தலையில் நிரோதினி கலை உள்ளது.  அமுதத்தைப் பெருக்கி மாற்றத்தைச் செய்வதற்கு வழியாக ஆயிரத்து முந்நூற்று ஐந்து நரம்புகள் உள்ளன.  மேல் நிலையில் உள்ள ஆயிர இதழ்த் தாமரைக்குச் செல்ல இதுவே வழியாய் உள்ளது.  இதை வழியாய்க் கொண்டு உயிரை வளர்ப்பது
சிவசத்தியான இரண்டும் ஆகும்.
 
0696: சதாசிவநாயகி காலத்தைக் கடக்கத் துணை செய்வாள் :
சிவதத்துவத்தில் சுத்தவித்தை மகேசுவரத்துக்கு மேல் சாதாக்கியத்தில் விளங்கும் மனோன்மணியான சதாசிவநாயகி இடைகலை, பிங்கலை என்ற இரண்டு நாடிகளின் மீது தலைக்குச் சென்று விளங்குகிறது.  அதைச் சொல்லின் இருநாடிகளும்ஆயிரம் இதழ்த் தாமரையை அடைந்து விரியுமுன் ஐம்பத்தோர் எழுத்துக்களாய் உணர்த்தப் பெறும் ஆதாரங்களைக் கடந்ததாய்த் திரண்டு உள்ளது.  அந்நிலை
யில் யோகியின் காலத்தைக் கடக்கச் செய்வது ஐந்து முகங்களுடன் கூடிய சதாசிவநாயகியாகும்.
இடைகலை, பிங்கலை கால் பெருவிரல் முதல் தலை வரை மூன்று மடங்காய்ப் பின்னி உடலில் உள்ள மண்டலங்களையும் நரம்புத் தொகுதிகளையும் தாண்டி மேலே செல்லுகின்றன. காலத்தைக் கடப்பதற்குத் துணை செய்வது சதாசிவநாயகியான ஐம்முகச் சத்தியாகும்.
 
0697: சதாசிவநாயகியின் இயல்பு :
பத்துத் திக்குகளும் பத்து முகங்களையுமுடைய சதாசிவநாயகிக்குப் பிராணன் முதலிய பத்துக் காற்றுகளும் பத்துக் கருவிகளாகும்.  ஐம்முகச் சத்திக்கு அவையன்றிக் கவிழ்ந்த ஆயிரம் இதழ்த்தாமரை, நிமிர்ந்த ஆயிரம் இதழ்த்தாமரை என்ற இரண்டு கருவிகளும் செயற்படும்.  அந்தச் சத்தி உருவமற்ற நிலையில்
பத்துக் காற்றுகளையும் பத்துத் திக்குகளையும் கடந்த வெளியாய் விளங்கும்.  காலம் எனக் குறிப்பது உடலுக்குத்தான். உயிருக்கு இல்லை.  சதாசிவம் வடிவம்தாங்கியபோது காலத்தைக்கொண்ட உடல் விளங்கும். தலைக்கு மேலே உணர்வு போய் உருவத்தைக் கடந்தபோது காலம் இல்லையாகும்.
 
0698: பராசத்தி காலத்தை கடந்திடச் செய்யும் முறை :
பராசத்தி காலத்தில் விளங்குபவளாக கவிழ்ந்த இதழ்த்தாமரையில் விளங்குவாள்.அகண்டு பரந்துள்ள ஏகபராசத்தி சுழுமுனை நாடியில் பொருந்தி ஏறுகின்ற போது கவிழ்ந்த ஆயிரம் இதழ்த் தாமரையை நிமிர்ந்த ஆயிரம் இதழ்த்தாமரையாக மாற்றி அமைத்துக் காலத்தைக் கடந்தவளாகவும் விளங்குவாள். 
 
0699: காற்றின் அடக்கம் :
ஐம்முகச் சத்தியாக ஐம்பத்தோர் எழுத்துக்களையும் ஆறு ஆதாரங்களையும் இயக்கிக் கொண்டு இருந்த போது உடலில் விளங்கிய காற்று - தலையின் முன் பக்கத்தில் விளங்கும் நிமிர்ந்த ஆயிரம் இதழ்த் தாமரையில் விளங்கும் பராசத்தியுடன் முன் நோக்கிப் பாயும் போது அடங்கும்.
 
0700: பராசத்தியுடன் வாயு அடங்குதல் :
ஆராய்ச்சியால் அடைய முடியாத ஒப்பில்லாத பராசத்தியுடன் ஆராய்வதற்குரியகாற்றின் அளவை அறிந்து கூறப்போனால், ஆகிவரும் காற்று ஒரு நாளைக்கு ஐந்நூற்று முப்பத்தொன்றாய்க் குறைந்து பராசத்தியுடன் இரண்டறக் கலக்கும்.  பராசத்தியுடன் அடங்கிய போது வாழ்நாள் மிகும்.  ஒருவன் ஒரு நாளில் விடும் உயிர்ப்பின்அளவு ஐந்நூற்று முப்பத்தொன்றாய்க் குறையும் நீண்டு மெல்லவிடும் மூச்சால் ஆயுள் நீடிக்கும்.
 
0701: பிரணவத்தில் பொருந்துதல் :
பெரிய செல்வமான ஒளி மண்டலத்தைத் தாண்டி விளங்கும் சிவனிடத்துச் செல்வமாய் விளங்கும் மூச்சுக்காற்று இயங்கும் தன்மையில் இருநூற்றுமுப்பத்தெட்டாகக் குறைந்து பிரணவத்தில் நடக்கும்.
 
0702: மூலாதாரத்தீயே இடம் மாறும் போது பேரொளியாகிறது :
மூலாதாரத்தில் இருந்து எழுகின்ற பேரொளியுடன் விளங்கும் பராசத்தியிடம் சுழுமுனை வழியே பாயும் மூச்சுக்காற்று எழுநூற்று இருபத்து ஒன்பது நாடிகளிலும் கலந்துள்ளது;    நான்கு இதழ்களையுடைய மூலாதாரத்தில் உள்ள தீயே இப்படிப் பேரொளியாய் ஆகின்றது.
 
0703: மூச்சுக் காற்று நின்று விடும் :
சந்திர கலைகளுள் ஆறாம் கலையான நிரோதினி சத்தியை நெற்றியின் மேற்பாகத்தில் தியானித்தால் புகை போன்ற நிறம் தோன்றத் தொடங்கும்.  ஏழாம் சந்திரகலையான நாதத்தைப் பெருக்கி யோகியை இரண்டு மடங்கு ஆனந்தத்தில்ஆழச் செய்யும். செய்து, எட்டாம் இடமான நாதாந்தத்தில் மனம்
எண்ணுவதை விட்டு உணர்தல் என்ற நிலையில் ஒன்றிய போது - ஒன்பதாம் நிலையான
சத்தி கலையில் உடலை இயக்கி வந்த மூச்சுக் காற்று அடங்கும்.
ஆதார நிலையில் இருந்து கடந்து நிராதார நிலைக்குச் சென்றால் மூச்சு இயக்கம்நின்று விடும்.
 
0704: சிவமாகும் யோகி :
சந்திரன் சூரியன் ஆன்மா என்னும் மூன்றும் விளங்கும் நிமிர்ந்த ஆயிரம் இதழ்த்தாமரையில் - சந்திரகலை விளங்கும் தன்மையை உலகில் உயிருடன் வாழும் போதே சீவ ஒளியைச் சிவ ஒளியுடன் பொருந்திச் சமாதி நிலை பெற்ற யோகியானவனே சுழுமுனை உச்சியில் உணர்ந்து உணர்ந்து சிவம் என்ற தன்மையை அடைவான்.
 
0705 & 0706 யோகியர் அறிவன :
ஆசைஅழிதல், சுற்றத்தவரிடமிருந்து விலகி நிற்றல், பணிவைத்தரும் சிவஞானம், பதி ஞானம் மிகுதல், சுருங்குதலையுடைய வாயினர் ஆதல், பேச்சு அடங்குதல், சித்தி பெறுதல், தொலைவில் நடப்பவை கேட்டல், நுண்மையாக மறைந்திருத்தல்,காற்றை மேலே செலுத்துதல்; இறப்பு, மூப்பு ஆகியவற்றைக் கடத்தல், கூடு விட்டுக் கூடு பாயும் ஆற்றல் பெறுதல், (பொன்னுலகத்தை இறந்தவர்க்கு அளிக்கும் வல்லமை பெறுதல்), பாதுகாப்பான பிரணவ உடலைப் பெறுதல், மூண்டு எழுகின்ற சிவ சூரியனைப் பற்றிய கேள்வி ஞானம் அடைதல் ஆகிய இத்தனையையும்யோகி அறிவான்.
 
0707: பயன் அடைபவர் செயல் :
கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்தை வலமாய் சுற்றிவந்து கால்வருத்தம் அடையத்தல யாத்திரை செய்வதால் பயன் ஏதும் உண்டாவதில்லை.     அன்புடன் இறைவனைக் கண்டு இன்பத்தை அடைபவர், தலைவன் எங்கும் இருக்கின்றான் என்றுநினைந்து வழிபட்டுப் பயன் அடைவர்.
 
0708: நாதன் இருக்குமிடம் :
மூலாதாரத்துக்கு மேல் உள்ள சுவாதிட்டானத்தில் நான்முகனும், மணிபூரகத்தில் திருமாலும், அநாகதத்தில் உருத்திரனும் இருக்க, அதற்கு மேல் நெற்றி முதல் தலையுச்சி வரை பரந்துள்ள சிவஅம்சமான சதாசிவனும், சதாசிவ நிலைக்கு மேல் உள்ள பரவிந்து பெருமையுடைய பரநாதம் நாதாந்தமும் கடந்து அருள் வழங்கும் சிவசத்தியின் வடிவமாம்.
 
0709: அளவற்ற ஆனந்தம் உண்டாகும் :
ஆறு ஆதாரங்களுக்கும் உரிய பிரமன் முதலிய தேவதையுடனும் பொருந்தி,மேலான பரை பொருந்தும் பரனோடு, மேதை முதலான பதினாறு கலைகளான பிரசாத நெறியின் மேல் விளங்கும் ஒளியில் வாக்கும் மனமும் இறந்து எண்ணம் அற்று நிற்கின்ற நிலையே ஆனந்த யோகமாகும்.
 
0710: பிரணவத்தால் வீடு பெறலாம் :
இடைகலை, பிங்கலை பொருந்தியுள்ள சுழுமுனையின் உச்சியில் சிவனைத் துதித்து வணங்குபவர் பழைமையிலேயே தேவர் ஆவார்.  பிரசாதநெறியில் முறைப்படி உண்மைப் பொருளை நாடிப் போகின்ற அடியார்க்கு நிலைத்த முத்தியை அளிக்கும் இறைவனும் உடன் நின்று அருள் செய்வான்.
 
0711: எமன் வாரான் :
உயிர்ப்பைக் கட்ட வல்லவர்கள் எங்கும் மறைந்து நின்று எங்கும் இருக்க வல்லவர்கள்.  தேன் மிக்க தாமரையாகிய சுவாதிட்டானம் மூலாதாரத்தில் சேர்க்கையை உண்டு பண்ணி, உச்சித் துளையில் மோதும்படி செய்து ஐம்பொறியறிவு நீங்கிச் சுழுமுனையிலே நின்று அங்கு நடம் புரியும் சிவனை அறிந்திருப்பவர்க்கு எமன் இல்லை.
 
12. கலைநிலை.  (கலை நிற்கும் நிலையே கலை நிலை.  இங்குச் சந்திரகலை, சூரியகலை, அக்கினிக்கலை இயங்கும் முறை சொல்லப் பெறும்.)
 
0712: உயிரை அழியாமல் காத்தல் :
காமத்துக்குக் காரணமாகச் சுவாதிட்டானத்திலிருந்து வழி செய்து கொண்டிருந்த நெற்றிக் கண்ணை யுடைய சிவபெருமானை அன்பு செலுத்திக் கண்கள் இரண்டையும் சேர்த்து மேலே பார்த்தால் அன்பின் வழியானது கங்கை வெள்ளம் போன்று பெருகும்.  அங்ஙனம் அன்பு செய்வது உடலில் உள்ள உயிரை அழியாமல் காப்பதுமாகும்.
 
0713: திருவடி உணர்வில் கருத்தூன்றி நிற்பாய் :
மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற அந்தக்கரணங்கள் நான்கையும் பாசவழியில் செலுத்தாது பதி வழியில் செலுத்திக் காக்கவும் முடியும்.  அந்தக் கரணங்கள் நன்மை செய்வதால் சந்திரமனம் சிவ ஒளியைப் பற்றி நின்ற போது பிராணனும் சிவ ஒளியில் சேர்ந்து கலந்து விடும்.  எனவே உனது பரந்த வானத்தில் கருத்தூன்றி நிற்பாய்.
 
0714: மனம் அலையாமல் நிற்க வழி :
சுழுமுனையில் சென்ற காற்று நிலைத்து நின்றது.  அது காற்றில்லாத இடத்தில் வைக்கப்பட்ட விளக்கைப் போன்றும் அசைவற்ற மலையைப் போன்றும் அசைவின்றி நின்றது.  சந்திரகலை பதினாறில் சிவசத்தி பொருந்தியுள்ளதை அறிந்தால் மனம் அலையாமல் நிற்கும் வழி இதுவேயாகும்.
 
0715: சுழுமுனையில் ஒன்றி நின்ற போது உண்டாகும் பயன் :
எவ்விடத்தும் நிறைந்து நிற்கும் பூதநாயகனைச் சிறு வழிகளாகிய நாடிகளில் மாறிச் செல்லாமல் பிராணன் நடுநாடியில் ஒன்றி நிற்கும் நிலை உண்டான போது கதிர்களாகிய சடையுடன் கூடிய சங்கரன் விந்து மண்டலமான காளையில் ஏறி அமர்ந்தபடி இருந்தான்.    சுழுமுனையில் ஒன்றி நின்றால் விந்து மண்டலத்தில் சங்கரன் விளங்குவான்.
 
0716: சமாதி நிலை பெற்றிருப்பார் :
சமாதியில் பொருந்தியிருக்கும்  யோகப்பயிற்சியாளர் காலத்தை உணரமாட்டார்.  அவர் காலத்தை உணர்ந்தால் அது நல்ல சமாதியாகாது.   இனிப் பெருக இருக்கும் காலத்தின் பெருமையை எதிர் நோக்கிச் சுழுமுனையில் ஒன்றி ஆயிரம் இதழ்த் தாமரையில் பிராணன் பொருந்திச்  செருக்கு இல்லாது இருக்கும் சாதகர் சமாதியில் நிலை பெற்றிருப்பார்..
 
0717: உடம்பு பொன்னாய் ஆகும் :
இவ்வாறு சாதகமான அத்தன்மையை நோக்கி ஆராய்ந்து பெருந்தவமான வழிபாட்டைச் செய்யுங்கள்!  அங்ஙனம் செய்து மூச்சுக்காற்றை ஆயிர இதழ்த்தாமரையின் உள்ளாகப் புகும்படி செய்தால், அது இரசவாதம் செய்பவர் பயன்படுத்தும் வாத குளிகையினைப் போல் உடலில் உண்டான குற்றங்களைப் போக்கி விடும்.
 
0718: சிவத்தில் சீவன் அடங்கியது :
அவ்வாறு விளைந்து கிடந்த பயன் இம்மையின்பம், மறுமையின்பம், வீடு என்ற மூன்றாகும்.  உள் நாடியான சுழுமுனையை நோக்கிச் சென்ற சீவனை ஆயிரம் இதழ்த்தாமரையில் பொருத்த அச்சோதி மூலமான சிவத்துடன் அடங்கியது. 
 
0719: சிவயோகியின் உடல் சிவாலயம் ஆகும் :
தனக்கு ஓர் ஆதாரம் இன்றித் தான் மற்றவற்றுக்கு ஆதாரமாய் உள்ள பராசத்தி இந்த உடலில் வழி செய்து கொண்டு நமக்குள்ளே இருப்பாள்.  தேவர் உலகையும் - பெற்ற தாயான பராசத்தி விரும்பி இடங்கொள்ள - இன்பம் தரும் மதி மண்டல ஒளியில் ஆழ்ந்து திளைத்த சிவயோகியின் உடலானது சிவாலயம் ஆகும்.
 
0720: பூரண சமாதி :
நிறைந்திருக்கும் பிராணவாயு ஒடுங்கும் நிலையை எவரும் அறியவில்லை. பிராணவாயு ஒடுங்கும் நிலையை அறிந்த பின்பு காற்று கலந்த வான மண்டலத்தில் சிவப்பேரொளியில் சீவர் கலந்து சிவத்துடன் ஒன்றாக இருக்கலாம். 
 
0721: சிவகுருவை வணங்கித் தத்துவாதீத நிலையைப் பெறுவீர் :
நான் புகல்வதைச் சோதனைசெய்து உண்மையைக் குற்றம் இல்லாமல் காணலாம்.உயிர்ப்பான காற்று என்ற சிவன் குண்டலினியை விட்டுப்பிரிந்து மேற்சென்றபோது சிவயோக சமாதி உண்டாகும்.  எனவே சிவகுருவை வணங்கிப் பெருஞ்செல்வத்தைப் பெற்றதைப் போன்று பாதுகாத்துக் கொள்வீர்.
 
0722: உடலுக்கு அழிவு இல்லை :
இடைகலை பிங்கலை என்ற இரண்டு நாடிகளின் வழியாகக் கொண்டு மேல் எழுந்த பிராணன் ஆன குதிரையைத் தலையின் மீது அசையாமல் நிறுத்தி, அமுதத்தைப் புசிக்கவல்லீரானால், நீரில் ஆயிரம் ஆண்டு,  நிலத்தில் ஆயிரம் ஆண்டு சமாதியிருப்பினும் உடம்புக்கு அழிவு இல்லை.  இது சிவபெருமானின்
ஆணையாகும்.
 
0723: சிவனது அருட்செயல் :
குற்றமில்லாத பேரொளியான சிவன், குண்டலினியும் பிராணனும் தம்மை விட்டுப்பிரியும் காலத்தில் ஓசை என்ற வான்பூத தன்மாத்திரையில்  வெளிப்படும் சுவை, ஒளி, ஓசை, ஊறு, நாற்றம், எரித்தல், சேர்த்தல் ஆகிய ஏழுவகைகளையும், ஒளியில் உண்டாகும் சுவை, ஒளி, நாற்றம், வெம்மை, எரித்தல் என்ற ஐந்து வகைகளையும், மூக்கிடம் பொருந்திய நாற்றம், உயிர்ப்பு, உணர்தல் ஆகிய மூன்றையும், நாவில் பொருந்திய உணவை எடுத்தல், சுவைத்தல் ஆகிய இரண்டையும் ஒடுக்கி அருளினான்.    சுழுமுனையில் பொருந்தியவர்க்கு சுவை முதலியவை உண்டாகா.
 
13. சரீர சித்தி உபாயம்.  (உடலை அழியாமல் காத்தற்குரிய வழி.)
 
0724: உடலின் பயன் ஞானத்தைப் பெறுதல் :
உடலைப் பெற்ற பயன் ஞானத்தைப் பெறுதல். உடல்வன்மை குன்றப் பெற்றவர் உறுதியான ஞானத்தைப் பேணும் முறையை அறிய மாட்டார்.      உடலானது அழிந்தால் ஞானத்தைப் பெறாது உயிரும் நீங்கிவிடும். எனவே உடலைச் சிவன் வீற்றிருக்கும் கோயில் என எண்ணி உள்ளே சிவனைக் கண்டு,  உடலோடு இருக்கும் போதே தனியாக இயங்கும் சத்தியை அடைந்து  உடலைக் காத்து
உயிரையும் காத்தேன்.
 
0725: உடலைப் பாதுகாக்கக் காரணம் :
முன்பு உடலைக் குற்றம் உடையது என நினைத்திருந்தேன்.  ஆனால் இந்த உடலுக்குள்ளே சிறந்ததான சிவத்தைக் கண்டேன்.     இவ்வுடலைச் சிவன் கோயிலாகக் கொண்டுள்ளான் உணர்ந்து நான் உடலைப் பாதுகாத்துக் கொண்டு இருக்கின்றேன்.
 
0726: பிரணவ உடல் உண்டாதல் :
உலக நோக்கில் போகும் மனத்தை மாற்றிச் சிவபெருமானை நினைக்கச் செய்தால் தூய்மை உண்டாகும்.  சிவசிந்தனையால் குற்றங்களைப் போக்கிக் கவிழ்ந்த ஆயிரம் இதழ்த்தாமரையை மலரச் செய்து கீழ் முகமாகச் செல்லும் நோக்கத்தை மேல் முகமாகத் திருப்புபவர்க்கு வெப்பம் நீங்கிக் குளிர்ச்சி பொருந்திய பிரணவ உடல் உண்டாகும்.
 
0727: வாதம் பித்தம் சிலேத்துமம் சமப்பட்டு இளமை நலம் வாய்க்கும் :
மாலை வேளையில் யோகத்தைப் பயின்றாலுடல் குற்றம் ஆன கபம் அகலும்.நண்பகலில் செய்யும் யோகத்தால் கொடிய வாத நோய் நீங்கும்.  செம்மையான விடியற்காலையில் பயின்றால் பித்த நோய் அகலும். சுக்கிலம் நீங்காதிருக்கும்.இவற்றுடன் நரை திரையும் மாறிவிடும்.
 
0728: இரு கண்பார்வையும் மேல் நோக்கிச் சேர்க்கும் உபாயம் நெடிதுவாழச் செய்யும் :
உடலில் மூன்று முடிச்சுகளும் சூரியகலை சந்திரகலை ஆகிய இரு நாடிகளும் பாம்பு போல் பின்னியபடி உள்ளன.   இயங்கும் உடலான இயந்திரத்துக்கு காரணமானது பன்னிரண்டு அங்குலத்தால் உணர்த்தப் பட்ட பிராணன். கீழ் முகமாகச் செல்லும் சந்திர சூரியன் ஆகிய இரண்டு கண் பார்வைகளையும் ஒன்றாய் ஆக்கி கீழ் நோக்காமல் மேல் நோக்குடன் நிலைத்திருந்தால் பிராணலயம் பெற்று உடல் அழியாது.
 
0729: தத்துவம் முதலியவற்றைக் கடந்து நிற்றல் :
உயர்ந்து செல்லும் சுழுமுனை நாடி சிறப்படைய, இடைகலைபிங்கலை வழியாய் செயற்படும், தலையிலிருந்து கீழ் நோக்கிய நூறு நாடிகளின் தன்மை மாற வேண்டும்.    அது போன்று தொண்ணூற்றாறு தத்துவத்தில் தாத்துவிகங்களாய் உள்ள அறுபதும் மாற வேண்டும்.  ஆறு அத்துவாக்களின் (வழிகளின்) குற்றங்களும் நீங்க வேண்டும். இடைகலை பிங்கலை வழியாய் இவை தூய்மை அடைந்தால் பிரணவம் தூய்மையாகிவிடும். சீவர்கள் வரையறை செய்யப்பட்ட நூறு ஆண்டையும் கடந்து நீண்ட நாள் வாழ்வர்.
 
0730: சிவ நடனத்தைக் கண்டு களிக்கலாம் :
சந்திரகலையானது சூரியகலையில் பொருந்துமாறு சாதனை செய்தால், நண்பகலில் பிரணவ ஒலி கேட்கலாம்.  இன்பத்தைத் தரும் சிவ நடனத்தைக் கண்டு களிக்கலாம்.  இந்த உண்மையைச் சொன்னோம்.  இறைவன் மீது ஆணை.
 
0731: யோகியின் வழிபாட்டுக்குரிய மூர்த்தி :
மிக்க தூய்மையுடன் பொருந்திய அகரம், பொருந்தும்படி எண்ணிச் சகரத்தை ஓதுங்கள்.  அவ்வாறு அம்சம் என்று மனனம் செய்வதே மந்திரம்.  அம்சம் எனும் மந்திரப் பொருளான சிவத்தை உச்சரித்தால் தொண்டையின் வழியாய் மேலே சதாசிவத்தானமான  சிரசில் படர்ந்து நாதம் உண்டாகும்.   அங்ஙனம்
முழுமையாய் எண்ணிப்பெறும் நாதமே யோகியினது வழிபாட்டுக்குரிய மூர்த்தி.
 
0732: சிவமாம் இயல்பை அடைவான் :
கொப்பூழ்த் தாமரையில் தோன்றும் உயிர்ப்பைச் "சிவசிவ" என நினைந்து உச்சித்தொளையில் - பிரமரந்திரத்தில் - நிறுத்திக் கீழ்நோக்கிச் செல்லும் காற்றை செல்ல ஒட்டாமல் தடுத்து, மேல் நோக்கிச் செலுத்தின் அங்ஙனம் செய்பவன் சிவமாம் இயல்பை அடைவான்.
 
0733: மூலாதாரத்தில் உள்ள சிவனை எண்ணி வழிபடுக :
நீங்காத மலம் பொருந்திய எருவாய்க்கு இரண்டுவிரல் அளவு மேலும் வாயிட்டுச் சொல்ல இயலாத பால் உணர்வைத் தரும் குறிக்குக் கீழேயும் உள்ள - மூலாதாரத்தில் தியானம் செய்யுங்கள். உடலையே வழியாய்க் கொண்டு சீவர்களை நடத்தும் சிவம் அங்கு உள்ளது. உபதேசத்தைப்பெற்று முன் சொன்னவற்றைக் காணுங்கள்
 
0734: நரை திரை மாறி இளமை வாய்க்கும் :
நீல ஒளியுடன் விளங்கும் சத்தியுடன் முற்றும் பொருந்தி அவளையே அடைக்கலம் என்று இருப்பவர்க்கு - உலகத்தவர்க்கு ஏற்படும் நரைதிரை மாறி இளமைத்தோற்றம் அமையும். 
 
0735: யோக நெறி நிற்பவர் நீலகண்டன் ஆவார் :
கருவாய் செயல் அற்றிருந்தால் மனிதனுக்கு எவ்வித இழப்பும் இல்லை.  உடல் மெலிவினால் சத்துவகுணம் ஏற்பட்டு உயிர்ப்பை வெல்ல முடியும்.  உணவானது குறையின் மேல் நிற்பதற்குப் பல வழி உண்டு.    யோக நெறியில் நிற்பவர் நீல கண்டப் பெருமான் ஆவார்.   யோகியானவன் கண்டத் தானம் தாண்டிய பின்பேஇருள் நீங்கும்.  நீல நிறம், மேக நிறம், வெண்மேக நிறம் எனச் சிறிது சிறிதாக மாற்றம் அடையும்.  படிக நிறம் இறுதியில் வாய்க்கும்.
 
 
0736: பெண்கள் பார்த்து விருப்பம் கொள்வர் :
உடலில் பொருந்தியுள்ள மூலாதாரச்சக்கரத்தில் உள்ள காமவாயுவைத் தலையில் உள்ள ஆயிரம் இதழ்த் தாமரைக்குச் செலுத்தும் பயிற்சியைச் செய்து வந்தால், அவர் வண்டுகள் விரும்பும் நறுமணம் உடைய பூக்களை அணிந்திருக்கின்ற பெண்கள் பார்த்து விருப்பப்படும் அழகான வடிவத்தைப் பெறுவர்.
மூலாதாரத்தையும் ஆயிரம் இதழ்த்தாமரையையும் சேர்க்கும் பயிற்சியைச் செய்து வந்தால் அவர் அழகான வடிவத்தைப் பெறுவர்.
 
0737: காலனை வெல்லலாம் :
முன்பு தொட்டே யாவரும் அஞ்சும்படி சினத்துடன் வரும் இயமனை வெகுண்டு, ஒளி பொருந்திய புணர்ச்சியுள் மூலாதாரத்தில் உள்ள அதோமுகச் சக்கரத்தில் விளங்கும் சிவனது ஒலிக்கும் திருவடியைக் கண்டால் அவர் அப்பொழுதே அறிவு உலகான இவ்வுலகிலும் கனவு உலகான மேல் உலகிலும் வாழ்பவர் ஆவார்.
 
0738: உடலிலும் உயிரிலும் இனிக்கும் :
நான் தரிசித்த அக்கினி கலையாகிய சிவம் - சந்திரன் , சூரியன், அக்கினி, விண்மீன் என்ற நான்கு கலைகளிலும் ஏழு ஆதாரங்களிலும் தான் கண்ட பிராணனாய் உடல் முழுவதும் உடலில் வெளிப்பட்ட உணர்வே அதோ முகமாகச் சீவன் இன்பம் அடைந்து வளர்கின்ற முறையில் துணை புரியும்.
 
0739: ஒளி பெறலாம் :
ஆகுஞ்சன முத்திரையில் (ஆசனத்தில்) வெளிப்படும் வேதசத்தியை நீ அன்புடன் ஏற்றுக் கொண்டு,  நெல்லை விதைப் பண்டமாகவும்,  உணவுப் பண்டமாகவும் சேமித்து வைப்பதைப் போன்று, அளவற்ற பயிற்சியால் இருளுக்கும் ஒளிக்கும் நடக்கும் போரில், இருள் கீழ்ப்படுத்தப்பட்டு ஒளிச் சேமிப்பு உண்டாகி அங்கே ஒடுங்குவாயாக!
 
14. கால சக்கரம்.  (காலமாகிய சக்கரம். முடிவில்லாது வருவதால் காலம் சக்கரம் எனப்பட்டது.  மக்களின் கால எல்லையும் அதைக் கடக்க வேண்டும் உபாயமும் இங்குக் கூறப்படும்.)
 
0740: பிறவியைக் கடக்கலாம் :
சந்திர மண்டலத்தில் உள்ள வியாபினி முதலிய ஐந்து கலைகளின் இயல்புகளை அறிந்து, இவற்றை நீங்கித், தலையின் மேல் துவாத சாந்தப் பெரு வெளியில் அமர்ந்தமையால் , சிவசத்தி அருளும் வகையையும் அக்காலச் சத்தியின் ஆளுகையை விட்டுக் கடக்கும் நிலையையும் ஆராய்ந்தேன்.
 
0741: மக்கள் அழிவதற்குக் காரணம் :
ஓசை முதலான ஐம்புலன்களைப் பொருந்தி அறிகின்ற அறிவு ஐவகை;
கருவி பற்றி அறிவை வேறாக இருந்து அறிவது ஆறாம் அறிவு;
பொருள்களின் நன்மை தீமைகளைப் பற்றிய ஆராய்ச்சி ஏழாவதான அறிவு;
கல்வியால் பெற்ற அறிவு எட்டாவதான அறிவு;
அந்த எட்டுடன் தம் அனுபவம் பற்றி சேர்ந்த அறிவு ஒன்பதாம் அறிவு;
இந்த ஒன்பது வகை அறிவுக்குக் காரணம் சிவசத்தியாகும் என்பதை அறிவீர்.
சிவசத்தியைப் பிரியாமல் நிற்கும் பதிஞானமான அறிவு பத்தாம் அறிவு.
இந்த பத்து வகையான அறிவின் இயல்பை அறிந்து அதற்கேற்ப நடக்காமல்
இருப்பதால் மக்கள் காலம் வரையறை செய்யப்பட்டு அழிகின்றனர்.
 
0742: நான்கு வகைக் கண்டங்கள் :
மனிதர் அழியும் காலங்கள் (கண்டங்கள்)  பொதுவாக நான்கு.
முதல் கண்டம்     :  இருபத்தெட்டாம் ஆண்டு.
இரண்டாம் கண்டம்:  முப்பத்துமூன்றாம் ஆண்டு.
மூன்றாம் கண்டம்  :  அறுபத்திரண்டாம் ஆண்டு.
நான்காம் கண்டம் :   நூறாம் ஆண்டு.
அதற்கு மேல் எல்லை எதுவும் இல்லை.
 
0743: யோகப் பயிற்சி தொடங்குவதற்கான நாள் :
பயிற்சியாளன் கீழே கொடுக்கப்பட்ட இந்த  நாள்களைத் தவிர
மற்ற நாள்கள் யோகப் பயிற்சியைத் தொடங்குவதற்கு ஏற்ற நாள்கள்.
1.  பயிற்சியாளனின் பிறந்த நாள்;
2.  பயிற்சியாளனின் ஜன்ம நட்சத்திர நாள்;
3.  பயிற்சியாளனின் ஜன்ம நட்சத்திர நாளுக்கடுத்த இரண்டாவது நாள்.
4.  பயிற்சியாளனின் ஜன்ம நட்சத்திர நாளுக்கடுத்த நான்காவது நாள்.
5.  பயிற்சியாளனின் ஜன்ம நட்சத்திர நாளுக்கடுத்த ஆறாவது நாள்.
6.  பயிற்சியாளனின் ஜன்ம நட்சத்திர நாளுக்கடுத்த ஒன்பதாவது நாள்.
7.  பயிற்சியாளனின் ஜன்ம நட்சத்திர நாளுக்கடுத்த பதின்மூன்றாவது நாள்.
8.  பயிற்சியாளனின் ஜன்ம நட்சத்திர நாளுக்கடுத்த பதினாறாவது நாள்.
9.  பயிற்சியாளனின் ஜன்ம நட்சத்திர நாளுக்கடுத்த பதினெட்டாவது நாள்.
10. பயிற்சியாளனின் ஜன்ம நட்சத்திர நாளுக்கடுத்த இருபத்தோராவது நாள்.
11. பயிற்சியாளனின் ஜன்ம நட்சத்திர நாளுக்கடுத்த இருபத்தாறாவது நாள்.
12. பயிற்சியாளனின் ஜன்ம நட்சத்திரத்துக்கு எட்டாம் ராசியில் உள்ள  நட்சத்
    திரங்களின் நாள்கள்.
 
0744: சிவம், சத்தி, நாதம், விந்து விளங்கும் :
மனத்தில் விரும்பி ஞான யோகம் செய்யப் புகுபவரே!
பன்னிரண்டு இராசிகளில் செல்லும் சூரியனாகிய அறிவால் தன் உண்மையை அறிந்து - சீவன் பக்குவப்படும் - ஆன்ம தத்துவத்துடன் புருட தத்துவம் சேர்ந்த இருபத்தைந்து தத்துவங்களும் - சிவபெருமான் விளங்கும் ஆறு ஆதாரங்கள் வழியாகச் செயல்படுகின்றன என்பதை அறிந்து, ஆறு ஆதாரங்களையும் சீவன் கடந்த போது, சிவம், சத்தி, நாதம், விந்து என்னும் நான்கும் விளங்கும்.
 
0745: ஆன்மாவாகிய பகலவனைத் தரிசிக்க வேண்டும் :
பிரமன், திருமால், உருத்திரன், மகேசுவரன் ஆகியவர் உருவங்கள் நான்கையும் கடந்து அருவுருவம், அருவம் ஆகிய ஒன்பது வடிவங்களாக விளங்கி, நெற்றியைக் கடந்து இருபத்தைந்து தத்துவங்களால் விளங்கும் குறியைக் கடந்ததான நச்சுத் தன்மையுடைய வினையை ஈட்டும் ஆறு ஆதாரங்களைத் தாண்டும் ஆன்மா என்ற பகலவனை யாரே அறிவார்?
 
0746: அறிய வேண்டியவை :
ஆறு ஆதாரங்களில் நாற்பத்தெட்டு இலக்கங்கள் அமைந்த தாமரைகளை அறிந்து கொள்வீர்!  இரண்டாவதான சூரியன் இருபத்தாறால் அமைவதாய் உள்ளது எனக் கூறும் அகரம் என்ற சந்திர வட்டம் இருபத்தேழாம்.  இனி வேறு வகையாகவும் நாட்கணக்கை அமைத்துள்ளனர்.  இருபதும் இருபத்தெட்டுமாக நாற்பத்தெட்டு என்றபடி ஆறு இடங்களில் இரு இதழ்களையுடைய ஆஞ்ஞை நீங்கிய ஏனைய இடங்களிலுள்ள நாற்பத்தெட்டு இதழ்களையுடைய பதுமங்களை அறிய வேண்டும்.
மூலாதாரம் -          4 இதழ்
சுவாதிட்டானம் -     6 இதழ்
மணிபூரகம் -        10 இதழ்
அநாகதம் -         12 இதழ்
விசுத்தி -            16 இதழ்
                     --------------
மொத்தம்   -        48 இதழ்          
                     --------------
எண் 48 க்கு தமிழ் எழுத்து "உ" என்பது சூரியன்.
                                     
0747: பயிற்சியாளர் அறிய வேண்டியவை :
முறையான இருபத்தெட்டு இலக்கத்தை அக்கினி சந்திரன் சூரியன் என்ற மூன்று கண்டங்களில் காண்பீர்.  அதில் முப்பத்து மூன்று தத்துவங்களையும் ஒன்றாகத் தொகுத்து அறியுங்கள்.  பத்து எட்டு ஆகியவற்றைப் புவி முதலாகப் பொருத்தி அறியுங்கள். அவை நான்கு மூன்று இரண்டாய் ஒன்றாய் உள்ளதை அறியுங்கள்.
 
0748: வாழ்நாளைப் பெருக்குக :
குருவின் உபதேசப்படி முயற்சி செய்யாவிட்டால் இறைவனுடனே தொடர்பு கொள்ளுதல் யாவர்க்கும் அரியது.  மறைவாகச் சொன்னது உபதேச முறைப்படி பெற வேண்டும் என்பதன்றி வேறில்லை.  மறை பொருளை மறையைப் போல் பெற்றுக் கொள்க.  பெற்று வாழ்நாளைப் பெருக்குக.    ஒரு குருவை நாடி அவரிடம் முறைப்படி ஆரவாரம் இல்லாது உபதேசத்தைப் பெற்றுப் பயிற்சியை மேற்கொண்டு ஆயுளைப் பெருக்குதல் வேண்டும்.
 
0749: அழியாமல் உடலைக் காக்கும் நெறி :
உடலை நிலைத்திருக்கச் செய்யும் முறைகளை மறைத்து வைத்துள்ளமையை அறியாது முயல்பவர் மூர்க்கர் ஆவார்.  உடல் நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்புபவர் மூலாதாரத்தின் தீயை அடக்க வேண்டும்.  நிலை பெறாத உலகில் நிலைத்து நிற்கும் வழி இதுவே ஆகும்.
 
0750: தந்திர சாதனம் ஒன்று :
சிறுவிரலை நாணாக (கயிறாக) ஒருகையில் உள்ள சிறுவிரல்,அணிவிரல்,நடுவிரல்மூன்று விரல்களுடன் மற்றொரு கையில் உள்ள சிறுவிரல்,அணிவிரல், நடுவிரல்மூன்று விரல்களையும் கண்கள் புருவங்களில் நெறித்துப் பிடித்தால் பிராணன், அபானன் என்பவை மார்பில் சமமாய் நிற்கும்.  அதனால் தலையில் தீ, சூரியன், சந்திரன் என்னும் மூன்று மண்டலங்களும் ஒத்து நிலை பெறும். அவ்விடத்துக் காணும் ஒளியிலே ஓவியத்தைப் போல் அசையாது நில்லுங்கள்.
 
0751: நல்லோர் பயன் பெறுமாறு :                                                                                                              உயிர்ப்பு அடங்கி ஓவியமாய் நிற்கும் நிலையை அறிந்து கொள்ளுங்கள்.  பாவிகள் இதன் பயனை அறிய
மாட்டார்கள்.  தீவினைக்குக் காரணமான இந்த உடலில் மூன்று மண்டலங்களும் சுழுமுனை நாடியில் பொருந்திச் சகஸ்ரதளத்தில்விளங்கிடும்.
 
0752: உடல் அழியும்படி விடுகின்றனர் :
வீணாத் தண்டான முதுகுத் தண்டுடன் பிணைந்து போய்ப் பிரமரந்திரத்தை அடைந்த யோகிக்குச் சந்திரன், சூரியன், அக்கினி மண்டலங்கள் மூன்றும் ஒத்து உடலில் மகிழும்படியாய் அமைந்திருக்கும்.  இந்த வண்மையைக் கண்டவர்கள் மெய்ஞானிகள்.  இந்த உண்மையை அறியாதார் வினையால் அமைந்த உடல் அழியும்படி விட்டு விடுகின்றனர். மும்மண்டலங்களும் ஒத்து நிற்பதால் ஞானிகள் அழியமாட்டார்.
 
0753: காமச் செயலில் விருப்பம் கொள்ளக் கூடாது :
உடல் அழியும் பயனைக் கேட்பாயாக!  சூரியனான அறிவு குண்டலினியின் வழியே காமச் செயல் செய்யின் வணக்கத்துக்குரிய வாழ்க்கை கெடும்.  கெட்டு , நாயானது மலத்தை உண்பதில் ஆசை கொள்வதைப் போன்று காமச் செயலில் விருப்பம் கொள்வர்.
 
0754: கூத்தப் பெருமான் விளங்கித் தோன்றுவான் :
காமத்தின் வயப்பட்டு அலைவதால் சகஸ்ரதளத்துக்கு மேல் விளங்கும் திருவடியுணர்வை உணர இயலாது.   தன்னொளியில் மேல் நில்லாமல் கீழே உள்ள அக்கினி மண்டலத்தினால் மக்கள் பலர் அழிகின்றனர்.  இறைவனின் காற்சிலம்பு ஓசையைக் கேட்டு அதன் வழி செல்பவருக்குச் சுழுமுனையில் கூத்தப்பெருமான் விளங்கித் தோன்றவான்.
 
0755: இறைவன் வழிபடுவோனிடம் கலந்து நிற்றல் :
நாதம் கேட்பதால் விளையும் பயன் பலவற்றையும் கண்டவர், அவர் மெய்ந்நூற்பொருளை உணர்ந்து ஒழுகுவர்.  அங்ஙனம் உள்ளே தியானம் செய்து நிற்பின் அவன் விருப்பங் கொண்டு யோகியருடன் தானும் வேறுபாடற்று ஏகனாய் விளங்குவான்.
 
0756: பொன்னொளியில் புனிதன் தோன்றுவான் :
இறைவனுடனே பிரிப்பு இல்லாமல் பொருந்தி நிற்பவரின் வாழ்நாள் வளரும்.  அதனுடன் அழிவும் இல்லை.  கேட்பாயாக!  உலக நலம் கொண்ட பூரகம், இரேசகம், கும்பகம் என்பனவற்றால் வாழ்நாள் குறையும்.  அங்ஙனம் பூரகம் முதலியவை இல்லாமல் முப்பது நாழிகை சமாதி செய்யின், சகஸ்ரதளத்தில்
உள்ள பொன்னொளியில் கூத்தன் விளங்குவான்.
 
0757: நூறாண்டுக் காலம் வாழலாம் :
உடலில் கூத்தை நிகழ்த்தும் பிராணன் நுட்பமாய் அடங்கும் நிலையை அறிந்து அந்த அநாகதத்தில் அகர உகரத்தைப் பொருந்தி - அங்கு அட்ட தளகமலத்தை விளங்கச் செய்வர்.    மூச்சினது ஒடுங்கும் நிலையை அறிந்து அக்கமலத்தில் விளங்கும் சிவனைக் கண்டு மகிழ்ந்து இருப்பின் எடுத்த உடலில் நூறாண்டுக் காலம் வாழலாம்.
 
0758: பல யுகம் வாழலாம் :
மேலே கூறப்பட்டபடி நூறாண்டுக் காலம் வாழ்பவர் இந்த உடலையே ஆயிரம் ஆண்டுகளுக்குக் குறையாதபடி காப்பார்கள்.  இவ்வாறு ஆயிரம் ஆண்டு வாழப் பெற்றவர் அறிவால் முதிர்ந்து பல யுகம் வாழலாம்.
 
0759: யுகம் கோடி கண்டு உயர்வர் :
அவ்வாறு பல நாட்களைக் கண்டவர் தளர்ச்சியின்றி இருப்பர். இருந்து, உள்ளத்தால் முடிந்த பொருளான சிவத்தை எண்ணி இடைவிடாது தளர்ச்சியின்றித் தியானிப்பவர், 'சிவம்' என்றும் 'தான்' என்றும் இரண்டாய் அறியாமல் ஒன்றாய் உணர்ந்து அங்கே இருந்து நீண்ட காலம் வாழ்ந்து உயர்வை அடைவர்.
 
0760: பராசத்தியினை அறியாதவர் ஆனார் :
இவ்வாறு சிவம் என்ற தன்மையை அடைந்து உயர்ந்தவரே உலகத்துடன் கூடிப்பயனை அடைந்தவர்.  பலர் இந்த உண்மையை அறிந்து கொள்ளவில்லை.  இதனால் கன்மங்களை மேலும் மேலும் ஈட்டுவர். மற்றும் சிலர் இத்தகைய பேற்றை அடைய வேண்டும் என்ற விருப்பம் இல்லாமையால் மீனைப் போல் எப்போதும் இமைக்காத கண்ணையுடைய பராசத்தியை அறியாதவர் ஆனார்.
 
0761: இறையருள் உடையவரே தொண்டாற்ற முடியும் :
இறையொளியைக் காணப்பெறாதவர் பிறவிப்பயன் அடையாமல் வீணே கழிவர்.  வெட்கம் இல்லாதவர் சாத்திரங்களின் நயங்களைப் பேசிக் கழிவர்.  பராசத்தியின் ஒளியைப் பெறாதவர் தத்துவப் பொருள் யாவற்றையும் காண இயலாமையால் தொண்டு செய்யாமல் கழிந்து போகின்றனர்.
 
0762: சிவத்தைக் காணலாம் :
பிணைப்பை ஏற்படுத்தும் உலகப் பொருளைப் புறக்கண்ணால் பார்க்காதவர்,நீங்குகின்ற அப்பொருளின் தன்மையை அகக் கண்ணால் பார்க்க முடியும்.  நீங்கும் பொருளின் உள்ளே உள்ள ஒருமைப்பாட்டுடன் பார்த்தால் எப்பொருளிலும் நீங்காது விளங்கும் சிவனைக் காணலாம்.
 
0763: யோகியர் அடையும் பயன் :
மூன்று கண்களை உடையவன்; பிறப்பு இல்லாதவன்; நந்தியெம்பெருமான்.  அவனை மனத்துள் ஆராய்ந்து காண அவன்  எண்ணப்பட்ட பத்துத் திசைகளில் இருப்பதுடன் தனித்தும் இருப்பது புலப்படும்.  உறுதியைத் தருகின்ற சிவகதி கிட்டும்.  ஆராய்ச்சி மிக்க யோகியர் அடையும் பயன் இதுவேயாம்.
 
0764: அகநோக்கு உடையவர்க்குரிய உபதேசம் :
இப்படி நந்தியெம்பெருமானை அறிய வல்லார்க்கு வாழ்நாளின் எல்லை அகன்று விடுகின்றது.  ஆதலால் அழிவில்லை.    அவ்வாறு அறிய வல்லவர் மக்களின் தலைவராவார்;  ஆராய்ச்சி செய்பவர் கண்ட உண்மை இதுவாகும்.  சிவபெருமானைக் கூட வேண்டும் என்ற விருப்பு உடையவர்க்கு இந்த உண்மையைச் சொல்லவும் கூடும்.
 
0765: சிவன் சிரசில் தோன்றுவான் :
தக்க தகுதியுடையவர்க்கு உணர்த்த வேண்டிய பொருள் அகார உகாரங்கள் ஆகும். அகாரங்கள் உகாரங்கள் மனத்துள் நிலை பெற்றால் உணர்த்தும் மகாரம் சுழுமுனையான நாடியின் வழியே உயரச் சென்று நாதமாய் அமையும். இதனால் மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களும் ஒன்றாய் இணைக்கப்பட்டு மூலாதாரத்துக்கும் சகஸ்ரதளத்துக்கும் நேரே தொடர்பு உண்டாகும்.  இதை மந்திரத் திறவு கோல் என்பர். அப்போது மாயையின் ஆறு ஆதாரங்ளும் குறும்புகளற்றுச் சிவமே விளங்கித் தோன்றுவான்.
 
0766: இடையறாது சிந்திப்பவர் சிவம் ஆவார் :
சிவபெருமான் வீற்றிருக்கும் இடத்தை எவரும் அறிய மாட்டார்.  அப்பெருமான் ஓசை, ஒளிமயமாய் வீற்றிருக்கும் இடத்தை அறிபவர்க்கு அவன் அவர் உள்ளத்தை விட்டு அகலாது நிற்பான்.   அவ்வாறு அவனைக் காணில் அவன் சிவமே ஆவார்.
 
0767: ஒலி ஒளியுள் சிவன் விளங்குவான் :
சிவன் தான் ஆகும் இயல்பை அறிவார் எவரும் இல்லை.  அவ்வாறு சிவன் ஆகும் தன்மையை நீ கேட்பாயாக!  சிவன் ஆன்மாவின் நுண்மை வாக்கிலும் நுண்ணிய ஒளியிலும் பொருந்துவான்.  அவன் இவனது வானக் கூற்றில் விளங்குவான்.
 
0768: இன்பம் இருக்கும் இடத்தை அறியலாம் :
ஆதாரச் சக்கரங்கள் ஆன வட்டங்கள் ஏழும் உமக்குள் மலரும்.  அங்கு மேன்மையுடைய சிவன் இருக்கும் இடத்தை அடைய அறியீர்.    ஓர் உபாயத்தால் சிவனுடன் பொருந்தி நிற்க, கரும்புக் கட்டியைப் போன்ற இன்பம் இருக்கும் இடத்தை நீங்களும் அறியலாம்.
 
0769: உன் உள்ளே இருக்கும் இறைவரைக் காணலாம் :
முன் செய்யுளில் கண்ட முறையால் உள்ளே ஆதார மலர்களில் பிரமன் என்றும் திருமால் என்றும் காணலாம்.  நீலகண்டன், மகேசுவரன் ஆகியோரையும் காணலாம்.   உன் உயிர்  உடல் என்பனவற்றில் இக்கடவுள் எல்லாம் பொருந்தி இருப்பதைக் காணலாம்.
 
15.  ஆயுள் பரீட்சை. 
(வாழ்நாளை அறிதற்குரிய தேர்வு ஆயுள்பரீட்சை. இது உயிர்ப்பின் இயக்கத்தை அறிந்து ஆயுட் கால எல்லையை முடிவு செய்வதாகும்.  மூச்சு நீண்டு சென்றால் ஆயுள் குறையும்.  மூச்சு குறைந்து சென்றால் ஆயுள் நீளும்.)
 
0770: இறப்பு உண்டாகும் முறை :
தலையிடத்து வைத்த கை பருத்தும் சிறுத்தும் இல்லாது அளவாய்த் தோன்றினால்நன்மை விளையும். பெருத்துத் தோன்றினால் ஆறு மாதங்களில் இறப்பு ஏற்படும்.   கையானது இரண்டு பங்கு பருத்துக் காணப்பட்டால் ஒரு மாதத்துக்குள் இறப்பு உண்டாகும்.
 
0771: நாதாந்தத்திலிருப்பவர் உள்ளத்தில் ஈசன் இருப்பான் :
மனத்தில் உண்டாகும் சூக்குமம் முதலிய வாக்குகள் ஈசனுக்கு ஒப்பானவையாகும்.  நாதத்தைக் கடந்தவர் ஈசனை நினைந்து நாதாந்தத்தில் இருப்பர்.     நாதாந்தத்தில் இருப்பவர் மனத்தில் ஈசனும் ஓசையால் உணர்ந்து உணர்வாய் விளங்குவான்.
 
0772: ஞானம் பெற்றவர் உலகத் தலைவர் :
உண்ணாக்கின் மேல் உள்ள - நான்கு விரல் அளவு - அழிகின்ற தன்மையுடைய வாயுவைக் கண்டு, அதை அழியாமல், உண்ணாக்குக்கு மேல் அடைந்துள்ள பகுதியை சிறிதுசிறிதாய்த் திறந்து, மூச்சைப் பிரமரந்திரத்தை நோக்கிப்பொருந்தச் செய்ய வேண்டும். அப்போது உண்ணாக்கு மேல் அமையும் சகஸ்ரதளம் விரிந்துநான்கு விரல் அளவு தொழிற்படும் வாயுவின் அளவு கூடி நன்மையைத் தரும்.  சகஸ்ரதளம் தங்கும் ஞானம் நிலை பெறும்.  யோகியர் ஐம்பொறிகளின் துணை இல்லாமலேயே எல்லாவற்றையும் அறியும் அறிவு கைவரப் பெறும். அங்ஙனம் ஞானம் பெற்றவரே உலகத் தலைவர்.
 
0773: வாழ்நாள் நூறாண்டு :
தலைவன் வாழும் இடக்கண் பார்வையை சத்தி வாழும் வலக்கண் பார்வையுடன் பொருந்தும்வகை அறிபவர் இல்லை. குருவானவர் உபதேசப்படி இடக்கண்ணை வலக்கண்ணுக்கு மேல் பார்த்துப் பொருந்தினால் ஒளியாம் சத்தி விளங்கும்.  இப்படி தலைவனை வலமாகவும் தலைவியை இடமாகவும் மாற்றுவதால் ஞானேந்திரியங்கள் ஐந்தும் தன் வயப்பட்டு நூறாண்டு வாழலாம்.
 
0774, 0775, 0776: உயிர்ப்பு நீண்டால் ஆயுள் குறையும்; உயிர்ப்புக்  குறைந்தால் ஆயுள் நீளும் :
மூச்சு ஆறு விரற்கடை அளவு வெளியேறினால் ஆயுள் எண்பது ஆண்டுகள்.  
மூச்சுஏழுவிரற்கடை அளவுவெளியேறினால் ஆயுள் அறுபத்திரண்டு ஆண்டுகள்.
மூச்சு எட்டு விரற்கடை அளவு வெளியேறினால் ஆயுள் ஐம்பது ஆண்டுகள்.
மூச்சு ஒன்பது விரற்கடை அளவு வெளியேறினால் ஆயுள் முப்பது ஆண்டுகள்.
மூச்சு பத்துவிரற்கடை அளவுவெளியேறினால் ஆயுள் இருபத்தெட்டு ஆண்டுகள்
மூச்சு பதினைந்துவிரற்கடை வெளியேறினால் ஆயுள் இருபத்தைந்து ஆண்டுகள்.
 
0777: சீவனிடம் அக்கினி கலையான சுழுமுனை விளங்குதல் :
பகல் முப்பது நாழிகையும் சூரிய கலையில் நில்லாது சந்திர கலையில் சேர்ந்து நிற்பின் தலையினது ஈசான திக்கில் உணர்வை உதிக்கச் செய்யலாம். அப்போது சுழுமுனையில் மூச்சுப் போதலைச் சாதிக்கலாம்.  இதனால் அகர உகரம்  என்ற நாடிகளும் செம்மையுற்றுப் பத்தான அக்கினிக் கலை விளங்கும்.  இதைப் பார்க்கவும் முடியும்.
 
0778, 0779, 0780: சுழுமுனையில் நிற்பதன் பயன் :
முன்பு சொன்ன வண்ணம் சந்திர மண்டலம் விளங்கி, பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய மூவரையும் கீழ்ப்படுத்தி இரு நாள்கள் சுழுமுனையின் வழியே மூச்சு இயங்கினால் கீழ் நோக்குதலையுடைய அபானனும் வியாபகனான சந்திரனும் சீவனுக்குப் பகையாக இல்லாமல் உதவுவான். மூன்று நாள்கள் சுழுமுனையின் வழியே மூச்சு இயங்கினால் வாழ்நாள் நீடிக்கும். நான்கு நாள்கள் சுழுமுனையின் வழியே மூச்சு இயங்கினால் சிவம்,சத்தி, விந்து, நாதம் என்ற நான்கையும் காணலாம்.  ஐந்து நாள்கள் சுழுமுனையின் வழியே இயங்கினால் களங்கம் இல்லாமல் சிவம் சத்தி ஆன்மா என்ற மூன்றையும் காணலாம்.  பத்து நாள்கள் சுழுமுனையின் வழியே இயங்கிப் பொருந்தியவர் தன்னுடனே பொருந்திய சிவம் சத்தி ஆகியவற்றை அறியலாம்.  பதினைந்து நாள்கள் சுழுமுனையின் வழியே இயங்கிப் பொருந்தியவர்  தன்னுடைய உள்ளத்தில் சிவம் ஒன்றையே காண்பர்.
                                                                                                                                                                     0781: சுழுமுனையில் பொருந்தியவர் எங்கும் செல்லவும் யாவற்றையும் அறியவும் முடியும் :
சுழுமுனையில் இருமுனைகள் நிலை பெற்றால் வானக் கூறிலிருந்து ஆறு ஆதாரங்கள் அறியப்படும். 
இருபத்தைந்து நாட்கள் இயங்கினால் தேயுவும் வாயுவும் வானமும் ஆன மீன்றும் விளங்கும்.  மேலும் இருபது நாள்கள் இயங்கினால் தேயும் வானமுமான இரண்டும் சிறப்புற விளங்கும்.
 
0782: நீண்ட நேரம் சுழுமுனையில் இருந்தால் சிவனையும் ஆன்மாவையும் மற்றவர்க்குக் காட்டலாம் :
சுழுமுனையில் ஞானி இருபத்தேழு நாள்கள் இருந்தால் சோதி வடிவான சிவத்தைப் பிறர்க்கு உணர்த்துதல் கூடும்.  அப்படியே இருபத்தெட்டு நாள்கள் சுழுமுனையில் இருந்தால் பத்தாம் நிலையான மேல் நோக்கிய சகஸ்ரதளத்தில் விளங்கும் ஆன்மாவைப் பிறர்க்கு உணர்த்த முடியும்.
 
0783: யோகியர்க்குக் காலம் செல்வதே தெரியாது !
உலகத்தவர் அஞ்சுகின்ற பகையான ( பத்து + ஐந்து + ஆறு + எட்டு =29 )
இருபத்து ஒன்பது நாள்களும்  யோகியர்க்குப் பத்து நாள்கள் போல் விளங்கும்.
அன்பைப் பெருக்கும் வகையில் இறைவனுடன் கலந்திருக்கின்ற போது முப்பது நாள்களும் யோகியர்க்கு ஏழு நாள்கள் கழிந்தவை போல் தோன்றும்.
 
0784: காலம் விரைவாய்ச் செல்வது போல் தோன்றும் :
இறைவனுடன் பொருந்திய நாள்கள் முப்பத்தொன்றானால் சிறுமைதரும் நாள்கள் மனத்தில் மூன்று நாள்கள் போல் தோன்றும்.  இறைவனுடன் சென்று உயிர் முப்பத்திரண்டு நாள்கள் பொருந்தியிருப்பின் உலக நடையினர்க்குரிய இரண்டு நாள்கள் சென்றது போல் விளங்கும்.
 
0785: மூன்று மாதம் சகஸ்ரதளத்தில் வினையின்றி இருப்பவர் சிவம் ஆவார் :
நந்தியெம்பெருமான் மூன்று மாதங்களும் சிவமும் ஆன்மாவும் வேற்றுமையற ஒன்றியிருப்பவர்க்குச் சகஸ்ரதளத்தில் சூக்குமவாக்கு விளங்கும்படி செய்தனன்.   யாதொரு செயலும் இல்லாது பரமாகாயத்தில் நிமிர்ந்து நின்றார்க்குத் தன்னுடன் பொருந்தி நின்ற சிவமே ஆதல் கூடும்.
 
0786: ஆரும் அறியாததை யான் அறிந்தேன் :
பரவெளியில் சூக்கும நிலையில் எங்கும் பரவிக் கலந்துள்ள தீயான பூதத்தை எவரும் அறியார்.  கலந்துள்ள காற்றான பூதத்தையும் யாரும் அறியமாட்டார்.  எல்லாவற்றையும் ஒடுக்கியுள்ள சிவத்தையும் யாரும் அறியமாட்டார்.  இங்ஙனம் மற்றவர் அறிந்து கொள்ளாத அறிவை நான் சிவத்துடன் கூடி அறிந்தேன்.
 
0787:சிவத்தின் இயல்பு :
காற்றுடன் கூடி ஐந்து தன்மாத்திரைகளை அறியும் அறிவாகிய சிவம் அறிவாகும்.
அச்சிவமே உலகுயிர் எல்லாவற்றின் அறிவாகும்.  எனவே சிவத்தைப் பிரித்து அதனை வேறாகக் காணாமல் ஒன்றாய்க் காணின் - அப்பொருளான சிவமே உயிருடன் கூடி நின்று எல்லாப் பொருளையும் விளக்கித் தானும் விளங்கும்.
 
0788: பராசத்தியின் திருச்செயல் :
அச்சிவம் அருளிய உலகம் ஞானியர்க்கு மயக்கத்தைத் தருவதாகும்.ஞானியர்க்கு நாள் தோறும் பொது அறிவை அளிக்கும்.  இன்பத்தைத் தரும் சகஸ்ரதளத்தில் விளங்கும் பராசத்தி இந்தப் பேற்றை ஞானியர்க்குக் கூட்டி வைப்பாள். எனவே ஞானியர் ஆனவர் சிவமே ஆவார்.
 
0789: பற்று நீங்கும்; அறிவு அகலும் !
படைப்புச் செயலை எண்ணிய பெருமையுடைய சிவத்துக்குப்-பிறப்பு இல்லாமல் காண்பவரின் அழகிய உடல் - பழமையான இடமாகும்.  இந்த உண்மையை அறிந்தவர்க்குப் பற்று விலகும்.ஆசைக்குக் காரணமான பாசங்களை வருந்துமாறு செய்பவர்க்கு அகன்ற அறிவு உண்டாகும்.
 
16. வார சரம். 
(வாரம் என்பது நாள்.  சரம் என்பது மூச்சின் இயக்கம்.  நாடிகளின் வழியே பிராணன் எந்தெந்த நாளில் இயங்குவது எப்படி என்பது இங்குக் கூறப்படும்.)
 
0790: நாடிகளும் நாள்களும் :
திங்கட்கிழமை, புதன்கிழமை,வளர்பிறை வியாழக்கிழமை,வெள்ளிக் கிழமைகளில் இடைநாடி வழியாக மூச்சு இயங்க வேண்டும்.  செவ்வாய்க்கிழமை, தேய்பிறை வியாழக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் வலநாடி வழியாக மூச்சு இயங்க வேண்டும்.
 
0791: உடம்பு அழியாததற்குக் காரணம் :
திங்கட்கிழமை, புதன்கிழமை, வளர்பிறையில் வியாழக்கிழமை,வெள்ளிக்கிழமைகளில் இயல்பாகவே பயிற்சி வசத்தால் வலக்கை மூக்கை விட்டு மூச்சு இடக்கை மூக்கின் வழியாய் ஓடின், சிறந்த உடம்புக்கு அழிவு இல்லை.    இது வள்ளல் சிவபெருமானின் வாக்கு.
 
0792: ஆனந்தம் உண்டாகும் :
செவ்வாய்க்கிழமை, தேய்பிறையில் வியாழக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாள்களில் மூச்சினை வலப்பக்கத்தில் அறியும் யோகி இறைவன் ஆவான்.  இந்நாட்களில் மூச்சு மாறி இயங்கும் தன்மையை அறிந்து வலப்பக்கத்தில் ஓடும்படி செய்பவர்க்கு ஆனந்தம் உண்டாகும்.
 
0793: சிவம் நாசியில் விளங்குதல் :
சந்திரனும் சூரியனும் இடைகலை பிங்கலை நாடிகளில் மாறி மாறி இயங்கும் அச்சமயத்தில் இடைகலை வழியாய் ஏறிப் பிங்கலை வழியாய் இறங்கியும், பிங்கலை வழியாய் ஏறி இடைகலை வழியாக இறங்கியும் மூச்சானது நடுநாடியில்ஊர்ந்து போகும்.  ஆதலால் மூச்சில் சிவம் இருப்பதை ஆராய்ந்து அறியுங்கள்.
 
0794: மிகுதியாய் ஓடும் நாடி :
பிராணன் வலப்பக்கம் தோன்றி இடப்பக்கம் மாறி ஓடும் போது ஒரு பக்கம் கனமாகவும் மறுபக்கம் இலேசாகவும் மெலிந்து ஓடலாகும்.  தோன்றிய பிராணன் அகன்றும்தணிந்தும் ஓடுதல் நீங்கி ஒருநாடியிலே மிகுதியாக ஓடினால், மிகுதியாக ஓடும் நாடியைக் கொண்டு சூரியன் என்றோ, சந்திரன் என்றோ அறிய வேண்டும்.
 
0795: ஒளி உண்டாகும் :                                                                                                                தக்கவண்ணம் சுழுமுனையில் பொருந்தி நில்லாமல் இடம் அல்லது வலம் ஓடிப் பாய்கின்ற வாயுவை
யோகியானவன் பொருந்தி,  நாடிகள் ஒத்து இயங்கும் புருவ நடுவில் இனிமையை அளிக்கும் குண்டலினியைச் சேரும்படி செய்தால், நடு நாடியினது உச்சியில் தீப ஒளி அமையும்.  இவ்வாறு நந்தி கூறியுள்ளார்.
 
0796: மூச்சோட்டத்தைப் பொருத்தே ஆயுள் :
ஆராயத்தக்க பொருளான சிவம் அழகிய கண் மலர்களுக்கு மேலாய் உள்ளான்.   அப்பெருமானை கருதிச் சுவாசக்கலையை மாறச் செய்யின் பதினாறு கலைகளையுடைய சந்திரன் விளங்கும்.  அக்கலை வலிமையாய்ச் சென்று மனத்தை அழிக்கின்ற ஆதாரமாக ஆயுளும் நாளும் தியான காலமான முகூர்த்தமாய் அமையும்.  மூச்சின் ஓட்டத்தைப் பொறுத்தே ஆயுள் நீடிப்பும் குறைவும் ஆகும்.
 
17. வார சூலம் :
(வாரம் என்பது கிழமை.  சூலம் என்பது தோக்ஷம் அதாவது குற்றம்.பயணத்துக்குரியதாகாத தோக்ஷம் இங்குக் கூறப்படும்.)
 
0797: பயணத்துக்கு ஆகாத நாட்களும் திசைகளும் :
வார நாள்களில் சூலம் வரும் திசையைக் கூறும் போது
திங்கட்கிழமையும் சனிக்கிழமையும் கிழக்கே சூலமாகும். 
செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமையும் வடக்கே சூலமாகும்.
ஞாயிற்றுக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் கிழக்கே சூலமாகும்
மேற் கூறப்பட்ட திக்குகளில் அந்தந்தக் கிழமைகளில் பயணம் செல்லக் கூடாது.
 
0798: சூலத்தில் செல்வதால் உண்டாகும் தீமை :
வியாழக் கிழமை சூல திசை தெற்கு.  சூலம் இடப்பக்கமாகவும் பின் பக்கமாகவும்பயணம் செய்வது நன்மையாகும்.  சூலம் வலப்பக்கமும் முன்பக்கமும் இருக்கச் சென்றால் மேலும் மேலும் தீயவை விளையும்.
 
18. கேசரி யோகம்.
(கேசரி என்பது வானம் அல்லது சிங்கம்.  யோகம் என்பது சேர்க்கை.
கேசரி யோகம் என்பது சிங்கம் போல் மேல் நோக்கிப் பார்வையைச் செலுத்தி இருப்பதாகும்.  இதனால் இந்த யோகத்தைச் செய்பவர் வானத்தில் செல்லும் ஆற்றல் வாய்க்கப் பெறுவர்.)
 
0799: காலத்தைக் கடக்கலாம் :
மூச்சானது இறங்காமல் அண்ணாக்கில் கட்டி, பின்பு அபானன் குதம் அல்லது குறுவழியாகப் போகாதபடி குதத்தைச் சுருக்கி நிறுத்தி, அதன் பின்பு இரு கண் பார்வைகளையும் ஒன்றாக்கி,  முழங்காலை மடக்கி முழங்கையை வயிற்றோடு பொருந்தி நின்று (வச்சிராசனம்), அடுத்து உள்ளத்தைச் சுழுமுனை வழியாகப்
பாயும் மூச்சில் நிறுத்தியிருக்க, உடலைத் தாண்டிய நிலைக்குப் போனமையால் காலத்தைக் கடக்கலாம்.   கேசரி யோகம் பயில்பவர் பிராண ஜெயம் பெற்றவராவதால் அழிவில்லாமல் இருப்பவர் ஆவார்.
 
0800: இருள் நீங்கும் :
சிவயோக நாதத்தினால் மோதி, முன் பக்கம் உள்ள மூளையில், இரண்டு கண் பார்வைகளையும் மாறி மாறிப் பார்ப்பதால் உண்டாகும் கரையின் எல்லைக்குள், இரண்டு கரைகளின் இடையே வானத்தில் உண்டாகும் ஒளியைக் கொண்டு சகஸ்ரதளத்தை நிரப்பினால், நெற்றிக்கு மேலே நிமிர்ந்து பார்க்கச் சீவனின் குற்றம் என்ற இருள் நீங்கித் தூய்மையாகும்.   சீவன் மூலபந்தம் என்ற காரத்தில், தவம் என்ற நாதத்தினால் மோதி, வானத்தில் நிலை பெற்ற போது குற்றமான மலம் நீங்கும்.
 
0801: இறப்பில்லாது வாழ வழி :
இடைகலை பிங்கலை நாடிகளின் வழியாக உயிர்ப்பு இயங்குவதை மாற்றிச் சுழுமுனை வழியாக உயிர்ப்பைச் செலுத்த வல்லார்க்குத் தளர்ச்சி ஏற்படாது.  உறங்கும் விடியற் காலையில் எழுந்து விடிவதற்கு ஆறு நாழிகைக்கு முன் இப்பயிற்சியைப் பயில வல்லவர்க்கு இறப்பு இல்லை.  நீண்ட காலம் இருக்கவும் முடியும்.
 
0802: சுழுமுனைத் தியானம் செய்பவர்க்கு உண்டாகும் பயன் :
தமிழ் மறைகளை ஆராய்ந்து உணர்ந்து சொல்லப் போனால் சுழுமுனைத் தியானசாதனையில் அமிழ்து நிலை பெற்று ஊறும்.  அது அங்ஙனமாகின்ற போது நன்குஒலிக்கும்.  ஒலித்தலைச் செய்யின் சந்திர மண்டலமாய் விளங்கி ஒலித்துப் பாதுகாக்கும் என்பதாம்.
 
0803: பல ஆண்டுகள் மரணமின்றி வாழலாம் :
நல்லாசனத்தில் அமர்ந்து நாவின் நுனியை அண்ணாக்கின் மேல் உரசியிருந்தால்,பிரணவத் தொனி கேட்கும்.  சீவனும் சிவனும் அவ்விடத்தில் விளங்கித் தோன்றுவர்.  மூவருடனே பதினோறு உருத்திரரும், பன்னிரண்டு சூரியரும்,  இரண்டு அசுவனி தேவர்களும்,  எட்டு வசுக்களும் ஆக முப்பத்து மூவரும் அங்கே தோன்றுவர். உடலில் நூறு கோடி ஆண்டுகள் மரணம் இல்லாது வாழக் கூடும்.
 
0804: அமுதம் உண்டு தெளிவை அடையலாம் :
ஊனால் ஆன உடலால் அறியும் அறிவெல்லாம் பொருந்தி அமையும் இடமான சிரசின் உச்சி மேல் வான மண்டலம் அமையும் இயல்பை அறிபவர் இல்லை.  வான மண்டலத்தைப் பொருந்தி அறிபவர் அமுதத்தை உண்டு தெளிவை அடையலாம்.
 
0805: முதுமை நீங்கி இளமையுடன் இருக்க வழி :
மேல் அண்ணாக்குப் பகுதியில் பயிற்சியால் பிரணன் அபானன் என்ற வாயுக்களையும் பொருந்தும்படி செய்தால் உடலுக்கு அழிவு ஏற்படுவதில்லை.  உச்சித்தொளை வழியும் திறக்கும்.  உலகம் அறிய நரை திரை ஆகிய உடல் மாறுபாடுகள் மாறிடும்.  இளையரும் ஆவார்.  இது சிவசத்தியின் ஆணையாகும்.
 
0806: சிவனை எண்ணி உடலறிவு நீங்கி நிற்பவர் இயல்பு :
சிவத்தை முன்னிட்டுக் கொண்டு நாக்கை மடித்து அண்ணாக்கில் ஏறும்படி செய்து அங்கு நடு நாடியில் உச்சியில் சந்தித்திருந்தால், அந்தப் பயிற்சியாளர் உலகம் முழுவதையும் ஆள்வார்.  உடலுடன் பின்னிக் கிடக்கும் அறிவு நீங்க, சிவபெரு மானை எண்ணியிருப்பவரே உண்மையான அக்கினிச் செயல் செய்தவர் ஆவார்.
 
0807: வினையின் நீங்கி இன்பம் அடைவர் :
தீவினைகள் தம்மை வருத்த அறிவு மயங்கி இருந்த சீவர்கள் நாவினால் செய்யும்சாதனையால் கூற்றுவனுக்கு வேலை இல்லை. பரந்த வினைகளை ஆராய்ந்து அவற்றின் பயன் இனிமையை உணர்ந்தவர், கரும்பின் இனியசுவையைச் சுவைப்பது போல் தெய்வப்பணியைச் செய்து அதன் இனிமையைச் சுவைத்திருப்பர்.
 
0808: ஊனுடலில் அமுதத்தைப் பெறுவர் :
இனிய கரும்பைப் போன்ற வினையைச் செய்பவர் சுழுமுனை நாடியான கரும்பைப் பெற நாக்கை மேலே ஏற்றி, நடுநாடியினது கோணலை ஒழுங்குபடச் செய்திட ஊன் உடலிலேயே அமுதத்தைக் காண்பர்.
 
0809: திருவைந்தெழுத்தின் பயனை அறிக !
அண்ணாக்குப் பகுதி வழியாக உண்ணாக்கை மேலே ஏற்றி அதனால் ஊற்று எடுக்கும் அமுதத்தைப் பருகிச்  "சிவாயநம"  என்று எண்ணியிருப்பவர்க்குக் காப்பாற்றுகின்ற ஒளி நீர் - வெள்ளம் போல் முகத்தின் முன் பெருகும். அந்த வான கங்கையை அறிந்து கொள்ளுங்கள்.
 
0810: உடல் சிவாலயம் ஆகும் :
சிவபெருமானைப் பொருந்தி மனத்தில் வழிபாடு செய்தவர்க்கு, மலத்தைச் சுட்டெரிக்கும் அருள்சத்தி ஒலி ஒளி வடிவில் வெளிப்படுவாள்.  அந்த நிலையில் அந்த ஒலி ஒளி வடிவில் மனம் பதிந்து கீழ் இறங்காமல் "சாலந்தர பந்தனம்" அமைத்து, அங்குக் குவிந்து தியானிப்பவர்க்கு உடல் சிவாலயமாகும்.
 
0811: அகவழிபாடு செய்பவர் தாயினும் நல்லவர் :
அகக் கோயிலையே இருப்பிடமாய்க் கொண்டு வாழ்கின்ற சீவர்கள் அனைத்து உலகுக்கும் தாயை விட மிக்க அருள் உடையவர் ஆவார்.  சிலர் இவரைச் சினந்தாலும் நன்மையே செய்வர்.    ஆனால் சினம் கொண்டவரில் தீவினை செய்தவர்க்குத் தீயைக் காட்டிலும் கொடியவராய் அழித்து விடுவர்.
 
0812: சிவனின் இயல்பு :
சிவன் - மூலாக்கினியை எழுப்பி யோகம் செய்பவர் தலையில் இருப்பவன்.
அவன் சகஸ்ரதளத்தில் உணர்பவர்க்குப் பொன்னொளி மண்டலத்தில் விளங்குவான்.  இடையறாது பாவனை செய்பவர்க்கு அவன் பாவகப் பொருளாய் விளங்குவான்.  சிவ யோகம் செய்பவர்க்கு அவனது அறிவில் செறிந்து விளங்குபவனாய் இருப்பான்.
 
0813: உடலில் ஒளிக்கதிர்களைப் பரப்பிச் சிவன் விளங்குவான் :
சந்திரகலை பதினாறு போல் உள்ள பதினாறு இதழ்களையுடைய விசுத்திச் சக்கரத்திலிருந்து பொருந்திய,  இருநூற்று இருபது உலகங்களுமாகி நடக்கும் உடலாகிய மனையில், மூலாதாரம் முதல் அநாகதம் வரை உடலில் இருநூற்று இருபத்து நான்கு ஒளிக்கதிர்களைப் பரப்பித் தத்துவங்கள் ஒன்றுடன் ஒன்று
மாறுபடாது சிவன் விளங்குவான்.
 
0814: இன்பம் அளிப்பவளாகவும் உள்ளாள் :
விசுத்திச் சக்கரத்தில் பராசத்தியும் அமைந்து விளங்குகிறாள். ஆற்றல் குறையாத அந்த சத்தியே அக்கிரணங்களின் நடுவே விளங்குகிறாள். அவளே ஆன்ம தத்துவத்திலும் சந்திரனாக விளங்குகிறாள்.  அவளே தான் போகத்தில் பொருந்தி இன்பம் அளிப்பவளாகவும் இருக்கின்றாள்.
 
0815: விசுத்திச் சக்கரத்தின் பயன் :
சத்தியால் சொரியப்படும் வெண்மையான சுக்கிலத்திலும், பொன்மயமான சுரோணிதத்திலும் பராசத்தி பொருந்தி அவை செயல்படும் சுவாதிட்டான சக்கரத்தில் உள்ளாள்.  அங்கு ஆற்றல் கழியாது காக்கும் ஆற்றல் உடையவர்க்கு அதுவே உடம்பைக் காக்கும் பச்சிலையாகும்.  மேல் கண்ட விசுத்திப்பயன் இதுவாகும்.
 
0816: உண்மை ஞானம் உண்டாகும் :
காமவெற்றியை அளிக்கும் கொடி போன்ற குண்டலினி சத்தி வான மண்டலத்தில் சிவத்துடன் சேர்ந்து மகிழ்வுடன் விளங்கினால், எட்டுப் பெருஞ்சித்திகளை அளிக்கும் உண்மை ஞானம் உண்டாகும்.  குண்டலினியின் இனமான சிற்சத்தியுடன் அறிவு மயமான சிவனும் அறிவில் விளங்குவான்.
 
0817: பூமண்டலத்தில் நீண்ட காலம் வாழலாம் :
விசுத்திச் சக்கரத்தின் கீழே ஓடிக் கொண்டிருக்கும் உயிர்ப்பு, கண்டத்திலிருந்து உள் முகமாய் மேல் நோக்கிச் செல்லும்.  உடலைத் தாங்கிய வீணாத் தண்டை விட்டுத் தூண்டி வானத்தை அடைந்து, கவிழ்ந்திருக்கும் சகஸ்ர தளமாக்கி விளங்குமாறு செய்தால் சந்திர மண்டலம் வளர்ந்து பூமண்டலத்தில் நீண்ட காலம் வாழலாம்.
 
0818: நாதாந்தத்திலுள்ளவர் மன அசைவு நீங்குவர்;  ஆனந்தம் அடைவர் :
சந்திர மண்டலத்தினுள் மனத்தைப் பிணிக்கும் ஒட்டியாணபீடத்தைக் கண்டு மனத்தை அங்கே கீழே போகாமல் நிறுத்திப் பழைய ஆனந்த மய கோசத்துள் பெரிய சூரிய ஒளி விளங்கக், குண்டலத்தை அணிந்த கூத்தனும் அசைவில்லாமல் விளங்குவான்.
 
0819: உடல் பற்றை விட்டு நீங்கி நிற்க :
முன் சொன்ன சாதனையினால் விசுத்தி என்ற சக்கரத்துக்குக் கீழ்ச்சென்று ஒழியும் வாயு அண்ணாக்கின் வழியே மேலே போய்த் தங்கும்.  அதனால் ஒளியானது நிலை பெற்று வழிகின்ற காலத்தில் சகஸ்ரதளத்தில் விளங்கும் திருவடியைப் புகழும் போது உடலான பையை விட்டு நீங்கி நில்லுங்கள்.
 
0820: சீவன் ஒளியுடையதாய் விளங்குதல் :
உடம்பினுள் உள்ள மூலாதாரக் கதவான குதத்தை இறுக்கமாகப் பிடித்தால் உடல் ஒளி விளங்கும்.  நாடியுள் அபானன் உக்கிரமாய் மேல் எழுந்த போது மலங்களுடன் கூடிய சீவன் ஒளி உடையதாய் விளங்கும்.
 
0821: அக்கினி கலை ஒளிரும் :
மூலாதாரப் பந்தத்தால் அமைந்த வாயு மேல் எழுவதை எண்ணிக் கசக்குதலால் சுருங்குகின்ற விசுத்திச் சக்கரத்தின் மீது வழிபடத் தக்க சந்திர மண்டலங்கள் சுருங்கும்.  இத்தன்மையைச் சொல்லவா வேண்டும்?  வேண்டியதில்லை. மூலபந்தம், சாலாந்திர பந்தத்தால் பிராண அபானன் சேர்க்கை உண்டாகும். 
அக்கினி கலை சிறந்து ஒளிரும்.
 
0822: தொலைக் காட்சி கண்பவர் :
வான பூதத்தில் வாயு பூதம் உள்ளதைச் சொல்லலாம்.  மேலும் அக்கினி, நீர், நிலம்  ஆகியவை அங்குக் கூறவும் கூடும்.  வான் முதலாகிய ஐம்பூதங்களும் ஒளி மயமாய்ப் பொருந்தியிருப்பதைக் கூறவும் கூடும்.  அவ்வாறு கண்டவர் தொலைப் பார்வையை உடையவர் ஆவார்.
 
0823: சிவஞானத்தின் பயன் :
தொலைப் பார்வையைப் பற்றிக் கூறுவதை உங்கள் அனுபவத்தில் அறியலாம்.  மேகத்தைப் போன்று அருள் வழங்கும் ஞானத்தை உள்ளே நிறுத்திச் சிவத்திடம் மனத்தை வைத்திருந்தால் புவி முதலான உலகங்கள் பகலில் தோன்றுவது போல் விளங்கும்.
 
0824: ஆன்மாவில் சிவன் விளங்குதல்:
முன்னால் எழும் கொப்பூழ்த் தாமரைக்குப் பன்னிரண்டு விரல் கடை கீழேயுள்ள மூலாதாரத்தில், சூரியனான புருடன் விளங்குவதாகப் பன்னி எழும் வேதம் சொல்லும்;  கீழே குண்டலினியைப் பந்தித்து மேலே செலுத்துவதில் நன்கு எழும் நாதமான அறிவில் பொருந்தியிருப்பின் ஆன்மாவான தன்னிடம் எழுகின்ற கோயிலில் சிவன் விளங்குவான்.
 
19. பரியங்க யோகம் :
(பரியங்கம் என்பது கட்டில்.  யோகமாவது சேர்க்கை.  கட்டிலில் ஆடவன் பெண்ணுடன் கூடியிருந்து செய்யும் போகத்தை யோகமாய் ஆக்குதல் என்பது கருத்து.)
 
0825: போகம் யோகமாதல் வேண்டும் :
பூசத்தக்கனவற்றை ஓர் ஆடவன் உடலில் பூசிக் கொண்டு, மலர்ந்த மணம் நிறைந்த மாலையைச் சூடிக்கொண்டு, பெண்ணொருத்தியுடன் புணர்ச்சியில் பொருந்தியிருக்கும் போது, அந்த ஆடவனின் உள்ளமானது பிரமரந்திரமான உச்சியை நினைந்திருந்தால் புணர்ச்சி தளர்ச்சி அடையாது.
 
0826: சுக்கிலம் சுரோணிதம் நாத விந்துக்களாய் மாறுதல் :
உச்சித் தொளையில் விளங்கும் பேரறிவுப் பொருளை எண்ணிய வண்ணம் ஒருவன் புணர்ச்சியைச் செய்தால், காம வாயு விரைவாய்த் தொழிற்படாது.  அப்போது நீரின் தன்மை கொண்ட சுக்கிலமும் சுரோணிதத்தில் கலக்காமல் திரும்பும் சூதாடும் கருவிகளைப் போன்ற முலைகளையுடைய பெண்ணும் உடலான தேரைநடத்தும் ஆடவனும் தமக்குள் பொருந்திய கூட்டுறவால் வெளிப்பட்ட சுக்கில சுரோணிதங்கள் விந்து நாதங்களாய் மாற்றம் அடைந்து தலையில் பொருந்தும்.               இந்த யோகத்தில் ஈடுபடுபவன் நாதமான சிவனும் விந்துவாய சத்தியும் தலையில் விளங்குவதைக் காணலாம்.
 
0827: பரியங்க யோகத்தில் உடல் தளராது :
ஒரு தலைவனும் தலைவியும் விருப்புடன் புணரும் போது  தீ மண்டலம் சூரிய மண்டலம் என்பனவற்றைக் கடந்து சந்திர மண்டலத்தில் இருவரும் தலையின் மேல் உள்ள வெளியினை அறிவர்.  உடலான வண்டியை மென்மேலும் செலுத்துவதால் சந்திர மண்டலத்தில் வான் கங்கையாகிய ஒளியைப் பெருக்கிட உடலில் தண்டு ஒரு போதும் தளர்ச்சி அடையாது.
 
0828: விந்து ஜெயம் பெற்றவன் :
புணர்ச்சியின் காரணமான காமத் தீ புணர்ச்சியின் போது உடம்பில் இருந்து விந்துவை நீக்கம் செய்கின்ற போது, அதைக் கெடாது பாதுகாத்து யோகத்தால் மாற்றி விந்துவை நீக்காது  ஜெயம் பெற்றவன் தலைவன் ஆவான்.
 
0829: உடம்பு வசப்படுதல் :
அத்தகைய வெற்றி கண்ட தலைவன் ஆன்மாவை அறிந்தவன்.  அத்தகையவன் விரும்பிய சிவயோகம் அவனைத் தானே வந்தடையும். அவன் தன்னை வயப்படுத்தி ஆள்கின்ற தலைவனும் ஆவான்.  அவனுடைய விருப்பின் படி நிலம் முதலிய பூதங்கள் நடக்கும்.
 
0830: ஐந்து நாழிகையே யோகம் :
ஐந்துநாழிகைக்கு மேல் ஆறாம்நாழிகையில் துணைவி துணைவனுடன் பொருந்தி உறங்குவாள்.  ஐந்து நாழிகை கொண்ட பரியங்க யோகம் மனம் நிறைவோடு இனித் தேவையில்லை என்னுமாறு அமையும். 
            இந்த யோகம் ஐந்து நாழிகை அளவே செய்ய வேண்டும்.  அதற்கு மேல் நீண்டால் தலைவி தலைவனிடம் ஊடல் கொள்வாள்.  அதை நீடுமாறு விட்டால் விந்து வெளியாகும். எனவே ஐந்து நாழிகைக்குமேல் நீளவிடல் ஆகாது என்றும் பொருள் கொள்ளலாம்.
 
0831: பரியங்க யோகம் செய்பவரே குண்டலினி சத்தியைக் கடக்க முடியும் :
பரியங்க யோத்தில் ஐந்து நாழிகை, அரிதாய் இருப்பவர்க்கே குண்டலினி சத்தியைக் கடந்து மேலே செல்ல முடியும்.   நழுவும் வளையலை அணிந்த கையை உடையவளும் மணம் பொருந்திய சூரிய சந்திரர்களாகிய கொங்கைகளை உடையவளுமான குண்டலினி சத்தியைக் கடந்து மேலே செல்ல வேறு எவராலும் முடியாது.
 
0832: இந்த யோகத்தைப் பயின்றவர் மேன்மை அடைவர் :
யாவராலும் அடைவதற்கு அருமையான இந்த யோகத்தைச் செய்து அறிவித்தவர் யார் என்றால், வான் கங்கையை முடியில் வைத்த சீகண்ட உருத்திரன் ஆவான்.  அவன் நாதத்துடன் கூடிய  ஒளியை ஐந்து நாழிகை வரையில் உருவத்தை எண்ணாமல் நாதத்தை எண்ணி அனுபவித்திருந்தான்.
 
0833: பரியங்க யோகத்துக்குரிய வயது ஆணுக்கு முப்பது; பெண்ணுக்கு இருபது.
இந்தப் பரியங்க யோகத்துக்கு உற்ற வயது பெண்ணுக்கு இருபது; ஆணுக்கு முப்பது.  அப்போது பொருந்திய பெண்ணுக்கும் ஆணுக்கும் மனம் அழிந்து ஞானேந்திரியங்களான மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐந்தும் இன்பம் அடைந்து  ஆனந்தம் உண்டாகும்.  ஆயினும் விந்து நீக்கம் ஏற்படாது.
 
0834: நந்தியான குரு உபதேசம் செய்தார் :
வெண்மையான சுக்கிலம் உருகிப் பொன்னிறச் சுரோணிதத்தில் கலக்காமல் தட்டானான சிவன் கரியாகிய அருளைத் தந்து பக்குவம் செய்தார்.  தீயாகிய அக்கினி கலை உண்டாக ஊது குழல் ஆன சுழுமுனை வழியே போய்ப் பொன் என்னும் சந்திரனைச் செப்பாகிய உள்நாவில் விளங்கும்படி வைத்தார்.
                                                                                                                                                                   0835: பரியங்க யோகத்தால் சிவசூரியன் விளங்குவான் : விந்து நீக்கம் இல்லாது புணரும் ஆண் பெண் ஆகிய இருவரும் தாம் இன்பம் அடைந்து, காம வயப்படாமல் தேவ காரியமாய் எண்ணிச் செய்யும்
நிலையில், அவர்க்குப் பத்துத் திக்குகளுக்கும், பதினெட்டு வகைத் தேவர்களுக்கும் தலைவனான சிவசூரியன் விளங்குவான்.
 
0836: சந்திர மண்டலத்தில் திளைப்பர் :
விருப்பத்தைத் தரும் சூரியனுக்கும் பிறப்புத் தரும் கருவாய்க்கும் இடையில், சிறந்த பெண்ணைப் புணரும் ஆண்மகன் ஆனந்தம் அடைவான்.  இருவரது புணர்ச்சியில் சுரோணித வழிச் சுக்கிலம் பாயாமல் சந்திர மண்டலத்தில் விளங்கும் செந்நிறம் உடைய சத்தியான நாதத்தில் திளைத்திருப்பர்.
 
0837: சந்திர மண்டலத்தில் கருத்து உடையவர் அடையும் பயன் :
பரியங்க யோகத்தால் மனத்தைத் தூய்மை செய்து கருத்து அழகோடு  அங்கு இருந்தால் பெண்ணுடன் கூடுவார்க்குத் துன்பம் இல்லை.  உடலில் விந்து நீக்கம் செய்யாது விந்துவைச் செலுத்தும் காம வாயு மேல் நோக்கிச் செல்லும்.
 
0838: உடல் கீழே வீழாது :
சுவாதிட்டானத்தில் இருக்கும் காமாக்கினியை மூலாதார வழிப் புருவ நடுவுக்குக் கொண்டு சென்றால், தீயின் முன் மெழுகைப் போல் பயிற்சியாளருக்கு உடல் காணாமல் ஒழியும்.  பேரொளியைக் கண்ட பின்பு உழுதலான செயல் இல்லை.  புருவ நடுவைத் தாண்டித் துவாத சாந்தப் பெருவெளியான வான்வெளியை
அடைந்தவரின் உடல் உயிர் பிரிந்த பின்பு கீழே விழாது உருகி விடும்.
 
0839: ஒளியைப் பார்த்திருப்பவர்க்கு உலகம் புலப்படாது :
வானத் தானத்தை அறிந்து அங்கு விளங்கும் பொன் ஒளியை அறிந்ததால் உள்ளம் வேறுபடாமல் தெளிவான ஞானத்தைப் பெற்றுச் சிறந்த சிவன் அருளால் பரமான வானத்தை அறிந்திருந்தேன்  அதற்கு மேல் நான் அறிவில்லை.
 
0840: சிவம் விளங்கும் இடம் :
திருமால், பிரமன், உருத்திரன் முதலியவர்களுக்கு மேலாய் துரிய பூமியில் விளங்கும்  சிவம் பராசத்தியை விட மேலே உள்ளது.
 
0841: நெடுங்காலம் வாழலாம் :
மின்னல் ஒளியில் விளங்கும் சத்தியும் அவளை ஆளும் சிவனும் என்ற இருவரையும் கூட்டத்துடன் பொன்னொளி கொண்ட வானத்தில் நிலை பெறும்படி செய்து அக்கூட்டத்தில் ஆன்மாவான தன்னையும் காண வல்லவர் ஆயின் இந்த உலகத்தில் நீங்கள் நெடுங்காலம் வாழலாம்.
 
0842: ஆன்மாவை ஓமப் பொருள் ஆக்குவர் :
காமவாயுவை உள்ளேஇழுத்து சுக்கிலம் கெடுமாறுசெய்து, அங்ஙனம் உள்ளுக்கு இழுத்த காமவாயுவை மேல்முகமாய் ஆக்குதற்குரிய வழியை அறிபவர் இல்லை.  அத்தகைய மாற்றம் செய்யும் வழியை அறிந்தவர்,  சிவத்திடம் வளர்ச்சி பெற்ற தன்னை வேள்வியில் இடும் பொருளாய்,  ஓமமாய்ச் செலுத்தியவர் ஆவார். 
 
0843: சத்தி அருளுவாள் :
ஆன்மாவை இறைவர்க்கு ஓமமாய்ச் செலுத்திப் பிரமப்புழையில் மேலான சகஸ்ரதளத்தில் பொருந்தினால் அப்போது மண்டையில் உள்ள மயிர் கருக்கும்.  சீவனுக்கு அருள வேண்டிய நன்மையை எண்ணிக் கொண்டு சிவசத்தி விளங்குவாள்.  பக்குவத்தை உம்மிடம் அறிந்து உம்மிடம்உள்ள பிருதுவிச் சக்கரத்தின் செயலை மாற்றி, காம வாயுவைக் கீழ் நோக்கிச் செல்லவிடாது மேல் நோக்கிச் செல்லும்படி அருள்வாள்.
 
0844: சகஸ்ரதளத் தாமரையின் இயல்பு :
சகஸ்ரதளமாகிய ஆயிரம் இதழ்த்தாமரை ஒன்று இருக்கின்றது.  சிதாகாயத்தில் விளங்குவதால் பூமியும் நீரும் அங்கு இல்லை.     சகஸ்ரதளமான இத்தாமரை மலர்ந்து பூவாகவே உள்ளமையால் அதற்கு மொட்டும் வேரும் இல்லை. அங்குக் காணப்படும் ஒளி ஒன்றுள்ளது. அகண்டமாக இருப்பதால் குறிப்பிட்ட ஓர் இடம் இல்லை.  நாதத்துக்குக் காரணமான இந்தச் சகஸ்ரதள மலர் எங்கும் பரவியிருப்பதால் அதற்கு அடியும் நுனியும் இல்லை.
 
20. அமுரி தாரணை.
(அமுரி என்பது வீரியம்.  தாரணை என்பது தரித்தல்; தங்குதல்.  எனவே அமுரிதாரணை என்பது வீரியம் உடலில் தங்கும்படி செய்தல் என பொருள்படும்.)
 
0845: உயிரை வருத்தாமல் காக்கும் வழி :
உடலில் உள்ள அமுத மயமான வீரியத்தை உடலினின்றும் நீங்காமல் ஆக்கப் பொருள் ஆக்கினால் அது ஒளி அமைத்து உறுதி தரும். வேண்டும். கீழிருந்து நீரை மேல் ஏற்றுதல் போன்று கீழே இருக்கின்ற அமுரியான வீரியத்தை மேல் ஏற்றுதல் வேண்டும். இல்லறத்தார் காமவாயு செயற்படும் நேரத்தில் சிவத்தியானம் செய்து போகத்தை யோகம் ஆக்கலாம்.   துறவியராயின் மூலபந்தனம் முதலியவற்றைச் செய்து குதத்தை நெருக்கிச் சிவத்தியானம் செய்து காமவாயுவை மூலவாயுவுடன் கலக்குமாறு செய்து மேலே ஏற்றலாம்.   இப்படி கீழே செல்வதை மேலே போகும்படி செலுத்தினால் உயிரை வருத்தாது காக்கலாம்.
 
0846: உடல் பொன் போல் ஒளிரும் :
தெளிந்த இந்தச் சிவ நீரைப் பருகினால் ஓராண்டுச் சாதனத்தில் ஒளியைக் காணலாம்.  இது கேடற்றது.  காற்றுடன் மேலே ஏறும் எட்டு ஆண்களில் மனம் கீழ் நோக்குவதைக் கைவிடும்.  மேலே நிற்கும்.  மகிழ்ச்சியை விளைவித்துக் கொண்டிருக்கும்.  உடல் பொன் போன்று ஒளிரும்.
 
0847: தலையின் மயிர் கருமை அடையச் சிவநீர் சிறந்த மருந்தாகும் :
சிவநீரானது கீழே உள்ள குறியை நெருக்குகின்றதாலும் பிழிதலாலும் உடம்பில் சிவநீரை நீடிக்கச் செய்ய இதை விட மேலான மருந்து இல்லை.   மக்கள் இந்த நுட்பத்தை அறிந்து தலையில் பாயச் செய்து கொண்டால் நரைத்த மயிர் கருமையாகும் மாற்றத்தைக் காணலாம்.
 
0848: தக்க பருவத்தில் சிவநீரைப் பருகுக !
அறிவற்ற மக்கள் சிறுநீர்க் குழாய்க்கு அருகில் உள்ள சுக்கிலத்தைக் கழிக்க வேண்டும் என்பர்.  சத்தம் இல்லாத முதல் நிலையையும் முதிர்ந்த இலையையும் அகற்றி அருந்த வல்லார்க்கு மயிர் கருத்தலும் தோல் சுருங்குதலும் ஆகியவை மாற்றம் அடையும்.  அங்ஙனம் நீரை உடலில் அமைக்க வல்லார்க்குக் கூற்றுவனால் பயம் இல்லை.
 
0849: உடல் மென்மையாகும்; மயிர் கருமை பெறும் :
அழகான கூந்தலையுடைய பெண்ணே!  ஒரு வியப்பு உள்ளது!  உடலில் மறை முகமாய்ச் சென்று இந்நீர் சிரத்தை அடையும் காலத்து மிளகு, நெல்லிப்பருப்பு, கத்தூரி, மஞ்சள், வேப்பம் பருப்பு என்பனவற்றை அரைத்துத் தலையில் தேய்த்து முழுகி வந்தால் உடல் மென்மையாவதுடன் மயிரும் கருமை பெறும்.
 
0850: அமுரியின் பெருமை :
வீரியத்தால் ஏற்பட்டதால் "வீரமருந்து" என்றும், வான வெளியில் சோதியாய் ஆவதால் "தேவர்மருந்து" என்றும், பெண்ணால் அடையப்படுவதால் இதை "நாரிமருந்து" என்றும் என் குருநாதன் கூறி அருளினான்.  இது முதன்மையான மருந்து என யோகியர் அறிவார்.  இது பரந்த பேரொளி மயமானது. 
இதைச் சாமானியர்க்குக் கூறக் கூடாது.
 
21. சந்திர யோகம்.      (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம் என்பது 'சந்திரயோகம்' என்பதன் பொருளாம்.)
 
0851: அகத்தே உள்ள சந்திரன் நிலை :
சந்திரக் கலையானது பரு உடலினின்று நுண் உடலுக்கு ஏறியும், நுண்ணுடலில் இருந்து பருவுடலுக்கு இறங்கியும் வரும்.  இரு பக்கத்திலும் உள்ள சந்திரன் ஒரு பக்கத்தில் வளர்வதும் மற்றொரு பக்கத்தில் தேய்வதும் போல அமையும். அன்னமயமான பரு உடலைச் சுற்றியுள்ளது பிராணமய கோசம்.  அதைத் தாண்டித் தொம்பைக்கூடு போல் உடலைச் சூழ்ந்து மேல் பக்கம் கீழ்ப்பக்கம் நிறைந்துள்ளது நுண்ணுடல்.  வெளியே இருக்கும் சந்திரன் வளர்ந்து தேய்ந்து வருவதைப் போல் உள்ளே உள்ள சந்திரனும் வளரும் தேயும்.  சந்திரகலை விளக்கத்தால் நுண்ணுடல் தூய்மை அடைவதற்கு ஏற்பப் பருவுடலும் தூய்மை
அடையும்.
 
0852: யோகியார் அறிந்த அறிவு :
உடலுக்குள் விளங்கும் சந்திரனின் பதினாறு கலைகளையும், சூரியனியின் பன்னிரண்டு கலைகளையும், அக்கினியின் பத்து கலைகளையும்  நடுநாடி வழியாய்ச் சுழுமுனை வழியாய் இயங்கச் செய்வது அகத்தவம் உடைய  யோகி அறிந்த அறிவே ஆகும்.
 
0853: நிறைமதியில் சூரியனும் அக்கினியும் ஒடுங்கும் :
பன்னிரண்டு கலைகளை உடைய சூரியனைச் சந்திரனுடன் சேர்க்கப் பயின்றவர் உலகம் உவக்கும் பேற்றை அடைவர்.  பெருங்கால் என்ற சந்திர கலை பதினாறும் அக்கினிக் கலையுடன் சேரவே சூரியக் கலை அடங்கி விளங்கும்.
 
0854: அறுபத்து நான்கு கலைகளாய்ப் பிரணவம் விளங்கும் :
சூரியக் கலை உயர்ந்து போகின்ற அளவு பன்னிரண்டாகும்.  பால் போன்ற நிறமுடைய சந்திரகலை உயர்ந்த அளவு பன்னிரண்டாகும்.சூரியக் கலையும் சந்திரக் கலையும் இணந்துள்ள அக்கினிக் கலையின் கலப்பு அறுபத்து நான்கு ஆகும்.  கலைகளின் இந்நிலையை அறிந்து கொள்ளுங்கள்.  உயர்கலைகளான
சூரியக் கலை, சந்திரக் கலை, அக்கினிக் கலைகள் கூடிய போது தலைக்கு மேல் அறுபத்து நான்கு கலைகளான பிரணவம் தோன்றும்.
 
0855 & 0856 : தொண்ணூற்றாறு கலைகள் :
அக்கினிக் கலைகள், அறுபத்து நான்கும் பன்னிரண்டும் பதினாறும் முறையே அக்கினி, சூரியன், விந்துநீக்கம் இல்லாத சந்திரன் என்பனவற்றின் கலைகளாகும்  எனவுரைப்பர்.  இவை கட்டப்படும் மூலாதாரத்தில் உள்ள நாள் மீனுக்கு (நட்சத்திரத்துக்கு) நான்கு கலைகள் உள்ளன.  இங்ஙனம் கட்டப்பட்ட தொண்ணூற்றுஆறும் கலைகள் ஆகும்.  (அக்கினிக் கலைகள் 64 + சூரியக் கலைகள் 12 +
சந்திரக் கலைகள் 16 + நாள் நட்சத்திரக்குரிய கலைகள் 4 அதாவது மூலாதாரஇதழ்கள் 4  = ஆக உடலில் மொத்தம் 96 கலைகள் செயல்படுகின்றன.
 
0857: யோகியர் சிவத்தியானத்தில் பொருந்தியிருத்தல் :
சந்திர, சூரிய, அக்கினி என்னும் எல்லாக் கலைகளும் இடைகலை, பிங்கலை நடுநாடி வழியாகத் தொடர்புடையவை.  அவற்றின் இயல்பான கீழ் நோக்குதலைத் தடுத்துச் சிரசின் மேல் சகஸ்ரதளத்தில் கூடும்படி செய்தலால் யோகியர் சிவத்தியானத்தில் பொருந்தியிருப்பர்.
 
0858: சந்திர மண்டலம் போல் காட்சி தரல் :
கீழே உள்ள அக்கினியில் குறைவையுடைய இடைகலை பிங்கலை அசையும் போது பரையொளி தோன்றும். அந்தப் பரையொளியில் சந்திர, சூரிய, அக்கினிக்கலைகள் உடலைக் கடந்து விளங்கும் போது இசையை எழுப்பிக் கொண்டு நட்சத்திரங்களைப் போல் விளங்கும்.  அப்போது அது சந்திர மண்டலம் போல் தோன்றும்.
 
0859: பிரணவமான நெறி :
மண், நீர், தீ, காற்று, சிறந்த வான், அழகிய சூரியன், அரிய சந்திரன், அக்கினி, மாறுபாட்டைச் செய்யும் சீவஒளி என்றஒன்பதும் பிரணவமான பெருநெறியாகும்.
 
0860: வளர்பிறையில் சீவர்கள் சிரசின் மேல் ஒளியிலே விளங்குவர் :
சந்திரன் தேய்பிறை முன்னிட்டுக் கீழ் முகமாகப் போகும் போது மூலாதாரத்தில் உள்ள ஒளி பிரகாசம் பெறும்.  சந்திரன் வளர்பிறையை அனுசரித்து மேல் முகமாய்ப் போன போது மூலாதாரத்தில் உள்ள ஒளி பிரகாசிக்காது. மூலாதாரத்தில் உள்ள  ஒளியில் எல்லா யோனிகளும் உள்ளன. மூலாதாரச் சக்கரத்துக்குக் காரணமான அந்த ஒளியே சகல சீவர்களின் வடிவமாகும்.
 
0861: சிவனின் திருவடியை அடையமுடியும் :
சந்திரனின் கதிர்கள் முதல் பதினைந்து நாள்களில் சிறிதுசிறிதாக வளர்ந்து பெருகி முழுமை அடையும்.  பிற்பட்ட பதினைந்தில் சிறிது சிறிதாகத் தேய்ந்து பெருகிய நிலையினின்று குறைந்து விடும்.  அகரச் சுட்டால் உணர்த்தும் வளர்பிறையை அறிய வல்லவர்க்கு அளவிட்டுச் சொல்ல முடியாத சிவபெருமானின் திருவடியை அடைய முடியும்.
 
0862: பிரணவம் விளங்கும் :
மூலாதாரத்தில் உள்ள அக்கினியை எழுப்பி மணிபூரகத்திலுள்ள சூரிய மண்டலப்பெருக்கைத் தாண்டிச் சந்திரமண்டலத்தை அடைந்ததும் அகர உகர மகர விந்து நாதமான ஐந்தும் விரிந்ததாய்த் தோன்றும் போது ஒளியான பிரணவம் விளங்கும்.  அதனால் ஐம்புலன்களின் வழியில் செல்லாது சந்திரன் சூரியன் அக்கினி என்ற மூன்றும் இணைகின்ற யோகம் அமையும்.
 
0863: பிறப்பு இறப்புச் சுழியில் விழுவர் :
ஒன்றுபட்ட கலைகள் பதினாறும் உடலிலே பொருந்த நிற்கும் ஒளிநிலை கண்டும் தாழ்ந்தவர் உண்மையை நினைப்பதில்லை.   அதனால் அவர்கள் கூற்றுவனைச் சினம் கொள்ளச் செய்து உடலினின்று உயிரைப் பிரிக்க முடிவு செய்த பின் அந்த எண்ணப்படியே போய்ச் சென்று இறப்பு என்ற சுழியில் வீழ்வர்.  இந்தத் தடுமாற்றத்திலிருந்து விடுபடமாட்டார்.
 
0864: பிரணவம் விளங்குதல் :
ஆண்குறியில் உள்ள சந்திரன் மூலாக்கினியுடன் பிரமரந்திரம் நோக்கிச்சென்றால் சூரியன் ஒளி கிட்டும்.  மூலாதாரத்தில் உள்ள அக்கினியையும் மணிபூரகத்தில் உள்ள சூரியனையும் ஒன்றாய்ச் சேர்ப்பதில் சந்திர ஒளியானது அமையும்.  இந்த இரண்டு ஒளியும் பிரமரந்திரத்தில் ஒன்றானால் சந்திரன் சூரியன் அக்கினி கூடிய பிரணவம் திகழும்.  அந்நிலையே யாவுமாகும்.
 
0865: திருவடி இன்பம் நிலைத்த இன்பமாதல்:
பன்னிரண்டு கலைகளையுடைய சூரியன் பெண்.  பதினாறு கலைகளயுடைய சந்திரன் ஆண். இந்த இரண்டும் வெளியில் போகாமல் பிடித்து நிறுத்தி முகத்துக்கு  முன் தோன்றும் ஒளியில் கலக்கும்படி செய்தால் தெவிட்டாத திருவடியினது இன்பம் நிலைத்த இன்பமாய் விளங்கும்.  சூரிய சந்திர ஒளிகளை
சேர்க்கும் முறைப்படி சேர்த்தால் பிரணவ ஒளி முகத்தின் முன் தோன்றும்.
 
0866: ஆயிரம் ஆண்டு உடல் கெடாமை :
சிறந்த சந்திரனான இடக்கண் நோக்கினைச் சூரியனான வலக்கண் நோக்குடன் குருவானவர் காட்டிய வழியில் பொருந்தியும் இம்முறையில் நின்று தவறாமல் பாதுகாத்து வருவீரானால் ஆயிரம் ஆண்டு உடலான ஆணி கெடாது விளங்கும்
 
0867: ஞானப் பகலவன் தோன்றுமுன் நாதம் கேட்டல் :
சீவகலை சகஸ்ரதளத்துக்குச் சென்ற போது தலையில் நாதம் ஒலிக்கும்.  அந்த நாதத்தில் சிவபெருமான் மகிழ்வுடன் திகழ்வான்.  இந்நிலைக்கு முன்னே சூரியன் சந்திரன் ஆகியவர் வலப்பக்கமும் இடப்பக்கமும் சிறியதான தீப ஒளி போல் திகழ்வர்.  பகலவன் புறப்படுமுன்பு சங்கின் ஓசை மக்களை எழுப்புவது போல்
ஞானப் பகலவன் தோன்றுமுன் நாதம் முன்னே தோன்றித் திகழும்.
 
0868: ஈசன் வெளிப்பட்டு விளங்குவான் :
பகலவன் சந்திரன் இயக்கத்தில் காலம் கணிக்கப்படும்.  இருவரும் ஒன்று சேர்ந்தபிரணவ நிலையில் சிவசத்தி விளங்கும்.  அதனால் அமுதம் பெருகும் அருள் நிலை உள்ளது.  நாத சம்மியம் செய்பவன் நாதத்துடன் கூடி அண்டத்தின் எல்லையான துவாத சாந்தத்துக்குப் போய் நெருங்க அங்கு ஈசனும் நேராய் எதிர்ப்பட்டு விளங்குவான்.
 
0869: சிவ ஒளியின் முன் சீவ ஒளி பிரகாசிக்கும் :
மணிபூரகமான கொப்பூழ்த் தாமரையில் வெளிப்படும் பேரொளியான பகலவன் சந்திரனுக்குரிய சுவாதிட்டானத்தை நோக்காத போது பகலவனே நாதமாகியும் சந்திரனான விந்துவே ஒளியாயும் ஆகிப் பிரணவம் அமையும்.  இந்த சிறியபேரொளியே பிரணவத்தில் பெரிய பேரொளியாக ஆகும் பிரணவத்தின்
உண்மையை எவரும் அறியவில்லை. சிவ ஒளியே சீவ ஒளிக்கு ஆதாரமாதலால் பிரணவத்தை அடைந்தவர்க்கு சீவ ஒளிக்கு முன் சிவ ஒளி பிரகாசிக்கும்.  ஆதலால் சிவ ஒளி, சீவ ஒளி தந்தையும் மகனுமாகவும் உரைக்கப்பட்டன.
 
0870: சிவம் வெளிப்படும் :
உண்மைப் பயன் ஒன்றையும் அறியமாட்டார்.  அந்த உண்மையை மற்றவர் எடுத்துச் சொன்னாலும் தாமே படித்தாலும் அறிந்து கொள்ளார்.  அவர்கள் அறிவிலிகள்.   சந்திரகலையின் ஆதியையும் முடிவையும் சேர்த்துத் திறம் பெற்றீரேல்  இரசகுளிகை போல் மாற்றத்தைச் செய்யும் சிவமும் அங்கு வெளிப்பட்டு விடும்.
 
0871: சிவன் சாதகனை விட்டு நீங்காமை :
குண்டலினியான பாம்பு சுவாதிட்டானத்தில் பொருந்தித் சந்திரகலையை வளர ஒட்டாது விந்து நீக்கம் செய்து கொண்டுள்ளது.  அக்குண்டலினியினது ஆற்றலானது தீமை அளிக்கும் மணிபூரகத்தில் உள்ள சூரியனையும் அசைத்து வெப்பத்தைச் செய்து கொண்டிருக்கும்.   
சிவனைத் தியானிப்பதால் குண்டலினி சுவாதிட்டானத்தில், பொருந்தாமல் மேலே செல்லும். விந்துஜெயம் ஏற்பட்டு சந்திரகலை வளரும். அப்போது வெம்மையைச் செய்யும் சூரியனும் வெம்மையைச் செய்யாதவன் ஆகிவிடுவான். மனமானது சிவஒளியில் நிற்கின்ற அளவும் குண்டலினியான பாம்பு சந்திரன் சூரியன் மூன்றும் தலையில் நிலை பெற்றுத் தீமை செய்யும் ஆற்றலை இழந்து விடுவான். அதனால் சிவன் நீங்காது விளங்கித் தோன்றுவான்.
 
0872: சிரசில் சென்ற மனம் விழித்திருக்க வேண்டும் :
குண்டலினியுடன் போன சந்திரன் சிரசின் மேல் நிற்கும் அளவும் உறங்காமல் அதனைக் கவனிக்கும்.  அங்ஙனம் நின்ற சந்திரன் கீழே இறங்கிய போது உறங்கியும் நன்மையைத் தரும்.  ஒளியினை மனத்தில் நிலைத்திருக்குமாறு செய்தால் விரிவைச் செய்யும் சந்திரன் முழுமையாகப் பயிற்சியாளனிடம் பொருந்தும்.
 
0873: சந்திரன் தலையை விட்டு இறங்கியதும் உறங்கலாம் :
சந்திரன் தலையில் தோன்றும் அளவும் , காலை எழுந்ததும் துயிலின்றித் தியானம் செய்ய வேண்டும். காலையில் தியானம் செய்து  சந்திரன் தோன்றிய பின்பு தன் உணவை உட்கொள்ள வேண்டும்.  சந்திரன் தலையில் சஞ்சாரம் செய்யும் வரை உறங்காமல் இருந்து, தலையை விட்டுக்கீழ் இறங்கியதும் இதுவரையும் ஒளியைக் கட்டி நிறுத்தினவன் உறங்கலாம்.
 
0874: ஆணவமற்றுத் தன்னொளியில் திகழ்வர் :
ஊழிக்காலம் பிரியாதிருக்கும் யோகியர் நாழிகையைக் கருவியாய்க் கொண்டு கூற்றுவரின் வாழ்நாளை அளந்து காட்டி விடுவர்.  இவர்கள் உலகில் ஐந்தொழில் இயற்றும் சதாசிவ மூர்த்தியாவர்.   உலகில் ஆணவம் இல்லாது சிவத்தை ஆதாரமாய்க் கொண்டு தன் ஒளி பெற்றவராய் விளங்குவர்.
 
0875: அமுதக் கதிரைப் பருகியபடி இருப்பர் :
குளிர்மையுடைய சந்திரன் உச்சியாகிய வழியில் சகஸ்ரதளத்தில் போய் உலகத்தவரால் மதிக்கப்படுகின்ற இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலங்களையும் உணர்ந்து முழுச் சந்திர மண்டலத்தைக் கண்ட பின்பு அதிலிருந்து விளைந்து நிற்கும் அமுதத்துக்குக் குறைவில்லை.
 
0876: யோகியர் அறிவன :
மேடம், ரிக்ஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகளில் சூரியனின் ஆறு கலைகள் வளர்வதிலும் - அகரம், உகரம், மகரம், விந்து, அர்த்த சந்திரன்,நிரோதினி ஆகிய  சந்திர கலைகள் ஆறு குறைவதிலும் - தொண்டை தொடங்கிக் கீழ் நோக்கிச் செல்லும் எட்டு விரற்கிடை மூச்சுடன் நான்கு விரற்கிடை
மூச்சு மேல் நோக்கிச் செல்லும்.  மொத்தம் பன்னிரண்டு விரற்கிடையாக மூச்சு விரிந்து நின்றதை யார் அறியும் வல்லமை உடையவர்?
 
0877: யோகியர்க்குச் சந்திர கலை பூரணமாய் விளங்கும் :
விந்து கழியும் வழியாக ஆகின்ற உயிர் குறைவதால் சீவர்களுக்குச் சந்திர கலைமுழுமையாக விளங்காது.   யோகியர்க்குக் காமத் தொடர்பு இல்லாததால் விந்து கழியாது  மூலாதாரத்திலேயே கட்டுப்பட்டு விடும். எனவே பிரணவம் விளங்கும் மதி மண்டலத்தில் உணர்வைச் செலுத்தும் யோகியர்க்குச் சந்திரகலை பூரணமாய் விளங்கும்.
 
0878: பௌர்ணமி நாளாக விளங்குதல் :
சிரசில் வலப்பக்கத்தில் மேட ராசி முதல் கன்னி ராசி வரை விளங்கும் சூரியக்கலைகள் ஆறுடனே, கீழ் உள்ள மூலாதாரத்தில் உள்ள நான்கு கலைகளும் கலந்தே விளங்கும்.  அறிவுப் பொருளான சூரியன் அக்கினி கலை பத்துடன் சந்திரன் விளங்கும் துலா முதல் மீன ராசி வரையில் அறிவு பொருந்தியபோது
சந்திரன் பௌர்ணமி நாளாக விளங்கும்.
 
0879: உடல் அழியாது வாழலாம் :
சூரியனின் ஆற்றல் மிகுந்தால் காமப் புணர்ச்சியில் விந்து நீக்கம் ஏற்படும்.
யோகியானவன் உணர்வைச் சிரசின் இடப்பக்கத்துக்கு மாற்றிக் கொண்ட போது சூரியனின் ஆற்றல் குறைந்து புணர்ச்சியால் வெளிப்பட்ட விந்து ஒளியாய் சிரசின் மீது விளங்கும்.  காமப் புணர்ச்சியில் விந்து நீக்கம் இல்லாது சந்திரன்,சூரியன், அக்கினி மேலே விளங்கி ஒளியான நுண்ணுடலை வளர்க்கும். சீவனுக்கு ஊர்தியான நுண்ணுடலும் பருவுடலும் ஒப்பநின்றால் உடல் அழியாது வாழலாம்.
 
0880: சங்கொலி கேட்டு இன்பம் அடையலாம் :
வெளியே போகாத உள்ளம் காற்றுடன் இடப்பக்க மூளையில் பொருந்தி யாவற்றையும் நடத்துகின்ற சிவசங்கினது ஒளியைக் கேட்டு ஐம்புல ஆசையில் செல்லாமல் அடங்கி நற்கும்.  அங்ஙனம் பிரணவத்தில் கட்டப்படாதனவாயின் யோகியர் இன்பமான அமுதத்தைப் பருக மாட்டார்.
 
0881: அழிவை அடையார் :
சந்திர மண்டல ஒளி வெள்ளம் பிடரிக் கண்ணினின்று பாய்ந்து விளங்கும் சகஸ்ர தளத்தில் அதன் கரணிகை குமிழ் போல் உயர்ந்து நிற்பதில் சிவம், சத்தி, நாதம், விந்து, சீவன் என்ற ஐந்தையும் ஒன்றுபடுத்தி மூலாதாரத் தீயை வீணாத்தண்டில் செலுத்திக் காண்பவர்க்கு இறப்பு இல்லை.
 
0882: மூச்சின் இயக்கத்தை மாற்ற வேண்டும் :
அனுபவிக்கக் கூடிய அமுதம் ஊறும் ஊறலைத் திறந்து, பிரபஞ்சக் கலப்பினால் மாற்றமில்லாத சூரியசந்திரர்கள் பொருந்திய சகஸ்ரதளத்தை அடைய, தெளிந்த நீரினுள் இருப்பதைப் போன்ற உணர்வுடன், சமாதியில் நிலைத்து முடிவில்லாத இன்பத்தை விளைக்கும் கண்ணில் விளங்கும் சிவம் உணர்த்தும் வழியில் நின்று மூச்சின் இயக்கத்தை மாற்றலாம்.
 
0883: எங்கும் இன்பம் பெருகும் :
கீழ் நோக்குதல் இல்லாத சந்திரக் கலையை மாறுபடாமல் போற்றியிருங்கள்.வீணாத் தண்டுடன் சகஸ்ரதளத்தை அடைந்தால் உடலானது அழியாது.  வேண்டிய யோக உபாயங்களும் சிதறாமல் கிட்டும்.  உலகில் எங்கும் இன்பம் பெருகும்.
 
 
 
நான்காம் தந்திரம்: 0814 - 1418.
 
1. அசபை. அசபை என்பது உச்சரிக்கப்படாதது.
மூச்சுக்காற்றானது "ச" என்ற ஒலியுடன் உள்ளேநுழைந்து "ஹ" என்ற ஒலியுடன் வெளியே செல்கிறது.  உயிர்கள் யாவும் இதை உணர்கின்றனவே அன்றி உச்சரிப்பதில்லை.  இதுவே அசபைக்கான விளக்கமாக தாயுமானவர் பாடலில் சொல்லப்பட்டிருக்கிறது.  "ஓம்" என்ற ஒரு எழுத்து, ஒரு மொழியே பிரணவம் எனப்படுகிறது.  இது மனத்தால் உணரப்படவேண்டியது.  உச்சரிக்கப்படாத மந்திரம்.  இதுவே சகல மந்திரங்களுக்கும் ஆதாரமாய் முதல்வரைக் குறிப்பது. அ,உ,ம் என்ற எழுத்துக்கள் ஒன்றாய்ச்சேர்ந்து "ஓம்" ஆகிறது என்பது அறிஞர் கருத்து. பிரணவமே ஞானம்.  அதுவே பரம் பொருளை அடையும் நெறி.
 
0884: போற்றுகின்றேன் பிரணவத்தை :
புகழ்ந்து பேசப்படும் ஞானத்தை இடையறாது யான் போற்றுகின்றேன்.  மனத்தில்  உலகத் தலைவனான சிவன் திருவடியைத் துணையாகும் எனத் தெளிகின்றேன். சிவபெருமானின் சேவடியை அடையும் சிவயோகநெறியை, சிவபெருமானின் ஓரெழுத்து மந்திரமான 'ஓம்" எனும் பிரணவத்தைக்
கூறுகின்றேன்.
 
0885: பிரணவமே யாவும் :
ஓம் = அ + உ + ம்
"அ" சிவம் உலகெங்கும் பரவி விளங்குவதைக் குறிக்கும்.
"உ" சிவம் உடலுள் சிவசத்தியாய் விளங்குவதைக் குறிக்கும்.
"ம்"  சிவம் தோன்றுகின்ற ஒளிப்பொருளை மாயையால் மயக்கத்தைப் பொருந்துமாறு செய்வதைக் குறிக்கும்.
 
0886: சிரசின் வலப்பக்கமே அம்பலங்கள் :
தேவர்கள் இருக்கின்ற சிதாகாய ஒளியுடைய மண்டலமான சிற்றம்பலம் என்றும், தேவர்கள் உறைகின்ற அறிவு விளங்கும் வானமாகிய சிதம்பரம் என்றும்,  தேவர்கள் உறைகின்ற சிவபெருமான் வீற்றிருக்கும் இடமான திருவம்பலம் என்றும் தேவர்கள் உறைகின்ற சிரசில் புருவத்துக்கு மேல் வலப்பக்கத்தைக் கூறுவர்.
 
0887: கூத்தம்பலம் :
மேற் கூறப்பட்ட பொன்னம்பலத்தில் உயிர்களின் அறிவிற் பொருந்திப் படைப்பை நிகழ்த்தும் அற்புதத் தாண்டவமும், உயிர்களுக்கு இன்பத்தை அளிக்கும் ஆனந்தத் தாண்டவமும், உயிர்களின் இயக்கத்துக்குக் காரணமான அனவரத தாண்டவமும், உயிர்களுக்கு உறக்கத்தை ஏற்படுத்தி ஓய்வைத் தரும் பிரளய தாண்டவமும், உயிர்களின் பக்குவத்துக்கு ஏற்பத் தன்னிடம் அணைத்துக் கொள்ளும் சங்காரத்
தாண்டவமும் நிகழும்.
 
0888: கூத்தின் பயன் :
திருக் கூத்தான ஒப்பற்ற எழுத்து பிரணவம் ஆகும்.  திருக்கூத்தானது ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் அருளுவதையே குறிக்கோளாகக் கொண்டு நிகழும் இயல்புடையதாகும்.  அக்கூத்து எல்லாவற்றிலும் மேலாய் நிற்கின்றது தற்பர சிவ நிலை ஆகும்.  அக்கூத்துப் பொன்னம்பலத்தில் நிகழ்வதாகும்.
 
0889: யாவற்றையும் இயக்குவது :
ஒப்பில்லாத பேரொளிப் பிழம்பும் தானே ஆகும்.  எக்காலத்தும் அழிவு இல்லாது ஒன்று போல் எங்கும் செறிந்து மெய்ப் பொருளும் தானே ஆகும்.  அதுவே அகர உகரமான பிரணவத்தின் உறுப்புகளானவை யாகும்.  அது  தத்துவங்களை இயக்குவதற்குத் தானே ஒளியைத் தருவதாகும்.  அது பிற ஆதாரம் இல்லாமல் தனக்குத் தானே ஆதாரமாய் விளங்குவதாகும்.
 
0890: சிவனது நிலைகள் :
ஆதாரமான மூலாதாரத்தில் எழுந்தருளியுள்ள சிவம் அக்கினி மண்டலத்தில் 'நமவாசிய' என சுவாதிட்டானம் மணிபுரகங்களில் விளங்குவதாகும்.   மேல் ஆதாரமாகத் திகழும் ஒளி மண்டலத்தைச் சொல்லப் போனால் 'நவாசிய' எனப் பொருந்தும்.  அதற்குமேல் விளங்கும் சகஸ்ர தளத்தில் சீவன் சிவசத்தியுடன் 'யவாசி' எனத் திகழும்.
 
0891: பேரின்பத்தில் திளைக்கலாம் :
பிரமன், திருமால், உருத்திரன், மகேசுரன்,சதாசிவன் ஆகியோர் அறிவான சிவம் சத்தியான உணர்வு ஆகியவற்றின் அம்சங்கள்.  அவர்கள் உயிர்களின் அறிவுக்கும் உணர்வுக்கும் ஏற்றபடி பாசத்தையும் பாச நீக்கத்தையும் அமைக்கின்றனர்.  'ய' என்ற உயிர் சிவத்தை அடைந்த போது தத்துவங்களை உணராது சிவத்தில் கலந்து பரமாகும்.  அப்போது அவ்வுயிர் இயக்கம் இல்லாது அறிவுடையவனாய் சித்தி பெற்று விளங்குவான்.
 
0892: 'சிவாய' என்றிருப்பவர்க்கு ஆனந்தம் உண்டாகும் :
ஆனந்தமான அ,உ,ம என்றமூன்றும் அறிவாகிய விந்து,நாதம் ஆகிய இரண்டும் கூடிப் பிரணவமான ஒன்றாகும். 'சி' என்ற சிகாரத்தை 'நம' என்ற சுவாதிட்டானம், மணிபூரகத்துடன் பொருத்தாது ஆன்மாவுடன் பொருந்தும் வகையில் அதனது சக்தியை மாற்றினால்-அதாவது சிவாய என்றிருந்தால்-சிவானந்தம் உண்டாகும் என்பதை அறிவுடையவரில் பலரும் அறியவில்லை. இந்த உண்மையை அறிய
வல்லார்க்குச் சிவபெருமான் ஆனந்தக் கூத்தனாய் இருப்பதும் அப்பெருமான் நிகழ்த்தும் ஆனந்தக் கூத்தும் புலப்படும்.
 
0893: பிரணவத்தாலும் திருவைந்தெழுத்தாலும் பெறுவது விந்து நாதம் :
நூல்கள் பலவற்றைக் கற்றுணர்ந்தவர் விந்து நாதம் என்பனவற்றைப் பெறுவர். "ஓம்" எனும் பிரணவம் அல்லது "நமசிவாய" எனும் திருவைந்தெழுத்து என்பதைக் கொண்டு விந்து நாதம் விளங்கும் குரு மண்டலத்தை அடையலாம்.  இதனை விளக்குவதே அனைத்துயிர்களையும் தன்னகத்தே அணைத்துக் கொள்ளும் "சங்காரத் தாண்டவம்" என்பதாம்.  விந்து நாதமானது  விந்துத் திரிகோணம் என மொழிப்படுகின்ற சகஸ்ரதளத்தில் விரிந்து விளங்குவதாய் உள்ளது.
 
0894: அம்பலமாகவும் சிவமாகவும் விளங்குவன :
இப்படியே சதாசிவத்தினால் அருளப்பட்ட வேதநெறி சைவ நெறிக்கு மாறுபடாத ஆகமம்.  இங்ஙனம் வளமை மிக்க துறையை அடைந்தால் பாசநீக்கம் ஏற்படும். சைவாகமங்களால் சொல்லப்பட்ட உண்மை இங்ஙனம் உள்ளது.  இது எல்லோரும் போய் அடையும் பொதுச்சபையாகவும் அதில் விளங்கும்
குற்றமற்ற சிவமாகவும் உள்ளது.
 
0895: எல்லாவற்றுக்கும் ஆதாரம் சதாசிவம் :
மலம் அற்ற சிவமே பதி பசு பாசங்களுக்கு ஆதாரம்.  மலம் அற்ற அச்சிவமே மறைப்புக்கும் ஆனந்தத்துக்கும் அடைப்படை.  மலம் அற்ற அச்சிவமே கூறப்பட்ட ஆணவம் கன்மம் மாயைக்கு ஆதாரம்.   அச்சிவம் விளங்கும் இடம் "அனைத்துயிர்களையும் தன்னகத்தே அணைத்துக் கொள்ளும்"   சங்காரத்
தாண்டவம் விளங்கும் இடமாகும்.
 
0896: ஒப்பற்ற சிவத்தின் தன்மை :
அச்சிவமே சிவசத்தி பிரியாது இருப்பதால் சத்திக்குத் தலைவன் ஆவான்.  தான் விளங்கும் மலையாகவும் அப்பெருமான் விளங்குகின்றான்.அவன் மற்றவற்றுடன் கலந்திருப்பினும் தன் இயல்பில் குன்றாமல் விளங்குகின்றான்.  அப்பெருமான் தன்னை ஏவுவார் இல்லாமல் தானே தலைவனாக் விளங்குகின்றான்.
 
0897: தானே தலைவன் :
உயிர் இனத்துக்குத் தலைவனாய் நின்று விளங்குவது நின்மல சிவம்.  உயிர்களாகிய அவற்றைத் தாங்குபவனாயும் தலைவனாக உள்ளவனும் அச்சிவமே ஆம்.  சகஸ்ரதளத்தில் விளங்கும் ஞானமும் அச்சிவனே.  சூரிய சந்திரர்கள் அச்சிவனது திருவடிகளே.
 
0898: ஐம்பத்தோர் எழுத்தாய் விளங்குபவன் அவனே!
அச் சிவபெருமானின் திருத்தாள்களே அகரமாகிய பெரும் பொருளாகும்.  அப்பெரும்பொருளே 'ய'
ஆகிய ஆன்மாக்களில் விளங்குவதாகும்.  அதுவே ஐம்பத்தோர் மந்திரங்களுக்கும் தலைமயாய் உள்ளது.  இறைவன் ஐம்பத்தோர் எழுத்துக்களின் வடிவில் ஒலியுலகாய் உள்ளான்.
 
0899: மந்திரத்தின் வகைகள் :
ஏழாயிரம் எனக் கூறப்பட்ட மந்திரங்கள் "இருபது". "முப்பது" என்ற எண்ணிக்கையில் அமைந்த எழுத்துக்களால் ஆனவை.  அந்த ஏழாயிரம் மந்திரங்களும் "சுவதா, சுவாகா, வஷடு, வௌஷடு, ஹூம், ஹூம்படு" என்ற ஏழு முடிவுகளை உடையனவாகும்.  அனைத்து மந்திரங்களும் ஹம் (நாதம்) அல்லது சம் (விந்து) என்பனவற்றில் முடியும்.
 
0900: மந்திரம் அனைத்தும் சிவவடிவம் :
"அசபை" என்று கூறப்படும் பிரணவ மந்திரமே ஏழாயிர மந்திரங்களாகும்.  அசபை என்ற மந்திரம் எல்லாத் தன்மையுடன் பலவகையாய் உள்ளன.  அசபை மந்திரமே சிவவடிவமாய் யாவுமாய் உள்ளது.
 
0901: இருவகை மந்திரங்களின் இயல்பு :
சிவன் பிறர் ஒருவர் தூண்டாமல் தானே தகுந்த கூத்தை மேற்கொள்வான். தானே தன்னிடமிருந்து சத்தியைப் பிறப்பிப்பான்.  பின்னர் மகாமாயையில் நடைபெறும் பஞ்சக் கிருத்தியத்துக்கும் தானே நிகரற்ற கூத்தை மேற்கொள்வான்.  "ஓம்" என்பதில் சிவமும் சத்தியும் சமநிலையில் உள்ளனர் என்றும்
"‹ரீம்" என்பதில் சத்தியின் ஆற்றல் மிகுந்துச் சிவத்தின் ஆற்றலாம் அறிவு குறைந்து நிற்கின்றது என்றும் கூறலாம்.
 
0902: இரு கூத்தின் பயன் :
கூத்து இரண்டில் ஒன்று அற்புதக் கூத்து.  அது உயிர்களைப் பிறவியில் செலுத்துவது. அது இயமனுக்கு வேலை கொடுக்கும் கூத்து.   மற்றொன்று சங்காரக்கூத்து.  அது  அருள் பற்றி நிகழ்வது. அது நன்மையைத் தருவதாகும்.  சங்காரக் கூத்தே உலகத்தவர்  பழிப்புக்கு  ஆளாகாத பிரணவ மந்திரம்.   செம்பானது பொன்மயமாய் ஆவதைப் போல் இக்கூத்துப் பயன், ஆன்மா எடுத்த உடம்பு சிவமயமாய்
ஆகும்.
 
0903: மலக் குற்றம் நீங்குமாறு :
"சிவாயநம" எனத் திருவைந்தெழுத்தினை ஓதினால் செம்பின் குற்றம் நீங்கிப் பொன்னாவது போல் உயிரின் மலக்குற்றங்கள் நீங்கித் தூய்மை அடையும்.  அப்போது உயிரின் அறிவு மயமான பரம் பொருந்தும்.  "‚ம்", "கிரீம்" என்று உச்சரித்தாலும் அவ்விதமே உடம்பு பொன்னாகும்.  செம்பு பொன்னானது போல் திருவம்பலம் பொருந்திய போது உயிரின் குற்றம் நீங்கிடச் சிவமாய்த் திகழும்.
 
0904: திருவம்பலச் சக்கரம் அமைக்குமாறு :
திருவம்பலமாக விளங்கும் சக்கரத்தை அமைக்க ஆறு கோடுகள் குறுக்கும் நெடுக்குமாக இடுக.  அதை இருபத்தைந்து அறைகள் ஆக்குக. அந்த இருபத்தைந்து அறைகளிலும் முறையாய்த் திருவைந்தெழுத்து அமைத்து உச்சரிக்க.
 
                        சி   வா         
                           சி   வா      
                              சி   வா   
                                  சி   வா
                         வா             சி
 
0905: இன்பம் உண்டாகும் :
சிவாய நம சிவாய நம என்னும் முறையில் வன்மையாய் எண்ணிச் செபித்தால் பிறப்பானது உண்டாகாது.  அப்படியே வளர்ச்சியைத் தருகின்ற திருக்கூத்துக் காட்சியைக் காணலாம்.  அப்போது ஆன்மா மலம் நீங்கப் பெற்றுப் பொன்னே போல் விளங்கும். 
சிவாய நம என உச்சரித்தால் பிறவி நீங்கும்; பேரின்பம் உண்டாகும்.    
 
0906: சொல்லும் முறை:
'சிவாய நம' என்ற பொன் போன்ற மந்திரத்தை வாய் விட்டுச் சொல்லக் கூடாது. இந்தப் பொன் போன்ற மந்திரம் உதட்டளவில் ஒலியில்லாமல் உச்சரிக்கத்தக்கது.  இந்த மந்திரத்தைத் தியானிக்கும் போது சிரசில் அக்கினித் திக்கிலிருந்து உணர்வுஈசான திக்குக்குப் பாய்ந்து பெருகும். பெருகின் உடம்பு பொன்னாகும். திருவடிப்பேறு கிட்டப் பெறும்.
 
0907: சிறந்த ஆசான் ஆகலாம் :
திருவைந்தெழுத்தை எண்ணிணால் திருவடிக் காட்சியைக் காணலாம்.  இதனால் சிறந்த ஆசாரியனாக உருவாகலாம்.  மாணவர் பலர் அமைவர்.  சிவனருளால் மாணவனின் குற்றம் அறப்பெறும்.  பொன்னடியைக் காணத்தக்க உடலமையும்.   திருவடிக் கூத்துச் சிந்தனையை அறிவுறுத்தும்.
 
0908: எய்தும் பயன்கள் :
திருவைந்தெழுத்தைக் கணிக்கும் செயலால் மற்றோர் உடலில் புகுந்து அங்குள்ள இன்பத்தை அடையலாம்.அத்தகையவர் கவர்ச்சித் தோற்றத்துடன் விளங்குவதால்அழகிய பெண்கள் அவரை விரும்பித் தொடர்வர்.    அவர்கள் சொன்னாலே உலகத்தவர்க்குப் பற்று பாசம் என்பவை நீங்கும்.    இவை திருக் கூத்தினால் எய்தும் பயன்கள் ஆகும்.
 
0909: ஆயிரம் உரு தியானத்தினால் வரும் பயன் :
மௌனமாகத் தியானிக்கப்படும் திருவைந்தெழுத்தை ஆயிரம் முறை செபித்தால் மேல் உள்ள நுண்மையான சகஸ்ரதளம் விளங்குவதைக் காணலாம்.  சஞ்சித கர்மம், ஆகாமிய கர்மம் ஆகியவற்றை அழித்து விடலாம்.     நுண்மையான சிவானந்தம் உண்டாகும்.
 
0910: சிதம்பரச் சக்கரத்துக்கு உரியவை :
சீவனானது சகஸ்ரதளத்தை எய்திச் சிவத்துடன் ஒன்றிய நிலையைச் சொல்வது ஆனந்தம் ஆனந்தம்.
ஆ, ஈ, ஊ, ஏ,ஓம் என்ற ஐந்தும் ஒன்றிய நாதாந்த நிலையில் இறைவனின் சமத்தன்மையும் சீவனின் அயல்தன்மையும் பிரித்தறிய முடியாதபடி இருக்கும் இடத்தை அடைவது அதை விட ஆனந்தமாம்.  சிதம்பரச் சக்கரத்துக்குரிய பீஜ (வித்து)  எழுத்துக்களான அம், ‹ரீம், அம், க்ஷம், ஆம் என்ற இவை ஐந்தும் சிறந்த ஆனந்தத்தைத் தரும்.
 
0911: கூத்தின் இயல்பு :                                                                                                                        தூலவுடல் சூக்கும உடல் ஆகியவை ஒன்றுக்கு ஒன்று தடையாகாமல் அவை மிகுந்து ஒளி பொருந்தி
விகாரப் படாமல் நின்றால், தூலவுடல் சூக்கும உடல் ஆகிய இரண்டிலும் மேல் நோக்கிச் செல்லும் சூரியன் கொப்பூழை இடமாய்க் கொண்டு இருக்கும்.  கீழ் நோக்கும் இயல்புடையச் சந்திரன் இதயத்தினின்று கீழே இறங்கிக் குறியிடத்தை இடமாய்க் கொண்டு இருக்கும்.  இந்த நிலையானது
தீட்சையால் மாற்றி அமைக்கப்பட்டால் ஒளி மண்டலம் விளங்கும் மூலமான உண்ணாக்குப் பகுதியான விசுத்திச் சக்கரத்தில் சூரியனும் சந்திரனும் இணைக்கப்பட்டு சிரசில் ஒளி மண்டலம் தோன்றும். 
இதுவே திருக்கூத்தாகும்.
 
0912: ஒளி அமையுமாறு :
திருவைந்தெழுத்தில் தூலம் உடலிலும் சூக்குமம் ஒளியிலும் உள்ளன.  சூரியனும்சந்திரனும் இணைக்கப்பட்டு சிரசில்  தோன்றும் ஒளி மண்டலத் திருக்கூத்தே சிவாயநம, மசிவாயந, நமசிவாய, யநமசிவா, வாயநமசி என ஆகும். இந்த உண்மையை அறிந்து கடைப்பிடித்தால் சந்திர யோகமான சிவாயநம விளங்கி ஈ,ஊ,ஆ,ஏ,ஓம் பொருந்தும். சூரியயோகமான சிவாயநம விளங்கி ஈ,ஊ,ஆ,ஏ,ஓம் பொருந்தும்.  நமசிவாய கிரியை நெறியில் விளங்கி இ, ஊ,ஆ,ஏ,ஓம் ஆகும்.   இ•து ஒளி பொருந்தும் விதம் ஆகும்.  'ந' நீரையும், 'ம்' மண்ணையும், 'சி' ஒளியையும், 'வ' வாயுவையும், 'ய' வானையும்,குறிக்கும்.
 
0913: இறைவனின் ஆடலே உலக இயக்கம் :
சிற்றம்பலத்தில் சிவந்த ஒளியில் இறைவன் சிவன் ஒருவனாய் ஆட -  ஒன்றாய் விளங்கும் வான், இரண்டாய் விளங்கும் காற்று, மூன்றாய் விளங்கும் தீ ஆகிய இம் மூன்றும் இறைவனின் கூத்தினால் ஆட- வானில் இம் மூன்று ஒளிகளும் விளங்கும். இந்த மூன்று ஒளிகளுடன் மண் அணுக்கள், நீர் அணுக்கள், தீயணுக்கள், காற்று அணுக்கள், வான் அணுக்கள், விந்து அணுக்கள், நாத அணுக்கள் ஆகிய ஏழும் கலந்து ஆட- சிவம், சத்தி, நாதம்,விந்து, சாதாக்கியம், மகேசுரம்,உருத்திரன், திருமால், பிரமன் என்ற ஒன்பது தத்துவங்களும் அவனுடன் ஆடும்.   இறைவன் ஆட அனைத்தும் ஆடும்.
 
2. திருவம்பலச் சக்கரம் :
திருவம்பலச் சக்கரம் என்பது குறுக்கும் நெடுக்குமாகக் கோடுகள் இட்டுக் கட்டங்களில் எழுத்துக்களை எழுதி வழிபடுவதற்குரியது.  இது சிவன் சிதாகாயப் பெருவெளியில் ஆனந்த நடமிடும் பெருமான் சத்தியுடன் மந்திரவடிவாக விளங்குவதை விளக்கும் சக்கரம் ஆகும்.
 
0914: திருவம்பலச் சக்கரம் அமைக்க வேண்டிய முறையைக் கூறும் மந்திரம் :
 
0915: திருவம்பலச் சக்கரத்தின் மையத்திலும் சூழ்ந்தும் சிவம் பொருந்தும் :
 
0916: "அரகர" என்பதன் பெருமை :
"அரகர" என்ற திருப்பெயரைக் கூறியவர்க்குச் செய்வதற்கு அரியசெயல் ஒன்றும்இல்லை.   யாவும் எளிமையாய் முடியும்.  அத்துணைச் சிறப்பு உடையதாய் இருந்தும் அப்பெயரை ஓதிப் பயனை அடைய மக்களுள் பலர் அறியவில்லை.  "அரகர" எனத் தியானம் செய்பவர் ஒளியுடலைப் பெற்றவரும் ஆவார். 
"அரகர" என்று உரைத்தால் வினை இல்லாமையால் பிறவி உண்டாகாது.   சிவன்:  அரன்=வினைகளை அறுப்பவன்; கரன்=மாயா காரியத்தை ஒடுக்குபவன்.
 
0917: சிவன் ஒன்பது வடிவில் சிறந்து சிவலிங்கம் அமையும் :
திருவம்பலச் சக்கரத்தின் மையத்திலும் நான்கு திக்குகளிலும் நான்கு கோணங்களிலும் ஆகிய ஒன்பது இடங்களிலும் சிவன் ஒன்பது வடிவில் சிறந்து சிவலிங்கம் அமையும்.  பிரமன்.திருமால்,உருத்திரன், மகேசுரன், சதாசிவன், விந்து, நாதம், சிவம், சத்தி ஆகியவை சிவனின் ஒன்பது வடிவங்களாகும். இவ்வாறு வழிபடுவதுவழிபடுபவரின் சிரசின் மீது விந்து நாதம் பொருந்திட, இம்மந்திரம் வாக்குரூபினியால் கூடும்.  வெளியே உள்ள சக்கரத்துக்கும் உள்ளே நடு அறையை ஒட்டியுள்ள எட்டு வீடு கொண்ட சீவ சக்கரத்துக்கும் வேறுபாடு இல்லாது வழிபடுவோர்  வழிபடல் வேண்டும்.
 
0918: உடலில் உயிரை நிறுத்துபவர் :
சிவம், தேன்சிந்துகின்ற தாமரையான மூலாதாரத்தில் விளங்கும் குண்டலினியுடன்உடனிருக்கும் இயல்பைச் சிலர் அறியவில்லை.  - ஹம்சம் ஆன வெளி மூச்சு உள் மூச்சை இடைவிடாமல் கவனித்துக் கொண்டிருப்பவர் ( சூரிய சந்திரக் கலைகளின் செயலை மாற்றிட அறிந்தவர் ) - உடலில் உயிரை நிறுத்தும் இயல்பு உடையவர் ஆவர்.
 
0919: திருவைந்தெழுத்தே இறைவன் வீற்றிருக்கும் இடம் :
மூலாதாரத்திலிருந்து உடலின் மேல் ஏறும் நமசிவய என்ற தூல உடலின் தூலநிலை மாறி  உடலைக் கடந்து விளங்கும் ஒளியையுடைய சூக்கும உடலில் திருவைந்தெழுத்தாக சிவன் கோயில் கொண்டுள்ளான்.
 
0920: 'சிவாயநம' என்பதால் உண்டாகும் பயன் :
சிவாயநம என்று சிவத்தை முன் வைத்துச் சொன்னால் ஆறு ஆதாரங்களிலும் வான நுட்ப அசைவு செயற்படுகின்றது.  அச்சக்கரங்களுள் ஐந்தாவதாக உள்ள சக்கரம் மூலாதாரம் தொடங்கி விசுத்தியான கண்டமாகும்.   நடுக் கட்டத்தில் அகரமாகிய சிவம் பொருந்தும்.
 
0921: சூக்கும சிவாலயம் அமையுமாறு :
கொப்பூழ்த் தாமரையில் வளைந்து சுருண்டு கிடக்கும் குண்டலினி சத்தியை, கீழ் நோக்காது - ஓகாரம் விளங்கும் புருவநடுவுக்குச் செலுத்தி, அகரம் என்கின்ற சிவம் அறிவு மயமாய் விளங்கும் இடம் தலை யாகவும், சிவத்தின் அனல் தன்மை விளங்கும் இடம் இரு கண்களாகவும், சுவாதிட்டானத்தில் உள்ள அபானனான நகரமும் கண்டத்தின் வகாரமாய் நாதத்தை உண்டாக்கும் சுழுமுனையாவதை விருப்புடன் அடையுங்கள்.
 
0922: பிரணவ யோகம் :
விரும்பும் ஓம் எனும் பிரணவ மந்திரத்தை ஆஞ்ஞையில் நடுவாக இரு கண் பார்வையையும் பொருந்தி நோக்க வேண்டும்.  அச்சமயத்தில் அண்ணாக்குப் பகுதி யில் உணர்வாகப் பாய்வது 'நமசிவாய' என்பதாகும்.  அது சிரசைச் சூழச் சோமவட்டமாய் விரிந்து 'சிவாயநம' என்பது விளங்கும்.
 
0923: மாற்றி உச்சரிக்கும் முறை :
சிவாயநம என்னும் மந்திரம் மசிவாயந, நமசிவாய,யநமசிவ, வாயநமசி என்று மாற்றியும் உச்சரிக்கப்படும். இது சிகாரம் தொடங்கி சிகாரம் இறுதியாக முடியும்.
 
0924: ஐம்பத்தோர் எழுத்துக்களும் அம்பலச் சக்கரத்தில் அடைக்கப்படும் :
0925: சக்கரத்தின் வெளிப்பகுதி அமைப்பு :
0926: சிவத்துக்குப் பொருந்திய இடம் :
0927: சக்கரத்தில் மேலும் அமைக்குஜ்ம் முறை :
0928: அம்பலச் சக்கரம் சம்பத்தைத் தரும் சக்கரம் :
0929: ஐம்பூதத் தானங்களில் தியானம் :
 
0930: மும்மலங்களும் ஓலமிட்டு நீங்கும் :
சிவாயநம எனச் செபித்தால் உடலில் உள்ள ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் புலம்பியபடி அகன்று போய் விடும்.
 
0931: நாதத்தைக் கேட்பர் :
'சௌ' என்ற எழுத்தில் சிவமும் உமையம்மையும் சிவசத்தியாக ஈசானத்தில் விளங்குவதால் நல்வினை யாளர்கள் பின்பக்க மூளையில் நாத ஒலியைக் கேட்பர்.
 
0932: சிவதாண்டவம் காணலாம் :
0933: சதாசிவன் விளங்குதல் :
சிவலிஙம் அமைவதில் 'ஹம்சம்' என்ற எழுத்துக்களால் குறிக்கப்படும் சிவசத்தியின் விளைவான உலகப் பொருள்கள் யாவும் சூக்குமமாய் அமைந்துள்ளன.  அங்ஙனம் காரண வடிவாய்க் கலந்து நிற்பதைக் கண்டறிபவர் யாரும் இல்லை. அங்ஙனம் கலந்து நிற்பதைக் கண்டறிபவரிடம் சத்திய அடக்கி நிற்கும் சதாசிவன் திகழ்வான்.
 
0934: ஐந்தெழுத்தால் ஆனவன் சிவன் :
நந்தியெம்பெருமான் ஐந்தெழுத்து வடிவாய் விளங்குகின்றான்.  ஐந்து சொற்களின் முதல் எழுத்துக்களால் ஆகியது திருவைந்தெழுத்து. இந்த ஐந்து எழுத்துக்களாலேயே சக்கரங்கள் அமைக்கப்படும்.  அவற்றுள் நுட்பமாய் வீற்றிருப்பவன் முழுமுதற் பெருமான் சிவன்.
 
0935: கூத்தனைக் காணும் நெறி :
கூத்தப் பெருமானின் முதல் எழுத்து "சி" சிவாக்கினியைத் தூண்டும். கூத்தப்பெருமானின் பெருமையைக் காணும் அடையாளங்களைப் பற்றிப் பேசிக் கூத்தனின் முதல் எழுத்தான "சி "என்ற எழுத்தை ஓதியவர் அந்தச் சிவத்துடன் பிரிவில்லாதுநிற்பர்.  கூத்தனைக் காணும் நெறி இதுவே ஆகும்.
 
0936: தியானத்தின் பயன் :
மூலாதாரத்தில் இருக்கும் மூலக் கனலை எழுப்பி, அத்திசையில் விளங்கும் நகாரமான நமசிவாய என ஓதினால் முகம், இதயம், உந்தி, குறி என்ற இடங்களுக்கு விரிந்து மூலாதாரத்தில் மறைந்து கிடக்கும் சிவத்தைச் சென்றடையலாம்.
 
0937: குண்டலினி சத்தியை எழுப்புக :
மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சத்தியை எழுப்பினால், அந்தச் சத்தி தானே அருளை வழங்கிச் சகஸ்ரதளத்தின் மீது பொருந்தச் செய்யும்.  அங்கே உதித்த நாதத்தை அறியத் தானே விளைகின்ற ஒளி தலையின் மீது பொருந்தும்.
 
0938: மணியென ஒளிர்ந்தனன் :
சிவபெருமான் ஒளி மலையின் வடக்குத் திசை அல்லது சிரசின் இடப்பக்க மூளையில் எழுந்தருளியபோது இந்திரத் திசையான கிழக்கிலும் - அதாவது முகத்தின் முன் பக்கத்திலும் ஒளி விளங்கியது. இவ்வாறு தலையின்மேல் விளங்கிய ஒளியில் அக்கினி நிறமுடையவனான சிவபெருமான் மணியின் ஒளி போல் எனக்குத் தோற்றம் அளித்தனன். 
 
0939: சிந்திப்பார்க்கு வெளிப்பட்டருவான் :
பிறரால் வேண்டப்படாமல் சிவம் தகுதியானபோது குளிர்ந்த சந்திரக் கலையில் விளங்கும்.  பிறரால் அறிவிக்கப்படாமல் தானே அறிவுமயமாய் விளங்கும்.  கூறப் புகுந்தால் எல்லா நற்பண்புகளும் தானே ஆகும்.  அவனைச் சிந்திப்பவர்க்கு  அவனே தன் மறைப்பினின்று வெளிப்பட்டருள்வான்.
 
0940: திருவைந்தெழுத்து வடிவம் பெறுபவர் :
சிவமாம் தன்மையைக் காண வேண்டும் என்பவர் - அளிக்கப்பட்ட  பிறவியில் பிறரெல்லாம் மதிக்கும்படி சிவமாம் தன்மையைப் பெறுவர்.  நாத வடிவினனான சிவனின் அஞ்செழுத்தில் அடங்கியிருக்கும் சீவனும் திருவைந்தெழுத்து வடிவம் பெறும்.
 
0941: பஞ்சாக்கரமே மேனியாம் :
மேல் மந்திரத்தில் சொன்னவண்ணம் பாதம் அந்த "ந"கரமாய் விளங்கும்.  கொப்பூழ்ச் சக்கரத்துள் "ம" அடையும். ஆகின்ற "சி" இரு தோளாக "வ"என்ற சத்தியை வாயாய்க் கண்ட பின்பு அமையும் அச்சுடர் சிவத்தின் தன்மையுடையதாகும்.
 
0942: பிரணவமாகத் தியானித்தலின் பயன் :
சிவத்தின் இயல்பை அறிந்து 'நம' என இரண்டாகவும், 'சிவாய' என மூன்றாகவும் உள்ள "நமசிவாய" என்ற பஞ்சாக்கரத்தை அறிந்தவர்களிடம் செவ்விய இயல்புடன் சிவமாம் பரம் பொருள் விளங்கும். "ஓ"வான பிரணவமாய் உணர்ந்து ஒளி பொருந்தத் தியானித்தால் பரமாகிய இயல்புடன் (நாத மயமாய்) எங்கும் பரவி விளங்கும்.
 
0943: ஓங்காரத் தியானம் வேண்டும் :
"ஓம்" என்று எழுப்பி ஓங்காரத் தியானம் செய்யுங்கள்.   "ஓம்" என்ற பிரணவத்தினது நாதம் பரவி விரிந்தது.  "ஓம்" என்ற அம்மந்திரம் பல வகைப்பட்ட உயிர்களுக்கெல்லாம் விரும்பியவற்றை அளிக்கும்; நல்ல பேறு வாய்க்கும் போது சுற்றியுள்ள பகையான பிறவிக்குக் காரணமான இன்ப துன்பங்களை நீக்கும்.
 
0944: திருச்சிற்றம்பலத்தைக் கண்டு மகிழ்பவர்கள் :                                                                            மேம்பட்ட ஒளியைப் பிரணவ யோகத்தினால் எழுப்பி - அந்த ஒளி மண்டலமே நாம்  என்று அறிந்து
எழுப்பி - சுழுமுனையிலே விளங்கும் ஒளியே நந்தியெம் பெருமானாகும் என்று அறிபவர்கள்
, திருச்சிற்றம்பலத்தைப் பார்த்து மகிழ்ந்திருப்பவர்கள் ஆவார்கள்.
சீவனின் ஒளியிலே இறையொளியும் உள்ளது என்பதை உணர்ந்து சீவனின் உடம்பைச் சூழ்ந்த ஒளி நாமே என அறிதல் வேண்டும்.
 
0945: திருவம்பலச் சக்கரத்துள் இறைவன் விளங்குவான் :
திருவம்பலச் சக்கரத்துள் ஐந்து எழுத்தும் அழகுடன் ஐந்து அறைகளில் பொருந்தி விளங்கும்.  உயிரும் மெய்யுமாக உள்ள ஐம்பத்தோர் எழுத்துக்களும் விசுத்தியில் பதினான்கும், அநாகதத்தில் பன்னிரண்டும், மணிபூரகத்தில் பத்தும்,சுவாதிட்டானத்தில் ஆறும், மூலாதாரத்தில் நான்கும், ஆஞ்ஞையில் இரண்டும்
ஆகமொத்தம் ஐம்பத்தோர் எழுத்துக்களும் திருவம்பலச்சக்கரத்துள் பொருந்தும்.
14+12+10+6+4+2 = 48 ? 51
 
0946: சக்கரத்தில் ஐந்தெழுத்து மாறி நிற்கும் முறை :
அனைத்து மந்திரங்களுக்கும் முதன்மை உடையதாய்த் திகழும் திருவைந்தெழுத்துள் நடுவாய் விளங்குவது "ய" ஆகும்.  இந்த ஐந்தெழுத்தை யநவசிம, மவயநசி,சியநமவ, வசிமயந என நான்கு வகையாய்த் தியானிக்க வேண்டும்.   இவ்வாறு எழுத்துக்களை நிலை மாற்றித் தியானம் செய்தல் பொருளின் உண்மை நன்கு புலனாகிப் பதிவதற்கேயாம்.
 
0947: சக்கரத்துள்ளான் சிவன் :
சக்கரத்தினுள்ளே எழுத்துக்கள் முறையாக நின்றால்,  திருவைந்தெழுத்து பூதங்களை முறையாக நடத்தும்."ந" மண்ணைத் தூண்டி இயக்கும்;  "ம" நீரைத் தூண்டி இயக்கும்; "சி" தீயைத் தூண்டி இயக்கும்; "வ" காற்றைத் தூண்டி இயக்கும்.  "ய" வானைத் தூண்டி இயக்கும்.
 
0948: அமுதத்தை அளிப்பான் நந்தி :
சிதாகாயப் பெருவெளியில் திகழும் நாதமயமான சக்கரம் உலகம் முழுவதும் பரவுகின்ற இயல்புடையது.  அங்ஙனம் "சித்" விளங்கும் திருவம்பலத்தையே இடமாகக் கொண்டு மறைந்துள்ள உலகத் தலைவனான சிவபெருமான், ஒரு கன்றானது பசுவின் மடியில் ஊட்டியபோது அப்பசுவானது பாலை அளிப்பதைப்
போல் - குருமண்டலத்தில் விளங்கி  சிரசின் மீது நின்று சிவத்தின் பயனான அமுதத்தை அளித்தருளுவான்.
 
0949: சக்கரத்தில் இறைவன் நடமிடுதல் :
திருவம்பலச்சக்கரத்தில் பிரமன், திருமல்ல், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் என்னும் ஐவரும் உள்ளனர்.  'நமசிவாய' எனும் திருவைந்தெழுத்தும் அதில் உள்ளது. இறைவனின் திருக்கூத்தும் இந்தசக்கரத்தில் இருந்தே நடிக்கப்படுகிறது.
 
0950: விந்து நாதம் உண்டாகும் :
சிதாகாயப் பெருவெளியில் சந்திரகலையானது உள்ளது.  அந்தப் பெருவெளியில் உள்ள சகஸ்ரதளத்தில் உகாரத்தால் வளைக்கப்பட்ட அக்கினிக்கலை உள்ளது.  மூடப்பட்டிருக்கும் சகசிரதளத்தை நெகிழச் செய்து அசைக்கும்படி உள்ளது காலான கொம்பு.  இதனால் விந்து நாதம் உண்டாகும்.  அவற்றைத்
தெளிந்து பெறும்முறையில் சிவமந்திரச் சக்கரம் அமைந்துள்ளது.
 
0951: சதாசிவன் எழுந்தருள்வான் :
இரண்டு கண்களுக்கு இடையே புருவ நடுவிடத்தில் மூலாதாரத்தில் விளங்கும் குண்டலினி சத்தியை மூலவாயுவினால் மாற்றி ஆறு ஆதாரங்களையும் கடந்து சிவாக்கினியில் விளங்குபவனைத் தியானம் செய்யப் - பிரணவத் தலைவனான சதாசிவம் மிகவும் விரும்பி அவ்விடத்தே எழுந்தருள்வான்.
 
0952: உயிர்க்குற்றம் நீங்கும் :
உடலைக் கடந்து சென்றவரிடம் அகரமான சந்திரகலை விளங்கும்.  அச்சந்திரகலை விளங்கும் சிதாகாயப் பெருவெளியில் உரிய பொருளை அறிய, உயிர்களுக்கு உரிய குற்றமான இருளை மாற்றிய சிவந்த ஒளியான சிவம் தோன்றும்.
அது உயிர்க்குற்றத்தைப் போக்கிப் பொன் போல் ஒளிரச் செய்யும் குளிகையாகும்.  குளிகை பொன்னின் களிம்பை நீக்கிச் துலங்கச் செய்யும். அது போல் சிவனது சத்தி பதிய, சிவ ஒளி ஆன்மாவின் ஆணவ மலக் குற்றத்தை நீக்கித் தூய்மை அடையச் செய்யும்.
 
0953: தியானத்தால் உண்டாகும் பயனைக் கூற இயலாது :
அகரக்கலையான சந்திரன் இடக்கண்ணில் தோன்றிட, உகரக்கலையான சூரியகலை வலப்பக்கத்தில் இருந்து இடப்பக்கமாக மாறி, ஈசான திக்கில்  அ , உ, ம என்பவை பொருந்தினால் உகரத்தால் உணர்த்தப்படும் ஒளி கிட்டி அக்கினியால்என் உடலில் வழிபட்ட குருமண்டலப் பெருமையை எவ்வாறு இயம்ப முடியும்?
 
0954: பிறவி அறும் :
உலகியல் அறிவு-நீரில் எழுதிய எழுத்தைப் போன்று நிலைத்து நில்லாத இயல்பு உடையது.  சிதாகாயத்தில் திகழும் ஓர் எழுத்தைக் கண்டு அறிபவர் எவரும் இல்லை.  எவர் ஒருவர் இவ்வெழுத்தை அறிந்தாரோ, அவர், பிரமனால் தலையில் எழுதப்படும் எழுத்தை மீளவும் அடையமாட்டார்கள். (பிறவி அவர்களுக்கு ஏற்படுவதில்லை.)
 
0955: வீடு பேற்றை அளிப்பான் :
சுழுமுனையில் விளங்கும் சிவன் இடைகலை, பிங்கலையாய் உடலில் ஐம்பது எழுத்துக்களாய் விரிந்து திகழ்கின்றான்.  உயிரானது மயக்கத்தை அடைந்து சந்திரனைப் பற்றிய போது அந்த ஐம்பது எழுத்துக்களும் விளங்கி நின்றன.  சிரசின் மீது விளங்கும் சிவன் - மறையால் புகழ்ந்து கூறப்பட்ட பிரணவத்தை எழுப்பிச் சகஸ்ரதள நடுவில் நிறுத்தியவர்க்கு வீடுபேற்றை அளித்தான்.
 
0956: சத்தியும் சிவமும் அருளுதல் :
மணிபூரகத்தின் கீழ் உள்ள சுவாதிட்டானச் சக்கரத்தில் நல்ல எழுத்தாகிய நகாரம் உள்ளது.  அந்த எழுத்தில் சத்தியும் சிவமும் சிறப்புடன் மகிழ்ந்திருப்பர்.  அந்த எழுத்தின் பயனைப் பாவிகள் அறியவில்லை. பிரமனாலும் அதை அறிய இயலாது.
 
0957: அம்ச மந்திரத்தின் தொன்மை :
பிரணவமே அம்சம்.  மூலாதாரத்தில் உள்ள முக்கோணத்தில் அம்சம் உள்ளது.அம்சம் என்பது அரன் விளங்குகின்ற மந்திரம்  அது சூரியகலை சந்திரகலையாக விளங்கியது.   தனித் தனியாய் உள்ள  சூரியகலை, சந்திரக்கலைகள் ஒன்றான போது உடல் காரியம் முடிந்துவிடும்.   இதை எவரும் அறியவில்லை. அம்ச மந்திரத்தை அறிந்தவர் அது உடம்பினது தோற்றத்துக்கு முன்பே தோன்றியது
என்பதை உணர்வர்.
 
0958: உண்மையினின்று தவறியவர் :
பிரசாத கலையான சந்திரக்கலை உடம்பில் பொருந்திய  மூலாதாரத்தினின்று தோன்றுவதாகும்.  அ•து உன்னிடம் உள்ள தீயால் தோன்றுவது.    உள்ளே உள்ள சூரிய, சந்திரக்கலைகளைச் சேர்த்து வழிபட அறியாதவர் – அந்தியும் சந்தியும் சந்தியா வந்தனம் செய்து அகச் சூரியசந்திரர் சேரும் நேரத்தை அறிப
வர் அல்லர். அவர்கள் புறத்தே காணப்படும் சூரிய சந்திரர்களை வழிபடுபவர்கள்; உண்மை தவறியவர்கள்;  அவர்களது செயல் வெறும் ஆரவாரமே.
 
0959: அம்சம் ஐம்பொறிகளை இயக்கும் :
அம்ச மந்திரம் உபாசனையால் உடலுக்குள் எங்கும் செல்லும் ஆற்றல் கொண்டது.  இது மூலாதாரத்தில் தொடங்கி எல்லா ஆதாரங்களையும் ஊடுருவிச் செல்லும் உயிர்த்தன்மை கொண்டது.  இ•து ஒளி மயமாய் விளங்குவதால் போவதும்செய்யாது.  வருவதும் செய்யாது.  ஒளியை நினத்து நெகிழும் மனத்தரானால்
உயிரில் இது பொருந்தி ஐம்பொறிகளான யானைகளை நடத்தும் அங்குசமாக
விளங்கும்.
 
0960: பிரணவம் சிறந்து விளங்கும் :
கண்ணுக்குப் புலப்படாத பரவெளியில் தோன்றுவது நாதம்.  அவ்வாறு தோன்றியஒலியில் விளங்குவது ஒளியான விந்து.  ஆன்மாவான 'ய'வைச் சிகாரமான இருகண் பார்வைக்கும் நடுவாய்க் கொண்டு தியானிக்கப் பிரணவம் சிறப்புற்று விளங்கும்.  புருவத்தின் நடுவில் இரண்டு கண்களுக்கு இடையில் தியானம் செய்யின் ஹம்சமந்திரம் தோன்றும்.
 
0961: பிரணவம் வேள்விப் பொருள் :
சிரசில் வடக்குத் திக்கான இடப்பக்கத்து மூளையில் ஒளியும் ஒலியும் பொருந்துமானால் பரமாகாயத்தில் ஒளி பெருகும். அங்கு ஈசானத் திசையில் இயற்கையாக ஒலித்துக் கொண்டிருக்கும் பிரணவம் வேள்விப் பொருள் ஆகும்.
 
0962: பிரணவத்தால் உயிரின் விளக்கத்தைக் காணலாம் :
"ஓம்நமசிவய"  என்ற ஆறு எழுத்து மந்திரத்தை ஓதும் அறிவுடையவர்கள் இதனால் அமைய வேண்டிய நிலையினை அறியாது,  திருவைந்தெழுத்தோடு ஓர் எழுத்தான பிரணவத்தைத் ஓதி உணரமாட்டார்கள்.  பிரணவத்தோடு வேறு எழுத்துச் சேர்க்காமலேயே பிரணவ வித்தையை அறிவார்க்குப் பிரணவத்
தாலேயே உயிரின் விளக்கத்தைக் காணலாம்.
ஓம் எனும் பிரணவத்தை மௌனமாய் நினைக்க உயிர் விளக்கம் பெறலாம்.
 
0963: அகரத்துடன் உகரத்தைச் சேர்த்து அறிதல் வேண்டும் :
எல்லா எழுத்துக்களும் வாய் திறத்தலால் பிறக்கின்றன.  அவ்வாறு பிறக்கும் போது அகரத்துடன் (திருமூலர் காலத்தில்) உயிர் எழுத்துக்கள் பதினைந்தும் மெய்யெழுத்துக்கள் முப்பத்தைந்தும்  அவற்றுடன் கூட, எழுத்துக்கள் ஐம்பத்தொன்றாகும்.  சோதியை உண்டாக்கும் அகரக் கலையில் மற்ற எழுத்துக்களும் நுட்பமாய் இடம் பெற்றுள்ளன.  நாத எழுத்தான 'உ'வை அதனுடன் சேர்த்து அறிந்து கொள்வீராக.
 
0964: எழுத்துக்கள் சத்தியின் வடிவு :
அகரமான பிந்து விரிந்தும் சுழன்றும் வான்மண்டலத்தில் தொடர்பை உண்டாக்க, இங்ஙனம் விரிந்த பந்தத்தைத் தரும் குண்டலினி அகரம் முதலாக உன்மனி வரை பதினாறு கலைகளாய் விளங்கினாள்.  அவளே கழுத்து, கை, கால், உடம்பாய் ஆனாள்.  முடிவற்ற ஐம்பத்தோர் எழுத்துக்களாகவும் ஆனாள்.
 
0965: சிவ சொரூபம் பெறுபவர் :
பிரணவம் நீங்கிய ஐம்பது எழுத்துக்களாலேயே வேதங்களும் ஆகமங்களும் அமைந்துள்ளன..  அந்த ஐம்பது எழுத்துக்களால் அமைந்த வேதங்களும் ஆகமங்களும் தெரிவிப்பது பிரணவமே தான் என்று அறிந்த பின்பு, வேதங்களையும் ஆகமங்களையும் கடந்து அஞ்செழுத்துப் பிரணவமான 'நமசிவய'த்தை
அறிந்து சிவ சொரூபம் அடைவர்.
 
0966: ஐந்தெழுத்து வடிவமாய் விளங்குதல் :
"நமசிவாய" என்ற ஐந்தெழுத்துக்கள் முறையே மண், விண், நீர், தீ, காற்று என்னும் ஐந்து பூதங்களையும் தோற்றுவித்தன.  அருவமான உயிர்களுக்கு இந்த ஐம்பூதங்களுடன் பொருந்தி வாழ அவற்றுக்கு ஏற்ற யோனியில் படைப்பைப் படைத்தருளினான்.  பரந்த இந்த உலகை ஐந்து பூதமாய் இருந்து தாங்கினான்.
இத்தகைய ஐந்து எழுத்தாலே உயிர்களின் இடையிலும் திகழ்ந்து விளங்கினான்.
 
0967: இறைவன் அழைப்பான் :
 படைக்கப்படாதவனான இறைவனின் திருப்பெயரை மனம் சோர்வு இல்லாமல் ஓதுவார் இன்ப மயக்கத்திலிருந்து தெளிந்து எழலாம். தலைவனான சடையுடைய பெருமானின் அருளால் ஆன்மாக் களைச் சார்ந்துள்ள வினைகளும் அவற்றால் உண்டாகும் துன்பங்களும் நீங்கும்.  நீங்கப், பிரணவத் தொனியாய் "என்னுடனே வாருங்கள்" என அப்பெருமான் அழைப்பான்.
 
0968: யாவுமாய் நிற்பவன் :
சிவபெருமான், அனுபவிக்கும் ஒளிப்பொருளாயும், காலதத்துவம் கடந்த நித்தியப்பொருளாயும், இசை பொருந்திய வேதப் பொருளாயும், பாடலாகவும், விளங்குவான்.  வானில் உள்ள தேவர்கள் வணங்க, ஆராயுமிடத்துத் திருவைந்தெழுத்து வடிவமான நமசிவாய என்பதும் ஆகும்.
 
0969: காவலன் அவனே :
பரந்த உலகம் காட்சி தருவதும்,  கோயில்கள் விளங்குவதும்,  அறநெறியில் நீதி நிலை பெறுவதும் நமசிவாய என்ற ஐந்தெழுத்துப் பெருமையாலே ஆகும்.   அப்பெருமான் ஐம்பூதங்களிலும் விளங்கி அவற்றுக்குக் காவலாய் உள்ளான்.
 
0970: சிவமே பிரணவம் :
அகரமாகவும், அகரம் விளங்கும் வானமாகவும், அதற்கு மேலிருக்கும் நாதமாகவும், மகாரமாகவும், மகாரம் விளங்கும் நீராகவும், நகாரமாகவும், நகாரம் விளங்கும் நிலமாகவும், பெருமை மிக்க சிகாரமாயும், சிகாரம் விளங்கும் தீயாயும், உகாரமாயும், உயிரான யகாரமாயும் உள்ள ஒளிமிக்க சுடரான மெய்யான சிவமே பிரணவம் ஆகும்.
 
0971: சத்தியே ஆதாரம் :
திருவந்தெழுத்தில் நாலாம் எழுத்து 'வ'கரம்.  'வ'காரம் சத்தி மயம். சத்தியின் மாயையிலிருந்து உலகம் தோன்றி சத்தியின் ஆணையின்படி வழி நடக்கும்.உலகம் தோன்றிய வண்ணமே மாயையுள் ஒடுங்கும். மாயை சத்தியுள் ஒடுங்கும்.நாலாம் எழுத்தான 'வ' வை முதலாகக் கொண்டு 'சிவயநம' என ஓத வல்லவர்கள்நல்ல நெறியில் ஏகும் செல்வர் ஆவர்.
 
0972: சிவத்துக்கு அடிமை ஆயின் ஞானம் கிட்டும் :
பிரணவம் என்ற மந்திரத்தைப் பற்றுங்கள்.    சிவனுக்கு அடிமை என்றதை ஆராய்ந்து தெளியுங்கள்.   அப்போது சத்தி ஆன்மாவான நமது உள்ளத்தை விரும்பிப் பொருந்துவாள். அங்கேயே அமர்வாள்.  உலகப் பற்றை நீக்குவாள். தெளிந்தஞானம் கைகூடச் செய்வாள்.  அதனால் மற்றப் பிதற்றல்களை ஒழித்து விடலாம்.
 
0973: சத்தி உடலில்  நிலவுவாள் :
அடியார்கள் உயிர் வாழத் தானியத்தில் பொருந்தி அன்னமயமாகச் செய்ததை ஓமகுண்டமான வயிற்றுத்தீயில் ஆகுதி பண்ணுகின்ற சத்தியின் நாமமான 'நமசிவஎன்று இருப்பார்க்குச் செயலைத் தூண்டும் குண்டலினி சத்தி விளங்குவாள்.
 
0974: அகத்தும் புறத்தும் உள்ளான் :
நல்வினையால் கிடைத்த பரிசே மேலான 'சிவாயநம' என்ற ஐந்தெழுத்தாம்.
உயிர்களின் விருப்புக்கு ஏற்றவாறு இரவு பகலாக, உயிர்களின் அகத்து இடம் கொண்டு நடிப்பவன் சிவன்.  அவனே புறத்தில் விண், மண், நீர், தீ, காற்று, சூரியன், சந்திரன், ஒளி ஆகிய எட்டுப் பொருளாகவும்  விளங்குகின்றான்.
 
0975: பிரணவமே ஐந்தெழுத்து :
பிரணவம் 'அ' உயிராயும், 'உ' பரமாயும், 'ம' மலமாயும் இவ்வாறு மூன்று பதங்களில் வரும்.  'சி' சிவமாய், 'வ' வடிவுடை சத்தியாய், 'ய' உயிராயும் சொல்லலும் ஆகும்.  அ,உ,ம = பிரணவம்; வியட்டிப் பிரணவம்.  ஓம்=சமட்டிப் பிரணவம்.
 
0976: அக்கினிக் கலைக்குரியவன் ஆதல் ":
இரண்டு கண்களின் இடையே 'ந'காரம் நெற்றியிலும், 'ம'காரம் கழுத்திலுமாய் அசபை மந்திரத்தை உள்வாசம் வெளிசுவாசத்தில் பொருந்தித் தியானித்துப் பிரணவத் தலைவனைச் சுழுமுனையில் விளங்கும்படி செய்க.  அப்போது அக்கினிக்கலைக்குரியவன் உள்ளத்தை விட்டு நீங்கான். 
 
0977: புலன்களை அடக்கவேண்டும் :
உடல் என்ற காட்டுக்குள் ஐம்பொறிகளாகிய ஐந்து யானைகள் வாழ்கின்றன. 
அத்தகைய யானைகளை அடக்க ஐந்தெழுத்தான 'நமசிவாய' என்பது அங்குசம் ஆகும்.  அந்த ஐந்தையும் எழுத்து ஐந்தைக் கொண்டு ஒரு சேர அடக்க வல்லவர்க்கு ஐந்துக்கும் முதலான ஆன்மாவிடம் புக இயலும்.
        எழுத்து                  பொறிகள்                      தன்மாத்திரை
                                  காது                             சப்தம் - ஓசை
            வா                    மூக்கு                            பரிசம் - நாற்றம்
            சி                      கண்                              உருவம் - ஒளி
                                  நாக்கு                           ரசம் - சுவை
                                  மெய்                             கந்த - ஊறு
 
0978: புற வழிபாடு வேண்டா :
நிவிருத்தி முதலான ஐந்து கலைகளில் மேதை முதலிய சந்திரக்கலை பதினாறில், கொப்பூழில் உள்ள 'ம'காரம் பிருதுவி மயமாய்க் குறிப்பகுதியில் காமக்கழிவு செய்வதை மாற்றி 'ந'வைப் புருவத்தின் நடுவில் பொருந்துமாறு செய்து அதன் மீது விளங்கும் ஒளியுடன் சேர்க்க அறிந்தவர்கட்கு உடலால் செய்ய வேண்டிய செயல் வேண்டியதில்லை.    அதாவது மூலாதாரத்தில் உள்ள கனலை விந்து நாதங்களுடன் சேர்க்கத் தெரிந்தவர்க்குப் புற வழிபாடு என்பது தேவையற்றது.
 
0979: வீடுபேற்றைத் தருபவை :
'சி' என்கின்ற சிவத்துடனும் 'வா' என்கின்ற சத்தியுடனும் உயிர் பொருந்தியிருப்பதே அரிய சிவயோகம்;  அரிய ஞானம்.  மல கன்மத்தினின்று நீங்கித் தெளிவு பெற்ற உயிர்கள் சிவசத்தியுடன் திருவருளில் தங்கிச் சிவமே ஆவது வீடுபேறு ஆகும்.
 
0980: சிவத்திடம் அடைக்கலம் புகுவதே சிவத்தை அடையும் வழி :
நான் சொல்வது முழுவதும் உண்மையே அல்லாது சிறிதும் பொய்யில்லை.  மிக அதிகமான இன்பத்தைத் தரும் திருவைந்தெழுத்தின் இயல்பை அறிந்தவர் மனத்தை இடமாகக் கொண்டு பரமும் அபரமும் ஆன சதாசிவர் விளங்குவார்.  அவரது உடலுக்கு அழிவு இல்லை.    சிவத்திடம் அடைக்கலம் புகுவதே
சிவத்தை அடையும் வழி.
 
0981: சிவனைத் தரிசிக்கலாம் :
சந்திரக்கலை அறிந்து 'சிவாய' என்பதைத் தெளிந்து மனத்தில் நினைக்க, அந்தச் சந்திரகலையால் சிவனின் வடிவைப் பெறுவர்.  சிவகலையையும் 'சிவாய' என்ற மந்திரப் பொருளையும் உணர்ந்து தெளிவு பெற வல்லவர்கள் சிவவடிவாய்ச் சந்திரமண்டலத்தில் திகழ்வர். விந்து நாத வடிவங்களை அறிவதே பிரணவத்தை அறிவதாகும்.
 
0982: சிவன் வெளிப்பட்டு நிற்பான் :
அக்கினிக்கலையில் விளங்கும் சிவன், நாதக்கலையில் விளங்கும் சிவன், அசபையாக பிரணவத்தில் விளங்கும் சிவன் ஆகிய எல்லாம் தலையின் உள்ளே பாயும் இடைகலை பிங்கலையின் விளவே ஆகும்.  பிரணவ ஓசையைக் கேட்டவற்குச் சிவன் வெளிப்பட்டுத் தோற்றம் தருவான்.
 
0983: சதாசிவம் வினையை முடிப்பார் :
நீவிர் விரும்பும் செயல்கள் நிறைவு பெற நமசிவாய மந்திரத்தை நாடுங்கள்.  அந்த முதல்வரான உருத்திரர் வலிய வினைகளைச் செய்து முடிப்பர். 'சி'காரத்தைத் தெளிய வல்லவர்கட்குச் சதாசிவரே நம் முதல்வனான உருத்திரனைத் தொழிற்படச் செய்வர்.
 
0984: தெளிவு பிறக்கும் :
நட்பால் சிவத்தைப் பொருந்திய போது உயிரானது பரமாக விளங்கும்.  சிவத்தை நட்பால் கொள்ள உடலை வருத்தும் தவங்கள் வேண்டாமையுடன் ஆன்மா சிவத்துடன் சார்ந்து பரமாகும் இயல்பை அடையும்.  சிவத்துடன் பொருந்தியுணர்பவர் அருளால் அந்தச் சிவமே தான் என்று தெளிவு உண்டாகும்.   உயிரானது தத்துவங்களோடு கூடிய நிலையில் ஆன்மா எனப்படும்.  தத்துவங்களை நீங்கிய நிலையில் உயிரானது பரம் என்று பெயரைப் பெறும்.
 
0985: குருவருளைப் பெறுவீர் :
இரு கண்களான சூரிய சந்திர கலைகளைச் சேர்த்துப் பார்க்கும் போது விளங்கும்சிவனான ஒளியை நம் தீயாக, நந்தியான உயிராக அங்கே இருக்கும் குரு மண்டலத்தில் கண்டால் தொழிற்படுத்தும் பிரமன் முதலான ஐவரும் அம்மண்டலத்தில் இன்பத்தை அடைவர்.  எனவே குருவைத் தேடி அவரது அருளைப் பெற்று அறிவீராக.
 
0986: தத்துவங்களும் ஆதாரங்களும் அடங்குதல் :
எட்டு எனப்படும் அகாரமும் இரண்டு எனப்படும் உகாரமும் இன்பத்தை அளிக்கும் நெறி என்பதை மூடர்கள் அறியவில்லை.  அகாரமும் உகாரமும் மூலாதாரம் முதற்கொண்டு ஆறு ஆதாரங்களில்
விளங்கும் மாயையும் அதன் மேல் உள்ள சுத்த வித்தை, சாதாக்கியம், மகேசுரம், சதாசிவம் என்னும் நான்கு தத்துவங்களையும் ஒன்றாய்ச் சேர்த்தால் வரும் பத்து எண்ணிக்கையால் உணர்த்தப்படும் உயிர்
நிலையாகும்.
 
0987: சக்கரத்தை அமைத்து மந்திரத்தைச் செபிக்க :
எட்டுக் கோடுகளின் மேல் எட்டுக் கோடுகளை வரைந்தால் நாற்பத்தொன்பது அறைகள் ஆகும்.  அதன் நடு அறையில் சிவனின் எழுத்தான 'சி' பொருத்துக. சுற்றிலும் உள்ள நாற்பத்தெட்டு அறைகளிலும் மற்ற எழுத்துக்களை அடைத்து நிரப்பி பிறகு திருவைந்தெழுத்தை உச்சரிப்பாயாக.
 
0988: சக்கரம் அமைக்கும் முறை :
நிருதி முதலிய அட்டதிக்குப் பாலகர்கள், எட்டு பைரவர்கள் , நந்தி முதலான எட்டு சிவ கணங்கள் ஆகிய மூவகையினரும் வழிப்படுத்துபவர்கள்.
அட்டதிக்குப் பாலகர்கள் : 1.நிருதி, 2.வருணன், 3.வாயு, 4.குபேரன், 5.ஈசானன்,6.இந்திரன், 7.அக்கினி, 8.இயமன்.
எட்டு பைரவர்கள் : 1.அசிதாங்க பைரவர், 2.குரு பைரவர், 3.சண்ட பைரவர், 4.குரோத பைரவர், 5.உன்மத்த பைரவர், 6.கபால பைரவர், 7.பீடண பைரவர்,
8.சம்மார பைரவர்.
எட்டு சிவகணங்கள்: 1.நந்தி, 2.மகா காளர், 3.பிருங்கி, 4. விநாயகர், 5.விருஷபர் 6.ஸ்கந்தர், 7.தேவி, 8.சண்டிகேசுரர்.
இந்த இருபத்து நான்கு பேர்களை வெளிச்சுற்றுக் கட்டங்களில் அமைக்க வேண்டும்.  உள்சுற்றுப் பதினாறு கட்டங்களிலும் அ'கரம், முதல் உயிர் எழுத்துக்களை அமைக்க வேண்டும்.  விந்து நாத எழுத்துக்களை அதன் உள்கட்டங்கள் எட்டிலும் அமைக்க வேண்டும். 
இவையனைத்தும் அமைந்த சக்கரம் சிவசக்கரம் ஆகும்.
 
0989: இறையருளைப் பேசுவேன் :
ஆறு ஆதாரங்களும் ஒன்றுபட்டுப் பராபரம் அமைவது பெரிய தவம் ஆக்கும்.  இதை அறிந்தவர் தம்மைச் சிவத்திடம் அடிமை எனக் கண்டு தற்போதத்தைக் கைவிட்டனர்.  அவருடன் கூடி எள்ளனவேனும் செயலிலும் இறைவனின் அருளைப் பற்றியே பேசுவேன்.  வேறொன்றை அறியேன்.
 
0990: சங்கரன் என்ற பெயர் பெறல் :
சிவபெருமான் மூவராகவும் ஐவராகவும் திருச்சிற்றம்பலமான அவையிலே விளங்குவார்.  அந்தச் சபையானது ஆறு ஆதாரங்களும் மகேசுர சதாசிவம் பொருந்தியதாய்க் கவிழ்ந்துள்ள சகசிரதளம் ஒன்றும் ஆகும்.  அவற்றில் விந்தும் நாதமும் விளங்க அந்த நிலையிலே அதி சங்கரன் என்று பெயர் பெறும்.
 
0991: துணைச் சக்கரம் :
விந்து மயமான சந்திரக்கலையைப் பிருதிவியிலிருந்து கணக்கிட்டு விருப்பமுள்ள சந்திரக்கலைகள் பதினாறையும் நிலைப்படுத்திக் கொண்டு பின்பு மறுபகுதியான பன்னிரண்டு கலைகளில் விளங்கும் சூரியனைச் சேர்க்கப் பத்தாம் அக்கினிகலைகள் அமையும்.  அகாரத்தையும் உகாரத்தையும் சேர்ப்பது பிரமத்தை அறியும் செயல். அகர உகரம் சேர்ப்பதால் விளங்கும் ஒளியில் இறைவனை அறிந்து திருவைந்தெழுத்தை ஓதுக.
 
0992: ஆண்டான் அடிமை உறவு :
சகஸ்ரதளத்தில் இறைவனைக் கண்டு எழுந்தேன்.  நான் அகத்துள் சிவத்துடன் ஒன்றித்து நின்றபோது உடம்பை விட்டு அழியாத சிவசக்கரத்தின் வழியே போய்எனக்கும் சிவபெருமானுக்கும் உள்ள அடிமை உறவு கெடாமல் 'சிவாயநம' என்று ஓதிக் கொண்டிருந்தேன்.
 
0993: சிவத்துடன் கலந்து நிற்பர் :
நல்வினைப் பேற்றால் வான் உலகம் சென்றவர் அங்கும் பூவால் சிவத்தை அர்ச் சித்து, சிவபெருமானின் மந்திரத்தைக் கணித்து நிற்பர்.  நன்றியுடன் சிவனுக்கு அடிமை என்று பொருந்துவர்.  இறைவனின் திருப்பெயரைக் கண் போல் கணித்துச் சிவத்துடன் கலந்து நிற்பர்.
 
0994: பிறவி அறப்பெறுவர் :
"சிவாயநமஓம்" எனும் ஆறு எழுத்துக்களும் ஆறு எல்லைகளை உடையன.  சமயங்கள் எல்லாம் சிறப்பாக பேசுபவை இருபத்து நான்கு தத்துவங்களேயாகும்.  பிரணவமான "ஓம்" எனும் ஓர் எழுத்து - நேரே சீவனை விளக்கி சீவன் உடலில் உள்ளபோதே சிவத்துடன் சேர்த்து வைக்கும்.  பிரணவ யோக நெறியை அறிந்து வடிவத்தை மாற்ற அறிந்தவர் பிறவி அறப்பெற்றவர் ஆவார்.
 
0995: நாதாந்த அறிவாக விளங்குபவர் :
எட்டு அறைகள் வெளியிலும் ஓர் அறை உள்ளேயும் இருக்க அமைத்துப் பொருந்திய சிகாரம் என்ற
அக்கினியை எட்டு அறைகளிலும் சுரவடிவாய்ப் பரவியுள்ளது என்று கருதி, பின்பு ஓம் எனும் பிரணவத்தால் சூழ இட்டு, இந்த எல்லைக்கு உட்பட்டு நினைக்கும் உயிர்கட்கு உமையின் கணவன் வெளிப்பட்டருள்வான்.
 
0996: சத்தியின் தலைவன் தலையில் விளங்குவான் :
நமசிவாய என்ற தூல திருவைந்துடன் தியானம் செய்து 'அ' முதலாகிய எட்டு அறைகளை அறிந்து அவற்றினிடையே பொருத்தி உகரத்தை முதலாகக் கொண்டு உணர்பவரின் உச்சியில் 'உ'கரமாகிய சத்தியின் தலைவன் பொருந்தி நிற்பான்.
 
0997: தம்பனம்  (கட்டுதல்)  பகைவரை செயல் படாமல் இருக்கச் செய்தல் :
0998: மோகனம் (பிறரை மயங்கச் செய்தல்)
0999: உச்சாடனம் (விரட்டல், ஓட்டிவிடுதல்
1000: மாரணம் (மந்திரத்தால் இறக்குமாறு செய்தல்)
1001: வசியம் (கவர்ச்சி)
1002: ஆகர்ஷணம் (அழைப்பு)
1003: அருச்சனை. (பூசை;  தேவர்க்குரிய ஆராதனை)
 
1004: நறுமணப் பொருள்கள்.
புனுகு, கத்தூரி முதலிய சாந்துடன், சந்தனம் மணம் கமழும் குங்குமம், பச்சைக் கற்பூரம், வயிரம் வாய்க்கப் பெற்ற அகில் என்னும் இவற்றுடன் அளவாய்ப் பனிநீர் சேர்த்துக் குழைத்து அதைப் பூச வேண்டிய இடங்களில் முறையாய்ப் பூசி அன்புடன் வழிபடுவாயாக!
 
1005: அமுதம் படைத்துத் தூப தீபம் காட்டல் முதலியவை :
வணங்குபவன் தன்னைத் தூய்மை செய்து கொண்டு இறையுணர்வு ஏற்படுத்திக் கொண்டு அன்போடு அமுதத்தைப் படைத்துப் பொன்னொளி தரும் விளக்கேற்றி வைத்துத் திக்குப் பந்தனம் செய்து, தூபதீபம் காட்டி வணங்குபவர் இம்மைபேறும் மறுமைப்பேறான வீடு பேறும் எய்துவர்.
 
1006: எல்லாப் பேறும் வந்து சேரும் :
மேலே சொன்னபடி வழிபட்டால் எல்லா பேறுகளும் தாமே வந்து சேரும். இங்ஙனம் வழிபாடு செய்தால் இந்திரச் செல்வத்தைப் பெறலாம்.  எண்சித்திகளும் உண்டாகும்.  இதனால் மறுமையில் வீடு பேறும் வந்து வாய்க்கும்.
 
1007: மனம் அடங்கப் பெறுவர் :
இப்படி வழிபடுபவர் தானே வந்து அணையும் அயலார் மனைவியையும் விரும்பாதவராய், ஐம்பொறிகளை அடக்கி வென்றவர் ஆவார்கள்.  மனம் அடங்கக் காற்றும் அடங்கும்.  இவர் படைத்த நிவேதனம், இடைவிடா யோகம், ஐந்து உறுப்புக்களும் நிலத்தில் பொருந்த செய்த வணக்கம், பொருந்தும் செபம் முதலியவை நிலை பெற்றுத் திகழும்.
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free